அங்குசம் பார்வையில் ‘நிறம்’
தயாரிப்பு : பிந்து மாதவி, டைரக்டர் : பலராம் கிருஷ்ணா, ஆர்ட்டிஸ்ட் : முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், சுரேகா வாணி, நிதின் சத்யா, திருநாவுக்கரசு, கஜராஜ், ஸ்ரீஜித் ரவி, சுரேஷ் சக்கரவர்த்தி, ஒளிப்பதிவு : சாண்டோனியோ டெர்ஜியோ, இசை : டி.இமான், எடிட்டிங் : சாபு ஜோசப், பி.ஆர்.ஓ. : சதீஷ் & சிவா [எய்ம்].
டாக்டரான தனது மகள் ப்ரீத்தி அஸ்ரானி, நள்ளிரவு தாண்டியும் வீட்டுக்கு வராததால், அவரைத் தேடி பல்வேறு இடங்களில் அலைகிறார் திருநாவுக்கரசு. இன்னொரு பக்கம் தனியார் மருத்துவமனையின் சேர்மனான சுரேகா வாணி, தனது மகள் தான்யா ஹோப்பைக் காணவில்லை என இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித்ரவியிடம் சொல்கிறார். கூடவே தனது மருத்துவமனையின் இன்னொரு டாக்டரான நிதின் சத்யாவின் உதவியை நாடுகிறார். இதற்கிடையில் பாரில் சரக்கடித்துவிட்டு கும்மாளம் போடும் முகேன்ராவை அள்ளிக் கொண்டு வருகிறார் ஸ்ரீஜித் ரவி. ப்ரீத்தி அஸ்ரானியும் தான்யா ஹோப்பும் என்னவானர்கள்? முகேன் ராவுக்கும் இந்த கடத்தல் சம்பவங்களுக்கும் என்ன கனெக்ஷன்? இதான் இந்த நிறம் சொல்லும் சேதி.
படத்தின் ஆரம்பத்தில் ப்ரீத்தி அஸ்ரானியை திருநாவுக்கரசு தேடும் சீன்களை சில கட்ஸ்களுடன் காண்பித்துவிட்டு, இடைவேளைக்குப் பிறகு அதை டீடெய்லாக சொல்லி, அதனுடன் மருத்துவ உலகில் இருக்கும் போதை மாஃபியாக்களுடன் முடிச்சுப் போட்டு, சுவாரஸ்யமாக திரைக்கதையைக் கொண்டு போயுள்ளார் டைரக்டர் பலராம் கிருஷ்ணா. அதே போல் க்ளைமாக்ஸில் என்.ஐ.ஏ.அதிகாரிகள் சுரேகாவாணியிடம் விசாரிக்கும் முறை, அதை வைத்து நிதின் சத்யாவை தூக்கும் டெக்னிக் இதெல்லாம் ஃப்ரெஷ்ஷாக இருக்கு.
ப்ரீத்தி அஸ்ரானி நடிப்பதற்கு இதில் ஸ்பேஸ் கொஞ்சம் கம்மி தான் என்றாலும் நிதின் சத்யாவின் கேடித்தனங்களை செல்போனில் வீடியோ எடுத்துவிட்டு, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு டூவீலரில் ஓடும் காட்சியிலும் என்.ஐ.ஏ.அதிகாரிகள் முன்பு வீடியோ ஆதாரத்தைக் காட்டும் காட்சியிலும் நல்லாவே எக்ஸ்பிரஷன் கொடுத்திருக்கார் ப்ரீத்தி அஸ்ரானி. இவரின் லவ்வரான முகேன் ராவுக்கு இடைவேளைக்குப் பிறகு தான் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஸ்டண்ட் சீனில் நன்றாகவே வித்தை காட்டியிருக்கார். மெடிக்கல் & போதை மாஃபியா கேரக்டருக்கு நிதின் சத்யா கரெக்டாத் தான் மேட்ச் ஆகியிருக்கார். அரசியல்வாதி கஜராஜ் கேரக்டர் தேவையில்லாத ஆணின்னு நினைச்சோம். ஆனால் க்ளைமாக்ஸில் நிதின் சத்யாவுடன் முடிச்சுப் போட்டு நல்ல ஆணி தான்னு நம்ப வச்சுட்டார் டைரக்டர்.
சுரேகா வாணியும் அவரது மகளாக வரும் தான்யா ஹோப்பும் படத்தின் மெயின் லைனுக்கு உதவியிருக்கிறார்கள். டி.இமானின் பேக்ரவுண்ட் ஸ்கோர், இரவு நேரக் காட்சிகளில் கேமராமேன் சாண்டோனியோவின் ஒளிப்பதிவு இதெல்லாம் இந்த நிறம் ஜொலிக்க உதவியுள்ளன.
‘நிறம்’ கலர் கொஞ்சம் ஃபேடாக இருந்தாலும் தரம்.
அங்குசம் பார்வையில் ‘நிறம்’ 45/100
— ஜென்ஸ்






Comments are closed, but trackbacks and pingbacks are open.