உலக மக்கள் தொகை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி – நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்

புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியில் உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டமானது நாட்டுநலப் பணி திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இக்கூட்டமானது 20/07/2024 அன்று அன்னை சோஃபி அரங்கில் நடைபெற்றது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்
நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்

இக்கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி மூகாம்பிகை செவிலியர் கல்லூரியின் முதல்வர் முனைவர் சுகந்தி ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். பெண்களின் உரிமைகள், பெண்கள் தற்காப்பு, மக்கள் தொகை யினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்த பல்வேறு விதமான கருத்துக்களை மாணவர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் உரையாற்றினார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும் இரு சங்கத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத் தலைவி மற்றும் துணைத் தலைவிகளுக்கு அடையாளச் சின்னமானது சிறப்பு விருந்தினர் அவர்களால் சூட்டப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்
நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்

கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதரி இசபெல்லா ராஜகுமாரி அவர்கள் தலைமையில், கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி சற்குணா மேரி அவர்களின் முன்னிலையில் இந்நிகழ்வானது இனிதே நடந்தேறியது.

இளங்கலை, இளம் அறிவியல் முதலாம் ஆண்டு மாணவிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் மெர்லின் கோகிலா அவர்களால் இக்கூட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்
நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் செஞ்சுருள் சங்கம்

திட்ட அலுவலர்கள் முனைவர் டாலி ஆரோக்கிய மேரி, முனைவர் ரோஸி லிடியா, பேராசிரியர் குழந்தை பிரியா, முனைவர் மரிய ஷீலா மற்றும் செஞ்சுருள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் பபித்ரா, முனைவர் அகிலா அவர்களும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பு செய்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.