அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ரிப்போர்ட்டர் என்கிற போர்வையில் சிறுமியை சிதைத்த காமுகன் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க

ரிப்போர்ட்டர்  என்கிற போர்வையில் ஒரு காமுகன் !

17 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.  மேலும் அந்த சிறுமியை15 வயதில் திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

சிறுமிக்கு பாலியல் கொடுமை

திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல விடுதியில் ஏப்ரல் 11ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அன்று இரவில் ஒரு சிறுமியை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த தங்கும் விடுதி ஊழியர்கள் இதுபற்றி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

பிரபின் கிறிஸ்டல்ராஜ்
பிரபின் கிறிஸ்டல்ராஜ்

இதனையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி வேதவல்லி தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட தங்கும் விடுதிக்கு ஏப்ரல் 11ம் தேதி நள்ளிரவே சென்று அவர்கள் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனர். பின்னர், சிறுமியிடமும், அந்த வாலிபரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது சிறுமியை அவர் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் போலிசார் விசாரிக்கையில் அவர் சொன்ன தகவல்கள் கேட்டு அதிர்ந்து போயினர்.

15 வயதில் திருமணம்

திருச்சி துவாக்குடியை சேர்ந்த சிறுமிக்கு தற்போது 17 வயது ஆகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய தந்தை இறந்துவிட்டார். இதனால் அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 7-4-2021 அன்று அவரை பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மனோகர்-செல்லம்மாளின் மகன் பாலமுருகன் (29) என்பவருக்கு சிறுமியின் தாய் திருமணம் செய்து கொடுத்துள்ளார். அப்போது சிறுமிக்கு 15 வயது தான் ஆகியுள்ளது.

பாலமுருகன் சிறுமியுடன் 2 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஆனால், சிறுமியை குழந்தை உண்டாக வில்லை என்று பாலமுருகன், செல்லம்மாள், மனோகர் ஆகியோர் திட்டியதாக தெரிகிறது.

பிரபின் கிறிஸ்டல்ராஜ்
பிரபின் கிறிஸ்டல்ராஜ்

விபசார தொழில்

இதனால் கடந்த ஜனவரி மாதம் 25-ந்தேதி தனது தாய் வீட்டுக்கு சிறுமி வந்துவிட்டார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் வாங்கிய கடனை அடைப்பதற்காக திருச்சி சுப்பிரமணியபுரம் ஜெய்லானியா தெரு 4-வது குறுக்கு சந்தில் வசித்து வரும் முத்து என்பவரின் மனைவி ரமீஜா பானு (50) என்பவரிடம் சிறுமியை வேலைக்கு அனுப்பியுள்ளார்.  ரமீஜா பானு இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்துவந்துள்ளார். அதனால் அந்த சிறுமியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் திருச்சிக்கு வந்த கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மலையன்விளையை சேர்ந்த பாக்கியராஜ் என்பவரின் மகன் பிரபின் கிறிஸ்டல் ராஜ் திருச்சியில் உள்ள தங்கும் விடுதிக்கு அந்த சிறுமியை முதன்முறையாக அழைத்துச்சென்று பாலியல் கொடுமை செய்துள்ளார்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

கட்டாயப்படுத்தி விபசாரம் மேலும் இதுபோல் 15 முறைக்கு மேல் பெயர் விவரம் தெரியாத வாடிக்கையாளர்களிடமும் ரமீஜாபானு அந்த சிறுமியை பாலியல் தொழிலுக்கு அனுப்பியுள்ளார்.

விடுதிக்கு வெளியே காத்திருந்து சிறுமியை ரமீஜா பானு கையோடு அழைத்துச்சென்றுள்ளார். மேலும் வாடிக்கையாளர்களிடம் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் வாங்கும் ரமீஜாபானு, சிறுமிக்கு ரூ.1,000 மட்டுமே கொடுத்துள்ளார்.

