அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

நம் மண்சார்ந்த இலக்கியங்களே குழந்தைகளுக்கு தேவை…

சிறார் இலக்கியம்-ஆசிரியா் அறிமுகம்-07

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சிறார் எழுத்தாளர் கீர்த்தி

இளங்கலை வேதியல் பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.இயற்பெயர் : நா. ரமேஷ். கீர்த்தி என்ற புனைப்பெயரில் எழுதி வருகிறார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

குங்குமம், இன்தாம், சிஃபி டாட் காம் ஆகிய இதழ்களில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். கணினி வரைகலைப் பயிற்றி பெற்று புத்தக வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறார்.பெரும்பான்மையாக எழுத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டதாகக் கூறும் எழுத்தாளர் கீர்த்தி, தன் முதல் சிறார் கதை ‘பிறந்தநாள் பரிசு’ என்ற தலைப்பில் தினமணி சிறுவர்மணி இதழில் வெளியானதாகக் கூறுகிறார். பிறகு சிறுவர்மணி இதழிலேயே பல்வேறு கதைகளும் சிறார் பாடல்களும் வெளியாகின.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

20 ஆண்டுகளுக்கு முன்பு இவரது முதல் சிறார் கதைத் தொகுப்பு ‘பறக்க விரும்பிய குருவி’ வெளியானது.

அதன் பிறகு சுட்டிவிகடன், தங்கமலர், கோகுலம், சிறுவர்மலர், இந்து தமிழ்திசையின் மாயா பஜார், தினமலர் இதழின் மாணவர் இதழான பட்டம் உள்ளிட்ட தமிழின் முன்னணி இதழ்களில் இவரது சிறார் கதைகளும் சிறார் பாடல்களும் வெளியாகியுள்ளன.

இதுவரை 200க்கும் மேற்பட்ட சிறார் கதைகளும், 50க்கும் மேற்பட்ட சிறார் பாடல்களும் முன்னணி இதழ்களில் வெளியாகியுள்ளன.

மாயாபஜாரில் வெளியான பாரதரத்னா அப்துல்கலாம் பற்றிய சிறார் பாடல் பல அரசுப் பள்ளிகளில் மாணவர்களால் பாடப்பெற்றது.

‘அப்பா கட்டிய ஊஞ்சல்’, ‘செல்லக்கோழி’ என்ற தலைப்புகளில் இவரது சிறார் பாடல்கள் தொகுப்பு வெளியாகியுள்ளன. ‘‘அஞ்சு தந்த உறவு’, ‘ஆர்யாவின் பயணம்’ என்ற சிறார் நாவல்கள் வெளியாகியுள்ளன.

பறக்கவிரும்பிய குருவி, கரடியும் தேன்கூடும், வடை காய்க்கும் மரம், மான்குட்டியின் மிமிக்ரி, காட்டுக்குள்ளே நூலகம், தேவதை காட்டிய சொர்க்கம், வைஷ்ணவியின் சாதுர்யம் உட்பட 20 சிறார் கதை நூல்கள் வெளியாகியுள்ளன. காட்டுக்குள்ளே நூலகம் நூலுக்காக 2024ஆம் ஆண்டு எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் தமிழ்ப்பேராயம் வழங்கிய ‘அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது’ வழங்கப்பட்டது,

மாணவர்களுக்காக நினைவாற்றலை வளர்ப்பது எப்படி, தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, பேச்சாற்றலை வளர்ப்பது எப்படி, வள்ளுவர் காட்டும் நேர நிர்வாகம் உள்ளிட்ட சில கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.

தங்களைக் குறித்துக் கூறுங்கள்?

சொந்த ஊர் நாகர்கோவில். தந்தை கனரா வங்கியில் பணியாற்றினார். தாய் இல்லத்தரசி. இரு மூத்த சகோதரிகள், மூன்று மூத்த சகோதரர்கள்.

தங்களின் கல்வி மற்றும் பணியைக் குறித்துக் கூறுங்கள்? தங்களின் குடும்பம் குறித்து கூறுங்கள்?

வேதியியல் இளங்கலை முடித்து சென்னைக்கு வந்தேன். சென்னை வந்த பிறகு மதுரைக் காமராசர் பல்கலையில் எம்.ஏ. இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றேன். ஐந்து வருடங்கள் மருந்து நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு, ஆர்வத்தால் பத்திரிகைத் துறையில் சேர்ந்தேன். அச்சு இதழ் மற்றும் இணைய இதழ்களில் பத்தாண்டுகள் பணியாற்றினேன். பிறகு புத்தக வடிவமைப்பில் ஈடுபட்டு சில பதிப்பகங்களுக்காகப் பணி புரிந்து வருகிறேன். அத்துடன் எழுத்துப் பணியிலும் முழுமையாக ஈடுபட்டு வருகிறேன். மனைவி பெயர் ரமா. மத்திய அரசின் சுங்கத்துறையில் பணியாற்றுகிறார்.

சிறார் இலக்கியத்தைத் தாங்கள் தேர்வு செய்ததற்கான காரணம்?

