வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டிகளில் கலக்கிய செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் !

0

வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டிகளில் செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாதனை !

பெரியார் மணியம்மை மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் ‘வீட்டுக்கொரு விஞ்ஞானி’ எனும் அறிவியல் கண்காட்சிப் போட்டி நடைபெற்றது. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் இருந்து சீனியர் பிரிவில் 5 படைப்புகளும் ஜூனியர் பிரிவில் இரண்டு படைப்புகளும் காட்சி படுத்தப்பட்டன.

2 dhanalakshmi joseph
வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டி
வீட்டுக்கொரு விஞ்ஞானி போட்டி
4 bismi svs

இவற்றுள் சீனியர் பிரிவில் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் செல்வன் S மாத்தேஷ் மற்றும் செல்வன் அப்துல் ரஹ்மான் ஆகியோர் உருவாக்கியிருந்த வேகத்தடையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் படைப்பு முதல் பரிசை பெற்றுள்ளது. ஜூனியர் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மிதுன் மற்றும் செல்வன் வரிஷ் கிருஷ்ணன் உருவாக்கியிருந்த நடக்கும்போது மின்சாரம் உற்பத்தி செய்தல் என்ற படைப்பு மூன்றாம் பரிசைப் பெற்றுள்ளது.

- Advertisement -

- Advertisement -

பரிசு பெற்ற மாணவர்களையும், போட்டிக்கு வழிகாட்டியாக இருந்து அழைத்துச்சென்ற ஆசிரியர் எஃப்.ஜான்சன், ஸ்டேன்லி குணசீலன், பெலிக்ஸ் ஆரோக்கியராஜ் உள்ளிட்டோரை பள்ளித் தாளாளர் அருள்தந்தை ம.ஆ.இஞ்ஞாசி, தலைமை ஆசிரியர் அருள்தந்தை வே.ஜார்ஜ் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் அருள்தந்தை லியோ பெரைரா ஆகியோர் பாராட்டுதல்களைத் தெரிவித்தனர்.

– ஆதன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.