ஜமால் முகமது கல்லூரியில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சிராப்பள்ளி, ஜமால் முகமது கல்லூரியின் 2 (TN) BN NCC, 2/1 Coy NCC (Army Wing) சார்பில், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படும் தேசிய ஒற்றுமை தினமான ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (Rashtriya Ekta Diwas) தினத்தைச் சிறப்பிக்கும் வகையில், இன்று (31.10.2026) நண்பகல் 12.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில்,

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கல்லூரி நிர்வாகத்தினர் முன்னிலை வகிக்க, கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் A.J. ஹாஜா மொய்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தார். மேலும், NCC 2 (TN) Battalion-இன் Care Taker Officer மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ராஜா முகமது M.A. அவர்கள்  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சைக்கிள் பேரணி!
சைக்கிள் பேரணி!

இப்பேரணியில் NCC மாணவர் படையினர் ஆர்வத்துடன் பங்கேற்று, தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம் மற்றும் தேசப்பற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர். இந்தியாவின் வலிமை அதன் ஒற்றுமையிலும் பன்முகத்தன்மையிலும் அடங்கியுள்ளது என்பதை மாணவர்களிடையே எடுத்துரைக்கும் வகையில் இப்பேரணி அமைந்தது.

இந்நிகழ்ச்சியின் மூலம் மாணவர்களிடையே தேசப்பற்று, ஒழுக்கம், சமூகப் பொறுப்பு மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உணர்வை வளர்க்கும் நோக்கம் வலியுறுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் NCC  மாணவர் படையினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஒன்றுபட்ட இந்தியா! வலிமையான இந்தியா!

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.