அமைச்சர் செந்தில்பாலாஜி மீது இதுவரை நடந்த வருமானவரி சோதனைகள் எத்தனை தெரியுமா ?
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் போது அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சர் ஒருவர் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருவது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மதுபான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் ( அதிமுக ஆட்சிகாலத்தில்) வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சிறப்பு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கவர்னரிடம் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார். அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரினார்.
அதிமுக பொதுசெயலர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் வலியுறுத்தி இருந்தனர். அதிமுக சார்பில் சமீபத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று (மே 26 – 2023 ) ரெய்டு நடந்து வருகிறது. சென்னை, கோவை, கரூர் மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.
தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.
வருமானவரித்துறை இதுவரை சோதனை செய்த போது லோக்கல் போலீஸை பாதுகாப்புக்கு அழைத்துச் செல்வது வழக்கம் ஆனால் இந்த முறை எந்த போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் திடீரென நுழைந்தது பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் செந்தில் பாலாஜி வீட்டிற்கு வருமான வரித்துறை பெண் அதிகாரி ஒருவர் கைப்பையுடன் உள்ளே நுழைந்ததை செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி அந்தப் பையை பரிசோதனை செய்ததும், அந்த அதிகாரியின் அடையாள அட்டை கேட்டு முற்றுகையிட்டர்.
லோக்கல் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் வருமானவரித்துறையினர் சென்றது சென்றது தான் இந்த முற்றுகைக்கு காரணமாக அமைந்தது.
செந்தில்பாலாஜி மீது இது வரை நடந்த வருமான வரி சோதனைகள் எத்தனை தெரியுமா ?
2016ம் ஆண்டு செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில போட்டியிடும் போது தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட போது இதே போன்று வருமான வரிசோதனை நடைபெற்றது.
2017 ம் ஆண்டு செந்தில்பாலாஜி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏவாக இருந்த போது.. அவருடை நண்பர்கள் உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரிசோதனை நடைபெற்றது.
2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போது சிலநாட்களுக்கு முன்பு திமுக முக்கிய புள்ளிகள் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போதும் செந்தில்பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது.
2023 தற்போது திமுக அமைச்சராக இருக்கும் தற்போது அவர் சம்மந்தப்பட்ட 40 இடங்களில் நடைபெறுகிறது..