திருச்சியில் வெற்றித் தமிழன் விருது விழா !
திருச்சியில் வெற்றித் தமிழன் விருது விழா
திருச்சியில் நந்தவனம் பவுண்டேசன் மூலமாக பல்துறையில் சிறப்பாக பணியாற்றிவரும் சாதனையாளர்களைப் பாராட்டி வெற்றித் தமிழன் விருது வழங்கப்பட்டது.
திருச்சி பிரிஸ் ரெசிடென்சியில் நடைபெற்ற விழாவில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்றார். இனிய நந்தவனம் கெளரவ ஆலோசகரும், ஸ்ரீரங்கம் நகர நலச்சங்க மக்கள் செய்தித்தொடர்பாளருமான மேஜர் டோனர் டாக்டர் கே.சீனிவாசன் தலைமையேற்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தமிழ்நாடு மேனாள் அமைச்சர் என்.நல்லுசாமி சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். யோகா ஆசிரியை நித்யா கோபாலன் வாழ்வியல் மேலாண்மை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார்
கே. உலகநாதன், திருச்சி, வி.கணேஷ்.திருச்சி, ஆர். ஐயப்பன், திருச்சி, க.பிரதீபன், குமுடிப்பூண்டி, என் இரமேஷ்.திருச்சி, திவ்யா வீரமணி, திருச்சி, சி.சே.இராசன், மதுரை, எஸ்.கிருஷ்ணமூர்த்தி திருச்சி, ராஜாராம், திருச்சி, கே.கே.மாரிமுத்து. திருச்சி, பேராசிரியர் அன்புசிவா. கோவை, முனைவர்.ஆர்.காமராஜ், திருச்சி ஆகியோருக்கு வெற்றித் தமிழன் விருது வழங்கப்பட்டது.துளசி பாலசுப்பிரமணியன் விருதாளர்களுக்கு வாழ்த்துரை வழங்கினார். முனைவர் ஜா.சலேத் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்க. இனிய நந்தவனம் மக்கள் தொடர்பாளர் பா.தனபால் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்
– ஆதன்