மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் !
மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அம்மாநில கலவரத்தை மத்திய அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டக் கிளை நிர்வாகி ஜெகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி அமைதி நிலவ போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ -மாணவியர் கோஷங்கள் எழுப்பினர்.