சிறைத்துறை வரலாற்றில் அதெல்லாம் பொற்காலம் !

ஜெயில் பரிதாபங்கள் - 12

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சிறைத்துறையில் ஏதேனும் விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் ஏற்படும் தருணத்தில் அவ்விவகாரம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க விசாரணை கமிஷன்கள் அமைக்கப்படுவது வழக்கமானதுதான். ஆனால், விசாரணை கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்த முன்வராத அரசுகள் எதற்காக அப்படி ஒரு கமிஷன்களை அமைக்க வேண்டும்? அந்த நேர பதட்டத்தை தணிப்பதற்கான கண்துடைப்பு நடவடிக்கையாக மட்டுமே அரசுகள் அணுகுகின்றனவா? என்ற கேள்வி எழுகிறது.

சிறைத்துறை வரலாற்றில்  இதுவரையில் நான்கு முக்கிய விசாரணை கமிஷன்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

முதலாவதாக, 1976 ல் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திமுகவை சேர்ந்த இருவர் சிறையில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் குறித்து நீதியரசர் மு. மு. இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்.

இரண்டாவது, பிரபல ஆட்டோ சங்கர் மற்றும் நால்வர் சென்னை மத்திய சிறையிலிருந்து கடந்த 28.08.1990 ல் தப்பி ஓடிய சம்பவத்தையொட்டி, அதே நீதியரசர் மு. மு. இஸ்மாயில்   தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்.

மூன்றாவது, அதே சென்னை மத்திய சிறையில், கடந்த 27-02- 1995  அன்று ஒன்பது விடுதலைப் புலிகள் தப்பியோடிய சம்பவத்திற்காக நீதியரசர் ராமானுஜம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்.

நான்காவது, 17- 11- 1999 ல் நடந்த சிறைகலவரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் டேவிட் கிருஸ்டியன் தலைமையிலான விசாரணை கமிஷன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஜெயில் பரிதாபங்கள்இவை அனைத்தும்  பழைய சென்னை மத்திய சிறையில் அதாவது, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், தற்போதைய ராஜிவ்காந்தி பொது மருத்துவமனை அருகில் உள்ள பழைய சிறையில் நடைபெற்ற சம்பவங்களுக்காக அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன்கள்.

மேற்கண்ட விசாரணை கமிஷன்களில் நீதியசர்களால் பரிந்துரை செய்யப்பட்ட  எந்த ஒரு ஆலோசணைகளும் ஆட்சி செய்த கட்சிகளால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆக்கப்பூர்வ யோசனைகள் செயல்படுத்தப்படவில்லை என்பதே யதார்த்தமான உண்மை.

இதில் விதிவிலக்காக, ஆட்டோ சங்கர், மற்றும் நால்வர் தப்பியோடிய சம்பவம், அதற்கான காரணம்,  மீண்டும் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமலிருக்க நீதியரசர் மு. மு. இஸ்மாயில் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தும் விதமாக 1995 ல் அப்போதைய முதல்வர்  ஜெயலலிதா  கொண்டுவந்த திட்டம்தான் சிறைகாவலர்களுக்கான எட்டுமணிநேர பணி.  அதற்கான ஆணை  24.02 .1995 இல் பிறப்பிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், அது அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

முடக்கப்பட்ட அரசாணையை உயிர்ப்பிக்க, தமிழ்நாடு நிர்வாக தீர்ப்பாயத்தில் அப்போது பணியிலிருந்த தலைமை சிறைக்காவலர் கருணாமூர்த்தி 1996-இல் வழக்கு தொடுத்திருந்தார். வழக்கை பென் வால்டர் என்ற வழக்கறிஞர் ஏற்று நடத்தினார்.

“வழக்கு விசாரணை கட்டத்தில் இருந்த நிலையில், அப்போது  சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கருணாகரன், ஹேமச்சந்திரன், நன்மாறன், பாலபாரதி, திருத்துறைப்பூண்டி பழனிச்சாமி, பா.மக.வின் ஜி.கே.மணி உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பினர். மேலும், தோழர்கள் மதுரை நல்லதம்பி, மறைந்த பொன்னம்பலம், திருச்செந்தூர் சேகர், மந்திரமூர்த்தி, பொன்னுசாமி, வேலூர் காசிபாண்டியன், ராஜேந்திரன்  போன்றோர்கள் பக்க பலமாக இருந்து சிறைக்காவலர்களுக்கான எட்டு மணி நேர பணியை அமல்படுத்த உடன் நின்றனர். இதன் பலனாக, 1999 இல் அனைத்து மத்திய சிறைகளிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த அரசாணை மீண்டும் உயிர்ப்பெற்றது. இதனை தொடர்ந்து மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில், ரூ 90 கோடி செலவில் புழல் சிறை புதியதாக கட்டப்பட்டது. சிறைத்துறை வரலாற்றில் அதெல்லாம் பொற்காலம்.” என்பதாக கடந்த காலத்தை நினைவுகூர்கிறார், ஓய்வுபெற்ற சிறைக்காவலர் கருணாமூர்த்தி.

–              அங்குசம் புலனாய்வுக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.