காந்திகிராம பல்கலையில் தேசிய கல்வி தின விழா !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தேசிய கல்வி தினம் – 2026

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களது பிறந்த நாளான நவம்பர் 11, தேசிய கல்வி தினமாக கல்வி நிறுவனங்கள் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றது. இதன் சார்பாக காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கல்வியியல் துறை மற்றும் லெட்சுமி கல்வியியல் கல்லூரி இணைந்து 11.11.2026 (புதன்கிழமை) அன்று வெள்ளி விழா அரங்கில் காலை 10.30 மணியளவில் கல்வியாளர்களால் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. விழாவின் தொடக்கத்தில் கல்வியியல் துறை பேராசிரியர் முனைவர் ந. தேவகி அவர்கள் வரவேற்புரை நல்கினார்,

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் லெட்சுமி கல்வியியல் கல்லூரி இணைப் பேராசிரியர்  முனைவர் எம். உமாமகேஸ்வரி அவர்கள் தேசிய கல்வி தினத்தின் முக்கியதுவத்தை எடுத்துரைத்தார். தலைமையுரையாற்றிய காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக மாண்பமை துணை வேந்தர் பேராசிரியர். நா. பஞ்சநதம் அவர்கள் மாணவர்கள் மற்றும் நாட்டினுடைய எதிர்காலம் ஆசிரியர்களின் கையில் தான் உள்ளது என்றும் மாணவர்கள் கல்வியாளர்களை முன் மாதிரியாக கொண்டு வாழ்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்றும் காலத்திற்கு ஏற்றாற் போல் திட்டமிட்டு கற்றல்-கற்பித்தலில் உத்திமுறைகளை புகுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ். சுப்பையா அவர்கள் தனது சிறப்புரையில்  கல்வி தனிமனிதனை மட்டுமல்லாது தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தையும் நாட்டையும் முன்னேற்றம் அடைய செய்யும் என்றும் அதற்கு நானே சான்று என்று கூறினார்.

மாணவர்களுக்கு கற்பித்தல் முழுமையாக சென்று சேர வேண்டுமென்றால் ஆசிரியர் இன்முகத்துடன் கற்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ ஆசிரியர்களால் சாதாரண மனித ஆசிரியர் போல் மாணவர்களின் மனநிலை அறிந்து பாடம் நடத்த இயலாது என்றும் ஆசிரியர்கள் வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும், ஊக்கம் அளிப்பவராகவும், சமூதாய இணக்கத்துடனும் பிரச்சனைகளை தீர்க்க கூடியவராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பேராசிரியர் வி. சிவக்குமார் அவர்கள் முதன்மை உரையாற்றினார். பல்கலைக்கழக சமூக அறிவியியல் துறை புலத்தலைவர் பேராசிரியர் ஆர். மணி அவர்கள் கல்வியியல் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் பெ. ஸ்ரீ. ஸ்ரீதேவி; அவர்கள் மற்றும் லெட்சுமி கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் எம். மலர்விழி அவர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டது.

மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும் மற்றும் மாணவ-ஆசிரியர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்வியியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ப. பொன்னுசாமி அவர்கள் நன்றியுரை வழங்கினார். மற்றும் முனைவர் கு. பொன் செல்வக்குமார் மற்றும் முனைவர் இ. ஜோசப் மில்டன் பால்ராஜ்  ஆகியோர் இந்நிகழ்வின் துணை ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.