கல்லூரி காலத்திலேயே கவிதை, கதைகள் எழுதத் தொடங்கிவிட்டேன். கவிதை, சிறுகதை, கட்டுரை, குறுநாவல் என எழுத்தின் ஏறக்குறைய அனைத்து வடிவங்களிலும் எழுதியிருந்தேன். இருப்பினும் சிறுவயதில் பள்ளி நாட்களில் நான் என் குடும்பத்துப் பெரியவர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் வழியாகக் கேட்டறிந்த பல கதைகள் வேறெங்கும் நான் படித்தறியாதவை. அவற்றைக் கதைகளாக எழுதினால் என்ன என்ற எண்ணம் வந்தபோது, சிறார் கதைகளாக எழுத முடிவெடுத்தேன். என் முதல் சிறார் கதை இருபது ஆண்டுகளுக்கு முன்பு தினமணி நாளிதழின் சிறுவர்மணியில் வெளிவந்தது. அதன் பிறகு என் சிறார் கதைகள் தங்கமலர், சுட்டிவிகடன், சிறுவர் மலர், இந்து தமிழ்திசை மாயாபஜார், தினமலர் பட்டம் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன.

தற்காலசி சிறார் இலக்கியம் குறித்து தங்களின் கருத்து?

வெறும் நீதி மற்றும் அறிவுரைக் கதைகளாக இருந்த சிறார் இலக்கியம் தற்போது பெரும் வீச்சை அடைந்துள்ளது. அதற்கு இந்த சமூகமும் காரணம் என்றே நினைக்கிறேன்.

சாதி வேறுபாடு, குழந்தைகளின் மீதான பாலியல் அத்துமீறல், உடற்குறைபாடு, மனக்குறைபாடு, பாதுகாப்புக் குறைபாடு, திறன் குறைபாடு என்பதாகப் பல கருத்துக்களைப் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசும் நிலைக்கு வந்திருக்கிறோம். அதனால் அவற்றைக் குறித்த சிறார் இலக்கியங்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன.

தங்களின் சிறார் இலக்கியப் பங்களிப்பு குறித்தும், தங்கள் சிறார் இலக்கியப் படைப்புகளின் சிறப்புகள் குறித்தும் கூறுங்கள்?

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

என் எழுத்தில் ஏறக்குறைய 200 சிறார் கதைகள் முன்னணி தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன. சிறார் நாவல்களாக இரு நூல்களும், சிறார் பாடல்களின் தொகுப்பாக இரு நூல்களும் வெளிவந்துள்ளன. இந்து தமிழ் திசை நாளிதழின் சிறார் இணைப்பான மாயாபஜாரில் இதுவரை 75 சிறார் கதைகள் வெளிவந்துள்ளன.

சிறார் கதைகள் மற்றும் சிறார் பாடல்களுக்காக சிறப்புப் பரிசுகள் பெற்றிருக்கிறேன்.

2024ஆம் ஆண்டு எனது ‘காட்டுக்குள்ளே நூலகம்’ (நிவேதிதா பதிப்பக வெளியீடு) என்ற சிறார் நூலுக்காக எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது’ பெற்றேன்.

சிறார்கள் விரும்பும் மொழியில், சிறார்களுக்குத் தேவைப்படும் கருத்துக்களில் எழுதுவதாக நம்புகிறேன்.

சிறார் இலக்கியத்தின் திருப்புமுனையாகத் தாங்கள் கருதுவது?

நீதிக் கதைகளாக இருந்த சிறார் இலக்கியம் அறிவியல், விழிப்புணர்வு, பாலின சமத்துவம், மூட நம்பிக்கைகளைக் களைதல் என்று சமகாலச் சூழலுக்கு மாறியது திருப்புமுனை என்று சொல்லலாம்.

சிறுவர்களுக்கான கதைகள் எந்தெந்த பொருண்மையில் இருக்க வேண்டும்?

இலக்கியத்தின் நோக்கமே அறம்தான். அதனால் எல்லாக் காலத்திலும் நீதி என்பது சிறார் இலக்கியத்தின் பொருண்மையாக இருக்கவேண்டும். எல்லா சிறுவயதிலேயே அறிவும் உணர்வும் இணைந்து செயல்படத் தொடங்கிவிடுகின்றன. அதனால் அறிவை வளர்க்கும் கதைகளும் தேவை. சக மனிதர்கள் மீதான அன்பு, உதவும் மனப்பான்மை, நகைச்சுவை போன்ற பல உணர்வுகளைக் கொண்ட கதைகளும் தேவைதான். ஒரு கதையை சிறார்கள் படிக்கும்போது அவர்களுக்குள் ஏதேனும் ஒரு மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். இல்லையென்றால் கதைகளை வாசிக்கவே தேவையில்லையே.

சிறுவர்களுக்குக் கற்பனைக் கதைகள் தேவையா? எவ்விதக் கதைகள் சிறுவர்களை எளிதில் ஈர்க்கும்?

