கணவன் இறந்து போன சோகத்தில் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை !
கணவன் இறந்து போன சோகத்தில் மூன்று குழந்தைகளையும் கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை
ஒரு வயது பால்குடி மறக்காத பிஞ்சு என்று கூட பார்க்காமல் கிணற்றில் தள்ளிய தாய் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் இவரது மனைவி பாண்டீஸ்வரி இவர்களுக்கு வைத்தீஸ்வரி, வயது 16 காளீஸ்வரி, வயது 11, விக்னேஸ்வரன், வயது 1 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளது,
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல், ஈஸ்வரன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென அவருக்கு உப்பு சத்து அதிகமான காரணத்தினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பாண்டீஸ்வரி தனது 3 குழந்தைகளும் அழைத்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பி உள்ளார்.
இந்த மூன்று குழந்தைகளையும் நாம் எவ்வாறு வளர்க்கப் போகிறோம், வாழ்க்கையே முடிந்து விட்டது என புலம்பி தவித்து அதிக மன உலைச்சலில் இருந்துள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், பாண்டீஸ்வரி கவலைப்படாதே இனிமேல் தான் வாழ்க்கை உள்ளது உன் குழந்தைக்காக நீ தைரியமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். எதையுமே ஏற்றுக்கொள்ளாத மனநிலையில் இருந்துள்ளார்.
பாண்டீஸ்வரி திடீரென இரவு நேரத்தில் தனது 3 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, தனது கணவரின் சொந்த நிலத்தில் உள்ள கிணற்றில் தனது மூன்று குழந்தைகளையும் தள்ளிவிட்டு தானும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பின்னர் அதிகாலையில் பொதுமக்கள் அந்த பகுதியை கடந்து செல்லும் போது கிணற்றில் சடலம் மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனடியாக வத்திராயிருப்பு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மூன்று பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாழ்க்கையில் தன் கணவனை இழந்தாலும் தன் குழந்தைகளுக்காக தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டிய பாண்டீஸ்வரி, எதுவுமே அறியாத 3 பிஞ்சு இதயங்களையும், அவர்களது வரும் கால வாழ்க்கையும் பல கனவுகளையும் கிணற்றின் உள்ளேயே மூழ்கடித்துள்ளார்.
துளி அளவு தனது குழந்தைகளின் வாழ்க்கையை பற்றி யோசித்து சிந்தித்து செயல்பட்டிருந்தால், தற்கொலை செய்யும் அளவிற்கு முடிவு எடுத்திருக்க மாட்டார்,இதுவே பாண்டீஸ்வரியின் கடைசி முடிவு ஆனால் மற்றவர்களுக்கு இது ஒரு பாடம்
– B. மாரீஸ்வரன்
மேலும் அங்குசம் செய்திகளை படிக்க
https://angusam.com/tamannaah-is-so-glamorous/
அங்குசம் சினிமா செய்திகளுக்கு
https://angusam.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/