பாஜக ஓ பி சி அணி மாநில தலைவர் ஆர் எம் சாய் சுரேஷ் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன் ஒரு பகுதியாக மதுரை மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறதுஅதைத் தொடர்ந்து மதுரை திருப்பாலை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை ஏற்றி வைத்து செய்தியாளர்களை சந்தித்த போது பாஜக ஓ பி சி அணி சார்பாக தேர்தலை ஒட்டி பலநிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றோம் .
அது ஒரு பகுதியாக இன்று 29.11.2022 மதுரை புறநகர் மாவட்டத்தில் உள்ள தொண்டர்களை சந்தித்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்த்தும் வருகின்றோம். கிராம மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு என்னை வரவேற்கின்றனர்பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு பாஜக புதிய உறுப்பினர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது தற்போது அமைச்சர் மூர்த்தியின் சொந்த தொகுதியான வெளிச்சநத்தம் பகுதியில் 100க்கும் மேற்பட்டோர் புதிய உறுப்பினர்களாக சேர உள்ளனர் என கூறினார்.
– மதுரை ஷாகுல்