மேலும் உடல்நிலை சரியில்லை என்று கூறினாலும், உனது வீடியோ எங்களிடம் உள்ளது என்று கூறி அவரை தொடர்ந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளனர். ஏப்ரல் 11ம் தேதி ரமீஜாபானுதான் பிரபின் கிறிஸ்டல்ராஜ் தங்கி இருந்த விடுதிக்கு சிறுமியை ஆட்டோவில் அழைத்துவந்து விட்டதாகவும் சிறுமி போலீசாரிடம் கூறியுள்ளார்.

பிரபின் கிறிஸ்டல்ராஜ்
பிரபின் கிறிஸ்டல்ராஜ்

டிவி செய்தியாளர் – பத்திரிகை நிருபர்

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிரபின் கிறிஸ்டல்ராஜ் யார் ? அவர் எப்படி போலீசில் சிக்கினார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது..

அந்த லாட்ஜில் 301-ம் நம்பர் ரூமில்தான் தங்கியுள்ளார் பிரபின் கிறிஸ்டல்ராஜ்.. ரூமுக்குள் நுழைந்ததுமே, சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டு முடித்து, அதற்கு பிறகு, இளைஞரை விசாரித்துள்ளனர்.. விசாரணையில் நான் பெரிய ரிப்போர்ட்டர், எனக்கு பெரிய பெரிய போலிஸ் ஆபிசர் எல்லாம் தெரியும் திமிராக பேசியுள்ளான். என்னை கை வச்சா பெரிய பிரச்சனைய சந்திக்க வேண்டியிருக்கும் என்று சொல்லி இருக்கிறார். டென்ஷன் ஆனா போலிஸ்  அவனை விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரணை நடத்தியத்தில் அப்பா பெயர் பாக்கியராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் மலையன்விளையை சேர்ந்தவன்.

பிறகு விசாரணையின் போது, தன்னை பெரிய ரிப்போர்ட்டர் என்றார் போலீசாரிடம் சொல்ல, .. எங்கே வேலை பார்க்கிறீர்கள்? அது என்ன பத்திரிகை? என்று கேட்டதற்கு “சிலந்தி வலை” பத்திரிகை என்றானாம். பிறகு கொஞ்சம் நேரம் கழித்து .. இப்படி ஒரு பத்திரிகையை நடத்த ஏற்பாடு செய்து செய்து கொண்டு இருக்கிறேன்.  இதற்கு முன்பு டிவி சேனல் ஒன்றில் வேலை செய்தேன் என்று மென்று முழுங்கி இருக்கிறான்.

கடந்த 15 வருடமாக ரிப்போர்ட்டர் என்ற போர்வையில், ஒரு சில உயர்போலீசாருடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டு, புகார்களில் யாராவது பிரபலங்கள் சிக்கினால், அவர்களை மிரட்டி பணம் கறந்து வந்திருப்பதும் தெரியவந்துள்ளது..

மேலும், ரமீஜா பானுவுடன் சேர்ந்து கொண்டு பல பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அவர்களது வாழ்க்கையை அவர் சீரழித்ததும், அத்துடன், அந்த சிறுமியை அவர் கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

மேலும் இதற்கு சிறுமியின் தாயாரும் உடந்தை என்று தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியை மீட்ட போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையம்
திருச்சி கண்டோன்மெண்ட் மகளிர் காவல் நிலையம்

இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் போலீசில் புகார் கொடுத்தார் தாய் உள்பட 2 பேர் கைது அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்து, பாலியல் வன்கொடுமை செய்ததாக பாலமுருகன் மீதும், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபின் கிறிஸ்டல் ராஜ் மீதும், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக ரமீஜாபானு மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் தாய் மற்றும் மாமனார், மாமியார் மீதும் போக்சோ, விபசார தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் பிரபின் கிறிஸ்டல் ராஜ், ரமீஜாபானு, சிறுமியின் தாய் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சமூக விரோத செயல்களுக்கு ரிப்போர்ட்டர் என்கிற பெயரில் துணைபோவது வேதனைக்குரிய விசயம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.