ஜாதி வெறியை எதிர்த்து போராடாமல் அரசியல் கட்சியினர் மௌனம் காப்பது ஏன்?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஊத்தங்கரை அருகே காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆணவப் படுகொலை தாக்குதலுக்கு உள்ளாகி சேலம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் அனுசுயாவை நேரில் பார்வையிட்டார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில்,

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டவர்களை, தந்தையான தண்டபாணி என்பவர், மகன் சுபாஷையும், அவரது பாட்டியையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தார். தண்டபாணியின் கொலை வெறி தாக்குதலை நீண்ட நேரம் போராடி எதிர்கொண்ட சுபாஷின் காதல் மனைவி அனுசுயா உயிர் தப்பினார்.

அந்தப் பெண்ணின் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது். சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதால் தற்போது அவர் உடல் நலம் தேறி வருகிறார். அவருக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்க சேலம் அரசு மருத்துவர்களுக்கு தனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் குணமாக இன்னும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும் .

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ஜாதி மறுப்பு திருமணம் என்பதற்காகவே மகன் மற்றும் தாயை கொன்றதோடு திருமணம் செய்து கொண்ட இளம் மருமகளையும் தண்டபாணி சரமாரியாக வெட்டி இருக்கிறார். அந்த அளவில் ஜாதி வெறி ஆட்டி படைக்கிறது. எனவே சமூகத்தில் இருப்பவர்கள் ஜாதி வெறியை எதிர்த்து போராட வேண்டும் . அனுசுயாவிற்கும் , சுபாஷ்க்கும் நடந்துள்ள இந்த கொடுமை, நாளை வேறு யாருக்கும் நடந்து விடக்கூடாது .

நாம் திரும்பத் திரும்ப கேட்டுக் கொள்வது, தமிழக அரசு சாதிய ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கேட்கிறோம். தமிழக முதலமைச்சர் இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் சாதி வெறியைத் தூண்டி விடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியும். ஜாதிய ஆணவக் கூட்டம் என்றால், யார் யார் எல்லாம் பின்னால் தூண்டி விடுகிறார்களோ? அவர்களை எல்லாம் தண்டனைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான் ஜாதி ஆணவ கொலை தடுப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்.

தனது ஒரே மகனையும், தாயையும் வெட்டக் கூடிய அளவுக்கு ஜாதி வெறி தற்போது தலை விரித்து ஆடுகிறது. எனவே இந்த கொடுமை நீடிக்க கூடாது். சமுதாயத்தில் ஆழமாக புரையோடி உள்ள ஜாதி வெறியை எதிர்த்து போராடாமல் , அரசியல் கட்சியினர் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஜாதி வெறி அடங்காவிட்டால் இந்த கொடுமை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். எனவே பள்ளிக்கூடத்தில் இருந்தே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஜாதி வெறி எதிர்த்து விழிப்புணர்வு இயக்கத்தை அரசு உருவாக்க வேண்டும்.

இந்த ஜாதி வெறியை கருவருக்க, வேறருக்க அனைத்து சமூகத்தினரும், அனைத்து அரசியல் கட்சிகளும் ஜாதி வெறிக்கு எதிராக களமிறங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்வதாக கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

-சோழன் தேவ்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.