கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள் !
கொட்டக்குடி ஆறு வழியாக கொள்ளை போகும் கனிம வளங்கள் !
தேனி மாவட்டம், போடி தாலுகா, மற்றும் துரைராஜபுரம் காலனி அருகே கொட்டங்குடி ஆற்றின் வழியாக கனிம வளங்கள் தினந்தோறும் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
துரை ராஜபுரம் காலனி அருகே கொட்டங்குடி ஆற்றின் குறுக்கே தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு பாதை அமைத்து லாரிகள், டிராக்டர்கள் செல்லு வகையில் மண் பாதை அமைத்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. மேலும் இந்த குவாரியில் இரவு நேரங்களில் வெடிவைத்து கற்கள் உடைக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்த பகுதியில் வனவிலங்குகளுக்கு ஆபத்துகள் தினம் தோறும் விளைவித்து வருகின்றனர் . இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால் கொட்டங்குடி ஆற்றின் குறுக்கே மண் பாதை அமைத்து தினந்தோறும் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.