அசிங்கப்பட்டான்….. ஆட்டோக்காரன்…..
அசிங்கப்பட்டான்….. ஆட்டோக்காரன்…..
திருச்சி காட்டூரில் நடந்த அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கணிதம் குறித்த ஆர்வத்தை தூண்டும் வகையிலான வானவில் மன்றம் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சிக்கு உட்பட்ட எம்.பி, எம்.எல்.ஏக்கள் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். திருச்சி எம்.பி என்ற முறையில் காங்கிரசை சேர்ந்த திருநாவுக்கரசர் வந்திருந்தார். ஸ்டாலினை வரவேற்ற அவர் நிகழ்ச்சி நடக்கும் காட்டூருக்கு புறப்பட்டார்.
முதல்வர் வாகனம் காட்டூர் பள்ளிக்கு சென்று விட்டது. முதல்வர், அமைச்சர்கள் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் மேடையில் ஏறி அமர்ந்ததும் அவசரம் அவசரமாக எம்.பி திருநாவுக்கரசர் மேடை நோக்கி முன்னேறினார்
இதை கவனித்த முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் கே .என்.நேருவிடம் கூறி திருநாவுக்கரசரை மேடைக்கு அழைத்து வருமாறு தெரிவித்தார். அதிகாரிகளும் திருநாவுக்கரசரை மேடைக்கு அழைத்து வந்தனர்.
இந்த நிலையில் வரவேற்பு உரை நிகழ்த்திக் கொண்டிருந்த அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திருநாவுக்கரசர் பெயரை விட்டு விட்டு வழக்கம் போல மேடையில் இருந்த எல்லோரது பெயரையும் வாசித்து எல்லோரையும் வரவேற்பதாக தெரிவித்து விட்டு பேச்சை தொடர்ந்தார். இதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நேருவிடம் கூறி திருநாவுக்கரசர் பெயர் விடுபட்டுவிட்டது. வரவேற்புரையில்சேர்க்க சொல்லுங்கள் என்றார்.
நேரு நைசாக வந்து திருநாவுக்கரசர் பெயரை சேர்த்து வரவேற்புரை வாசிக்கவும் என அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கூறினார்.
சுதாரித்த அவர் திருநாவுக்கரசருக்கு ஸ்பெஷல் வரவேற்பு அளித்தார். இதைக்கேட்ட திருநாவுக்கரசர் சிரிப்புடன் அதை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-அரியலூர் சட்டநாதன்