கலெக்டர் தொடங்கி வைத்த சினிமா ஷூட்டிங்!

தமிழ் சினிமா ஏரியாவில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் ஏ.எம். பிரபாகரன் ‘தியாகராஜா டாக்கீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். இதன் முதல் தயாரிப்பில், ஜெய் கதையின் நாயகனாக நடிக்க , அவருக்கு ஜோடியாக டெல்னா டேவிஸ் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் சிவபிரசன்னா டைரக்ட் பண்ணுகிறார்.

தென்காசியில்   தொடங்கிய படத்தின் ஷூட்டிங்கை அந்த  மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்,  சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடிக்க, முதல் சீன் படமாக்கப்பட்டது.

தொடர்ந்து 23 நாட்கள் தென்காசியில் ஷூட்டிங் நடைபெறுகிறது.

—  ஆண்டவர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.