இளைஞர்களின் அரசியல் சிந்தனையைத் தூண்டும் ‘C.T. பஞ்சாயத்து நிகழ்வு’
ஒரு காலகட்டத்தில் இளைஞர்கள் ஒன்று கூடி கலந்துரையாடுவது ஊர்களின் தெருகளிலும், டீக்கடைகளிலும் , விளையாட்டு மைதானங்களையும், பார்க்க முடிந்தது. இன்றைக்கு சற்று குறைவாக தான் பார்க்க முடியும்.
இன்றைய ஜென்சிகள் ஒன்று கூடினாலும் பெரும்பான்மையானோர் பிரீ பையர் பப்ஜி போன்ற ஆன்லைன் கேம்களை அமர்ந்து விளையாடுகிறார்கள்.
இன்றைய ஜென்சி இளைஞர்கள் சிலர் youtube இன்ஸ்டாகிராம் போன்ற வலைத்தளங்கள் மூலம் அரசியல் பேசினாலும் , ஒன்று கூடி அரசியல் விவாதமோ கலந்துரையாடுவதோ, உலக அரசியல் பேசுவதோ குறைவு, பேசும் தளங்கள் இருந்தாலும், விரல் விட்டு எண்ணும் அளவிற்கு கூட இல்லை என்பது தான் உண்மை.
ஜென்சி இளைஞர்கள் நேரடியாக ஒன்று கூடி வலுவான அரசியல் பேச வேண்டும், விவாதிக்க வேண்டும், பேசப்படாத அரசியல் பேச வேண்டும், அறிஞர்களின் உரைகள் கேட்க வேண்டும் நோக்கத்தில் Comrade talkies யூடியூப் சேனல் குழுவாக இணைந்து C.T பஞ்சாயத்து என்ற பெயரில் அரசியல் ரீதியான பேச்சுகள் விவாதங்கள் போன்றவற்றை சென்னை தேனாம்பேட்டையில் நேரடியாக நடத்தி வருகிறது. இதனைப் பற்றி ஒருங்கிணைப்பாளர் தினேஷ் விளக்கமாக கூறுகையில்.
Comrade talkies யூடியூப் சேனல் 2018 இல் தொடங்கப்பட்டு,இடது சாரி அரசியல்சிந்தனையை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம் என அவர் தெரிவித்தார். C.T பஞ்சாயத்து நிகழ்வு மே மாதம் தொடங்கப்பட்டு மாதம் மாதம் நடைபெறுகிறது எனவும், இதுவரைஆறு மாதத்தில் ஐந்து நிகழ்வு நடைபெற்றதாகவும் என அவர் கூறினார்.
பொதுவாக இளைஞர்கள் ஒன்று கூடி ஒரு இடத்துல நின்று பேசுவதற்கான பிளாட்ஃபார்ம் தற்போது குறைவாக இருந்தாலும், சிடி பஞ்சாயத்து நிகழ்வு ஜென்சி இளைஞர்களுக்கும் அடுத்த தலைமுறைக்கும் மிக முக்கிய வாய்ந்ததாக இருக்கும் என சமூக செயல்பாட்டாளர்கள் கூறியதாக அவர் கூறினார்.
சிடி பஞ்சாயத்தின் முதல் நிகழ்வு சோசியல் மீடியா இன்ஃபிளுவேர்ஸ் தலைப்பில் நடைபெற்றதாக கூறினார்.
அதன் பின்னர் தமிழ் நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவு குறித்து “இந்த தேர்தல் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்” என்ற பொறுண்மையில் நிகழ்வு நடைபெற்றதாகவும் , அந்த நிகழ்வுக்கு அரசியல் பிரமுகர்கள் ,தோழர்கள், சமூக செயல் பாட்டாளர்களிடம் நல்ல வரவேற்பு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து “90 ஸ் 2k” கிட்ஸ் ககு இடையில் உள்ள அரசியல் பற்றியும், “மாணவர்களின் போராட்டங்கள்” பற்றியும் கலந்துரையாடும் நிகழ்வு நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.
பஞ்சாயத்து நிகழ்வின் முக்கிய நோக்கமே, யாரும் அறிந்திடாத அரசியலையும் , சமூக வலைத்தளங்களில் பேசப்படாத அரசியலையும் இளைய தலைமுறைகள் நேரில் ஒன்று கூடி அறிந்திடவும், கலந்துரையாடவும், விவாதிக்கவும், அரசியல் புரிதல் வளர்க்கவே என அவர் தெரிவித்தார்.
இந்த பஞ்சாயத்து நிகழ்வுகளில் வழக்கறிஞர்,மாணவர் செயல்பாட்டாளர் சினேகா,வழக்கறிஞர்,சர்வதேச விவகாரங்கள்ராரா. சிவா, தொழிற்சங்கவாதி வெல்கின், பத்திரிகையாளர், தி டிபேட் மனோஜ், பண்பாட்டு மற்றும் அரசியல் செயல்பாட்டாளர் ராதிகா, பத்திரிகையாளர் பிரபாகர் தமிழரசு, அரசியல் செயல்பாட்டாளர் செல்வா, கல்விச் செயல்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, செயல்பாட்டாளர் திவ்யா, மாணவர் செயல்பாட்டாளர் டி சைலஸ் அருள்ராஜ், சமூகச் செயல்பாட்டாளர் வில்லவன் ராமதாஸ், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன், அரசியல் செயல்பாட்டாளர் சா. லெனின் போன்றோர் உரையாற்றி , தோழர்களிடம் கலந்துரையாடியுள்ளனர் என கூறினார்.
இந்த பஞ்சாயத்து நிகழ்வின் முக்கிய ஒருங்கிணைப்பாளராகளாக தினேஷ் , ஆர் ஜே பிரசாத், அசோக், காமாட்சி , செயல்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comrade talkies சேனல், பஞ்சாயத்து நிகழ்வு தொடங்குவதற்கு முன்பே சமூகம் சார்ந்த பாடல்கள், “வாசாத்தி சம்பவம் , சாம்சங் போராட்டங்கள்” பற்றி விரிவான ஆவண படங்கள் தயாரித்து வெளியிட்டுள்ளது, சமூகம் சார்ந்த திரைப்படங்களை மக்களுக்கு திரையிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.