Thursday, November 26, 2026 | 1:56 PM IST

படுக்கையறை ரகசியங்கள்… இன்ஸ்டாவில் பஞ்சாயத்து தம்பதிகள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

கண்ணால் காண்பது பொய் என்ற பழமொழிக்கு அடுத்த நிரூபணம் ரெடி ஆயிடுச்சு.

இன்ஸ்டால நல்ல பிரபலமான ஜோடி ஒருத்தர ஒருத்தர் சேத்த வாரி அடிச்சுட்டு இருக்காங்க.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

சமூகம் வலை தளங்களில் பாட்டு பாடுறது டான்ஸ் ஆடுறது லாம் போய்  இப்போ லாம் vlog னு ஆரம்பிச்சு இப்போ சொந்தமா யோசிச்சு அர்த்தமுள்ள சிந்திக்க வைக்கிற அதே சமயம் சிரிக்க வைக்கிற கான்செப்ட் வச்சு நெறைய ஜோடிகள் வீடியோ போடறாங்க.

இதுல பிரபலமான ஜோடி தான் சுபா வரதராஜ் மற்றும் வேதமூர்த்தி தம்பதி.

இவங்களோட couple வீடியோஸ் நெறைய ரசிக்கும் படியா இருக்கும்.

கடந்த சில மாதங்களா ரெண்டு பேரும் தனித்தனியே வீடியோ போட்டுட்டு இருந்தாங்க.

Followers சும்மா விடுவார்களா என்ன ஏது னு கேக்க ஆரம்பிச்சாங்க.

எல்லார் வீட்லயும் இருக்குற மாறி சின்ன மனஸ்தாபம் தான் சீக்கிரம் சரியா ஆயிடும் னு சொல்லி இருந்தாரு.

நேத்து திடீர்னு அந்த அண்ணா 10 part களாக வீடியோ போட்டு புலம்பி இருந்தாங்க.

சரி எப்படியும் அவங்க wife reply வீடியோ எதுவும் வருதான்னு பாத்தா அவங்க ஒரு 4 வீடியோ போட்ருந்தாங்க.

அந்த பொண்ணு சினிமா வாய்ப்புக்காக ரொம்ப கவர்ச்சியான வீடியோஸ் போடறதாகவும், ஏற்கனவே ஒரு ஆள் கூட பழகி பிரச்னை ஆனதாகவும் அவரு சொல்லறாரு.

சரியா இவ்ளோ நாள் விட்டுட்டு இப்போ ஏன் இதை சொல்றாருன்னு பாத்தா தன்னோட பொண்ண பாக்க அனுமதிக்க மாட்றாங்க னு அழுது ஒரு மாறி depression ஓட உச்சதுல இருக்குற மாறி பேசி இருந்தாரு.

அடுத்த கொஞ்ச நேரத்துல அந்த சுபா அக்கா வீடியோ இறக்குச்சு பாருங்க அது இன்னும் ஷாக்.

அவர விட வசதியில கொறஞ்ச தன்னை ஆரம்பத்துல இருந்தே வார்த்தைகளால் கொடும படுத்தினதாகவும், ஏற்கனவே கல்யாணம் ஆனத மறச்சு தன்னை கல்யாணம் செஞ்சதாகவும் அவங்க சொல்றாங்க.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதோட தினமும் தன்னை செ–ஸ் டார்ச்சர் செய்ததாகவும் ஆரம்பம் முதலே சம்பாரிச்ச பணத்தை எல்லாம் அவரே வாங்கிகிட்டதாகவும் சொல்லி இருந்தாங்க.

யாரு சொல்றது உண்மை னு புரியல.

ரெண்டு பேருமே தன்னோட மகளுக்காக மகளுக்காக னு பேசி வீடியோ போட்ருக்காங்க.

அவரு அந்த அக்காவை வேற ஒருத்தர் கூட வச்சு கேரக்டர் அஹ் டேமேஜ் பண்ணி இருக்காரு.

இவங்க அந்த ஆளோட நடத்தைய வச்சே அவர டேமேஜ் பண்ணி இருக்காங்க.

இதுல நீங்க ரெண்டு பேரும் பாசம் வச்சதா சொல்ற அந்த குழந்தைய பத்தி யோசிச்ச மாறி தெரியல.

பிடிக்கலைன்னா பரஸ்பரம் பேசி ஒரு முடிவுக்கு வாங்க அத விட்டுட்டு இப்படி ஒருத்தர ஒருத்தர் அசிங்க படுத்திக்கலாமா.

உள்ளுக்குள் இவ்ளோ பிரச்சினைய வச்சுக்கிட்டு வெளிய எப்படி இவ்ளோ நடிக்க முடியும் அதோட மத்தவங்கள நம்ப வச்சு அதுல காசு சம்பாதிக்க ஒரு தைரியம் தான் வேணும்.

இப்போ போடற சண்டை கூட  அவங்களுக்கு பணம் தான்.

இதுல யாரு உண்மை யாரு பொய் ன்றதை தாண்டி ரெண்டு பேரும் அவங்களோட சுயமரியாதையை இழந்து நிக்கிறாங்க ன்றது தான் உண்மை.

Celebrity ஓஹ் இல்லை சாமானியனோ பிடிக்கலைன்னா பேசி சமாதானம் ஆகுங்க இல்லையா பேசி பிரிஞ்சு போங்க.

உங்கள நம்பி நீங்க உருவாக்குன குழந்தைகளை கஷ்ட படுத்தாதீங்க.

இத்தனை நாள்  ல ஒரு நாள் கூட உண்மையா வாழலையா என்ன.

நீங்க போடற வீடியோவை பாத்து யாரும் பஞ்சாயத்து பண்ண மாட்டாங்க னு தெரிஞ்சும் மாறி மாறி வீடியோ போடறது தீர்வுக்காக இல்ல, 100% அசிங்க படுத்த தான் னு எல்லாருக்கும் தெரியும்.

நீங்க போடற வீடியோஸ் உங்களையும் உங்க குடும்பத்தையும் போல பார்க்கிற எங்களுக்குள்ளும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் னு மறந்துடாதீங்க.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.