கமல் ‘ஸ்ட்ரிக்ட் ஆர்டர்’… சிக்கலில் இருக்கா லைக்கா?
கமல் ‘ஸ்ட்ரிக்ட் ஆர்டர்’… சிக்கலில் இருக்கா லைக்கா?
ண்டனிலும் மேலும் சில நாடுகளிலும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட சாஃப்ட்வேர் டெக்னாலஜி தொழிலாளர்கள் வேலை பார்க்கும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தின் அதிபர் தான் சுபாஸ்கரன் அல்லிராஜா. இவருக்கு தமிழ் சினிமாவின் தயாரிப்பு அதிபராக வேண்டும் என்பது தீராத ஆசை. விஜய்யை வைத்து ‘கத்தி’ மூலம் களம் இறங்கினார் சுபாஸ்கரன் அல்லிராஜா. (இப்பல்லாம் வெறும் சுபாஸ்கரன் தான், அல்லிராஜா கட்டாகிவிட்டது) .
மெகா ஸ்டார்கள், மெகா டைரக்டர்களை வைத்து முக்கால்வாசி படங்களைத் தயாரித்திருந்தாலும் சின்ன பட்ஜெட் படங்களையும் தயாரிக்கிறது லைக்கா. அந்த வகையில் தமிழ் சினிமா தயாரிப்பில் களம் இறங்கியது முதல் இப்போது ரஜினி, அஜீத் வைத்து எடுக்கும் படங்கள் வரை கிட்டத்தட்ட இரண்டாயிரம் கோடிக்கு மேல் லைக்காவின் பணம் கோலிவுட்டில் புழங்கியிருக்கிறது.
அதிலும் கமல், ஷங்கர் காம்பினேஷனின் ‘இந்தியன் -2’வின் இதுவரையான பட்ஜெட்டே 300 கோடிக்கு மேலாகி, நான்கு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ஷூட்டிங் முடிந்தபாடில்லை. இதனால ரொம்பவே கடுப்பான கமல், லைக்காவின் ஓனர் சுபாஸ்கரனிடமும் சி.இ.ஓ.தமிழ்க்குமரனிடமும் “ இந்த ஜூன் மாசம் வரை தான் உங்களுக்கு டெட்லைன். அதுக்குப் பிறகும் என்னிடம் கால்ஷீட் எதிர்பார்க்காதீர்கள். ஏன்னா என்னோட சொந்த பேனரில் மணிரத்னம் டைரக்ஷனில் நடிக்கும் பட வேலைகளுக்குப் போய்ருவேன்” என ஸ்ட்ரிக்டாக சொல்லிட்டாராம் கமல்.
இந்த குடைச்சல் போதாதுன்னு கடந்த மாதம் லைக்காவுக்குச் சொந்தமான ஏழெட்டு இடங்களில் அமலாக்கத்துறையும் ஐடி துறையும் சேர்ந்து ரெய்டு அடித்து, எம்.பி.தேர்தலுக்காக பல நூறு கோடிகளுக்கு அட்வான்ஸ் ‘புக்கிங்’ பண்ணிவிட்டுப் போயிருப்பதில் ரொம்பவே சிக்கலில் இருக்காம் லைக்கா.
-மதுரை மாறன்