காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

காவல் நிலையத்தில் தீக்குளிக்க முயன்ற ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டரின் மகன்!

 

வாகனக் கடன் பெற்று அதற்;கான மாதத் தவணையை ஒழுங்காக கட்டாததால் தனியார் நிதிநிறுவன அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரணை நடத்தியபோது, விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் ஒருவரின் மகன்  தனது உடலில் பெட்ரோலை தெளித்துக்கொண்டு தீக்குளிக்கப்போவதாக  மிரட்டியுள்ளார்.

 

Srirangam MLA palaniyandi birthday

காவல்நிலைய வளாகத்தில் இச்சம்பவம் நடைபெற்றதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

இதைத் தொடர்ந்து, தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பட்டுக்கோட்டை வளவன்புரத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் பிச்சைப்பிள்ளை. இவரது மகன் பிரவீன் (வயது 34) ஸ்ரீராம் நிதி நிறுவனத்தில் வாகனக் கடன் பெற்று ஒரு என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள், ஒரு மகேந்திரா வேன், ஒரு ஹ{ண்டாய் கார் என மொத்தம் 3 வாகனங்கள் வாங்கியுள்ளார்.

 

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

ஆனால் அக் கடனுக்கான மாதத் தவணையை அவர் சரிவர செலுத்தாததால் அந்நிதி நிறுவனத்தினர் முறையாக நீதிமன்ற உத்தரவு பெற்று மேற்படி வாகனங்களை பறிமுதல் செய்வதற்காக பட்டுக்கோட்டை காவல் நிலைய போலீஸாரின் உதவியை நாடினர்.

 

அதனடிப்படையில், போலீஸார் அழைத்ததன்பேரில், பிரவீன் தனது நண்பர்கள் சிலருடன் பட்டுக்கோட்டை காவல் நிலையத்துக்கு நேற்று மாலை வந்துள்ளார். வாங்கிய கடனுக்கான மாதத் தவணையை கட்டாதது தொடர்பாக போலீஸார் அவரிடனம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் கடனை முறையாக திருப்பிச் செலுத்தாததால் அவரது வாகனங்களை நீPதிமன்ற உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த பிரவீன், சிறுநீர் கழிக்கச் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து வெளியே வந்து, காவல்நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளிலிருந்து சிறிது பெட்ரோலை எடுத்து தனது உடலில் தெளித்துக்கொண்டு தீக்குளிக்கப் போவதாக மிரட்டியுள்ளார். சுதாரித்துக்கொண்ட போலீஸார் அவரை அமுக்கிப்பிடித்து காப்பாற்றினர்.

 

இச்சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தனது கண்ணில் எரிச்சல் இருப்பதாக அவர் கூறியதைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

இந்நிலையில், காவல் நிலைய வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.