122 ஆண்டுகளில் முதல் தமிழர் அடுத்த தலைமுறைக்கு இவர் சொல்லும் முக்கியமான செய்தி!
122 ஆண்டுகால ரோட்டரி வரலாற்றில் முதன்முறையாக தமிழர் ஒருவர் சர்வதேச துணைத் தலைவராகப் பொறுப்பேற்றிருப்பது தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. திருச்சி திருவெறும்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத் தலைவர் MMM முருகானந்தம், தமிழகத்தில் 500 டயாலிசிஸ் மையங்கள் அமைக்கவும், 500 நீர்நிலைகளைப் புதுப்பிக்கவும், 3 முதல் 4 லட்சம் பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழக அரசு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இத்திட்டங்களைச் செயல்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாகக் கூறினார். மேலும், அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தைச் சிறப்பாக உருவாக்க ஒவ்வொருவரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார். தனது சொந்த மண்ணான திருச்சியுடனான பிணைப்பையும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.
அவரது முழுமையான உரையைக் காணுங்கள்!






Comments are closed, but trackbacks and pingbacks are open.