மறுபடியும் ஸ்டிக்கரா…. மாப்ள அவருதான்…. ஆனா சட்ட என்னுது….

0

மறுபடியும் ஸ்டிக்கரா…. மாப்ள அவருதான்…. ஆனா சட்ட என்னுது….

தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள வானவில் மன்றம் என்ற திட்டம் ,ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய திட்டம் என்பதும் தற்போது அந்தத் திட்டத்திற்கு பெயர் மட்டுமே மாற்றம் செய்து தொடங்கி உள்ளனர் என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது .

2 dhanalakshmi joseph

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

- Advertisement -

- Advertisement -

முதல்வர் மு .க. ஸ்டாலின் தொடங்கி வைத்த போது
முதல்வர் மு .க. ஸ்டாலின் தொடங்கி வைத்த போது

எங்கும் அறிவியல்…. யாவும் கணிதம் …

என்பதே வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வகையில் வானவில் மன்ற தொடக்க விழா நிகழ்ச்சி திருச்சி காட்டூரில் நடந்தது .
தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலின், தலைமை வகித்து திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அதை தொடர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

முதல்வர் மு .க. ஸ்டாலின்
முதல்வர் மு .க. ஸ்டாலின்

4 bismi svs

ஆனால்

தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள , இந்த வானவில் மன்றம் என்ற திட்டமானது, மத்திய அரசால் ஏற்கனவே ஏழு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மத்திய அரசு சார்பில் ராஷ்டிரிய அவிஷ்கார் அபியான் என்ற திட்டம் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ராஷ்டிரிய அபிஷ்கார் அபியான்
ராஷ்டிரிய அபிஷ்கார் அபியான்

இந்த திட்டத்தின் நோக்கம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தை தூண்டுவதாகும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தத் திட்டம் நடைமுறையில் தான் உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியிலும் இதே திட்டம் தமிழகத்திலும் இயங்கியது.
அதே திட்டத்தை பெயரை மட்டும் மாற்றி அமைத்து புதிய திட்டமாக அதுவும் முதல்வர் கையால் தொடங்கி வைத்துள்ளனர் என்பது தான் இதில் ஹைலைட்…

ராஷ்டிரிய அபிஷ்கார் அபியான்
ராஷ்டிரிய அபிஷ்கார் அபியான்

ஏற்கனவே நடைமுறையில் உள்ள சில திட்டங்கள் புதிய பெயர்களில் அறிமுகமான போது ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட திட்டம்.

“மாப்ள அவருதான்…ஆனா அவர் போட்டிருக்குக் சட்ட என்னுது…என்று எதிர்கட்சிகள் கிண்டல் அடித்த நிலையில் திரும்பவும் ஸ்டிக்கரா என்கின்றனர் நடுநிலையாளர்கள்……

அரியலூர் சட்டநாதன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.