திருச்சியில் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் 3 பேர் தற்கொலை !
திருச்சியில் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் 3 பேர் தற்கொலை !
திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் தாய் தன் இரண்டு குழந்தைகளுடன் 3 பேரும் ஃபேன் கொக்கியில் தூக்கு மாட்டி இறந்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஷோபனா வயது 26/23 குழந்தைகள். 1. தக்ஷிவன் 3/23 2. கபிக்ஷன் ( 11 மாதம் ) ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்த நிலையில் இன்று 28.5.23 ஷோபனா கணவர் மனோஜ் குமார் கொடைக்கானல் சென்று வேலை முடித்து இன்று மதியம் 3.00 வீட்டிற்கு வந்திருக்கிறார்.
வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்த நிலையில் வீட்டின் முன்பாக காத்திருந்து தூங்கிக் கொண்டிருப்பதாக நினைத்து அதிக நேரம் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்து பின்பக்க கதவு வழியாக 6.00 மணி அளவில் உள்ளே சென்று பார்த்திருக்கிறார்.
அப்போது மேற்படி மூவரும் ஃபேன் கொக்கியில் சேலை துணியால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருந்ததாகவும், கணவர் மனோஜ் குமார் சாந்தி பர்னிச்சர் ஸ்ரீரங்கத்தில் வேலை செய்து வருகிறார். இதற்கு முன்பு பர்னிச்சர் கடை சொந்தமாக வைத்து நஷ்டமாகி விட்டதாகவும் எடமலைபட்டி போலிசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.