அங்குசம் சேனலில் இணைய

தமிழக ரேசன் கடைகளை கொள்ளையடிக்கும் பீகார் திருடர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழக ரேசன் கடைகளை கொள்ளையடிக்கும் பீகார் திருடர்கள் உள்ளிட்ட 14 பேர் கைது !

பிழைப்பிற்காக தமிழகத்தை நோக்கி வடஇந்தியர்கள் பலர் ஆயிரக்கணக்கில் படையெடுக்க ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது. தமிழர்களுக்கு கொடுக்கும் தினக்கூலியை விட வட இந்தியர்களுக்கு கொடுக்ககூடிய கூலி மிகக்குறைவு என்பதால் தமிழகத்தை சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசாங்க திட்டங்களில் கட்டுமான தொழிலுக்கு ஒப்பந்தக்காரர்கள் பலர்  வட இந்தியர்களை பயன்படுத்த ஆரம்பிக்க ஆரம்பித்து தற்போது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வட இந்தியர்களின் எண்ணிக்கை கனிசமா அதிகரித்து உள்ளது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

கூலி வேலைக்காக வந்த வட இந்தியர்களில் குறிப்பாக பீகாரில் இங்கே திருடுவதையும் தொழிலாக ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக  சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காரைக்குடி, சிவகங்கை உட்பட பல்வேறு பகுதிகளில் ரேசன் கடைகளின் பூட்டை உடைத்து அரிசி பருப்பு போன்ற பொருட்கள் திருடப்பட்டு வந்தது. இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்ததை அடுத்து குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

பீகார் கொள்ளையர்கள்
பீகார் கொள்ளையர்கள்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தனிப்படையினர் நடத்திய தீவிர கண்காணிப்பின் அடிப்படையில், காஞ்சிவனம், வடிவேல், ப்ரியா, சிவா, கார்த்திகேயயன், சிரஞ்சீவி, கதிர்வேல், ரமேஷ், மற்றும் பீகாரை சேர்ந்த பர்வீன், ரவிக்குமார், சாகர் குமார், மனோஜ்குமார் உட்பட 14 பேரை கைது செய்தனர்.அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், காரைக்குடியை அடுத்த கொத்தமங்கலத்தைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிசி, பருப்பு , சீனி ஆகியவற்றை பறிமுதல் செய்து குடோனுக்கு சீல் வைத்தனர்.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 5 கார்கள்,நான்கு இரு சக்க வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

– பாலாஜி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.