நிச்சயமாகக் கற்பனைக் கதைகள்தேவை. இன்றைய பல அறிவியல் முன்னேற்றம் முன்பு கற்பனையாக இருந்தவைதான் என்று சொல்வார்கள். சிறுவர்கள் வளரும் சூழ்நிலைக்கு ஏற்ப அவர்களின் மனநிலை இருக்கும். இருப்பினும் பொதுவாக எளிய மொழியில், எளிய காட்சிகளோடு கூடிய கதைகள் சிறார்களுக்குப் பிடித்தமானவை. அவற்றில் ஏதேனும் ஒருவகையில் அவர்களின் வாழ்க்கைக்குப் பயன்படும் கருத்தைப் புகுத்தி எழுதுவது எழுத்தாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று.

கடந்த காலச் சிறார் இலக்கியத்திற்கும் தற்காலச் சிறார் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாக தாங்கள் கருதுவது?

சிறார் இலக்கியம் ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டு வரும். கிழக்கு நாடுகளைப் பொருத்தவரையில் நீதிக் கதைகளே சிறார் கதைகளின் தொடக்கம் என்று கூற முடியும். பஞ்ச தந்திரக் கதைகள் நீதிக்கதைகள்தான். நகைச்சுவை உணர்வுடன் பரமார்த்தகுரு கதைகள் வந்தன. வேடிக்கை, அறிவார்ந்த கதைகளாக தெனாலிராமன், பீர்பால், மரியாதை ராமன் கதைகள் எல்லாம் வெளிவந்தன.

இலக்கியம் உலக அளவிற்குப் பரவியபோது கிழக்கு, மேலைநாட்டுக் கதைகள் இடம்பெயர்ந்தன. ஆங்கிலேய ஆட்சிக்குப் பிறகு மேலைநாட்டு இலக்கியம் கிழக்கிற்குப் பரவின. இன்றளவும் நம் மண்சார்ந்து எழுதும் சிறார் இலக்கியம்தான் நம் குழந்தைகளுக்குத் தேவை.

கல்விச் சூழலில் அறிவியல், கணிதம், மொழி, சமூக அறிவியல் பாடங்களைக் கதைகளாகப் படிக்கத் தரும்போது சிறார்கள் அவற்றை எளிதாக அணுக முடியும்.

எழுத்தாளர் கீர்த்தி
எழுத்தாளர் கீர்த்தி

சிறுவர்கள் ஏன் வாசிக்க வேண்டும்?

இலக்கியம் என்பது காலத்தைக் கண்முன்னே கொண்டு வரும் கண்ணாடி என்பார்கள். நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை, சமகால வாழ்க்கையை எல்லாம் அறிந்து கொள்ள வாசித்தாக வேண்டும். பள்ளிப் பாட நூல்களைத் தவிர வேறு நூல்களை வாசிக்கும்போது அறிவு விரிவடைகிறது. அந்த அறிவு பள்ளிப் பாடங்களைக் கற்பதையும் எளிதாக்குகிறது.

தற்காலச் சிறார்கள் வாசிப்பை நோக்கி நகர்வதற்கு பெற்றோர்களும், கல்விக் கூடங்களும் செய்ய வேண்டியவை? தற்காலப் பெற்றோர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது? தற்காலச் சிறுவர்களின் வளர்ச்சிக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய முன்னெடுப்பு குறித்து?

பெற்றோர்கள் செய்வதைக் குழந்தைகள் செய்கிறார்கள் என்பார்கள். பெற்றோர்கள் காட்சி ஊடகங்களுக்குச் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்து சிறார்களுக்குக் கதைகளை வாசித்துக் காட்ட வேண்டும். பிறகு அவர்களையே வாசிக்கச் செய்தல் வேண்டும்.

காட்சி ஊடகங்களைப் பொருத்தவரை வெறுமனே காட்சிகளை மூளைக்குத் திணிக்கும் வேலையை மட்டுமே செய்கின்றன. நூல்களைப் பொருத்தவரை நின்று நிதானித்து, படித்ததிலிருந்து கருத்துக்களை, கற்பனைகளை நினைவில் மீட்டெடுக்கும் நேரத்தையும் திறனையும் தருகின்றன. இதைப் பெற்றோர்கள் உணர்ந்தால் குழந்தைகளுக்கு வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க முயற்சிப்பார்கள்.

சிறார்களின் வளர்ச்சியைப் பொருத்தவரை அதிகச் சுமையைக் கொடுக்காமல் இருப்பதே அவர்களை முறையாக வளர்க்கும். நிதானமாகக் கற்றுக் கொள்பவர்கள் நிறைய கற்றுக் கொள்கிறார்கள் என்பார்கள். முப்பது வயதில் செய்ய வேண்டியதை எட்டு வயதில் செய்யும்படி தூண்டுவதே சரியல்ல. குழந்தைகளை விரட்டாமல் இருந்தால், அவர்கள் கடக்க வேண்டிய தூரத்தைக் கடக்க வேண்டிய நேரத்தில் கடந்து விடுவார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.