அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

விவசாயிடம் லஞ்சம் ! உதவி மின் பொறியாளர் கைது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி, மருங்காபுரி உதவி மின்பொறியாளர் விவசாயிடம் கையூட்டு இலவச மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது

திருச்சி மாவட்டம், மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் பார்த்திபன், உதவி மின்பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். திருச்சி மாவட்டம், T.இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு அவரது விவசாய நிலத்திற்கு அரசால் வழங்கப்படும் இலவச மின் இணைப்பை வழங்கியமைக்காக உதவி மின் பொறியாளர் ரூ.10000/- கையூட்டு கேட்டு, பின்னர் குறைத்து கொண்டு ரூ.5,000/- ஆக லஞ்சம் கேட்டுள்ளார்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

பார்த்திபன்
பார்த்திபன்

அதன் தொடர்ச்சியாக 04.03.2026 வாதி மாரியப்பன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 04.03.2026ந் தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது உதவி மின்பொறியாளர் பார்த்திபன் லஞ்சப்பணம் ரூ.5000/-ஐ மாரியப்பனிடமிருந்து திருச்சி மருங்காபுரி உதவி மின்பொறியாளர் அலுவலகத்தில் கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, மருங்காபுரி மின்பொறியாளர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.