Friday, November 20, 2026 | 6:01 PM IST

புத்தகக் கொள்முதல் முதல் அதிகார வர்க்கம் வரை… விசாரணை வளையத்தில் சிக்கப்போவது யார்?

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழக நூலகத் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் நூல் கொள்முதல் முறைகேடுகள் தற்போது அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அகல் விளக்கு பதிப்பகம் 33,661 நூல்களையும், பீனிக்ஸ் பதிப்பகம் 39,241 நூல்களையும் கடந்த மூன்று ஆண்டுகளில் நூலகங்களுக்கு வழங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.

ஒரே காலகட்டத்தில் இத்தனை ஆயிரம் நூல்களைத் தயாரித்து, அச்சிட்டு, தரம் சரிபார்த்து, அரசின் கொள்முதல் நடைமுறைகளை முடித்து, நூலகங்களுக்கு விநியோகிப்பது என்பது சாதாரணமான காரியமல்ல.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அட்டை பெட்டிக்குள் அடைக்கப்பட்ட அறிவுக் களஞ்சியங்களா?

ஒரு நூலகத்தின் அடிப்படை நோக்கம் வாசகர்களுக்குத் தரமான புத்தகங்களை வழங்குவதுதான். ஆனால், கொள்முதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நூல்களில் பல வாசகர்களின் பார்வைக்கே வராமல் அட்டை பெட்டிகளுக்குள்ளேயே இருந்ததாகவும், சில நூலகங்களில் பயன்படுத்தப்படாமல் ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

தகுதியான சில நூல்களை மட்டும் வாசகர்களின் பார்வைக்கு வைத்துவிட்டு, மற்ற நூல்களைப் பெற்றுக்கொண்டதாகக் கணக்குக் காட்டி பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றனவா என்ற சந்தேகமும் எழுகிறது.

இது வெறும் தரமற்ற புத்தகங்கள் வாங்கப்பட்ட விவகாரம் மட்டுமல்ல. மக்களின் வரிப்பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான கேள்வியும்கூட!

ஆர்டர் போட்டது பழைய ஆட்சி… சந்தேகத்துக்கு உள்ளானது புதிய ஆட்சி!

இந்த விவகாரத்தில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது காலவரிசை. முந்தைய ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட கொள்முதல் நடவடிக்கைகளுக்கும், பின்னர் வெளிச்சத்துக்கு வந்த முறைகேடுகளுக்கும் இடையிலான தொடர்பு என்ன? யார் உத்தரவிட்டார்கள்? யார் பரிந்துரைத்தார்கள்? யார் ஒப்புதல் அளித்தார்கள்? யார் சரிபார்த்தார்கள்? இந்தக் கேள்விகளுக்கு ஆவணங்களின் அடிப்படையில் பதில் கிடைக்க வேண்டியது அவசியம்.

விசாரணை முழுமையடைந்துவிட்டதா?

மோகன்
மோகன்

இந்த விவகாரத்தில் அகல் விளக்கு பதிப்பகத்தைச் சேர்ந்த மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். நூலகத் துறையைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இவை விசாரணையின் தொடக்கநிலை நகர்வுகள். கீழ்நிலை அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதால் இந்த விவகாரத்தின் முழுப் பின்னணியையும் வெளிக்கொண்டு வர முடியுமா?

பலிகடாவாகப் போகிறார்களா கீழ்நிலை அதிகாரிகள்?

யார் நூல்களைப் பரிந்துரைத்தார்கள்? யார் தேர்வுக் குழுவில் இருந்தார்கள்? யார் கொள்முதல் உத்தரவுகளைப் பிறப்பித்தார்கள்? யார் தரச் சான்றிதழ் வழங்கினார்கள்? நூல்கள் உண்மையில் நூலகங்களுக்கு வந்தனவா? வந்த நூல்கள் வாசகர்களுக்குப் பயன்படும் வகையில் வைக்கப்பட்டனவா? விநியோகம் செய்யப்பட்டதாகக் காட்டப்பட்ட நூல்களுக்கான பணம் யாருக்குச் சென்றது?

ஜெயரஞ்சன்
ஜெயரஞ்சன்

பதிப்பகங்கள் முதல் நூலகத் துறை அதிகாரிகள், கொள்முதல் குழுக்கள், உயர் நிர்வாகப் பொறுப்பாளர்கள் வரை விசாரணையின் எல்லை விரிவடைய வேண்டும்.

கீழ்நிலை அதிகாரிகளை மட்டும் இடைநீக்கம் செய்து, சிலரை மட்டும் கைது செய்து, வழக்கை முடித்துவிடுவது இந்த முறைகேட்டின் முழுப் பரிமாணத்தையும் வெளிக்கொண்டு வராது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதிகார வர்க்கத்தைத் தொடுமா விசாரணையின் கரம்?

அரசியல் செல்வாக்கு, அதிகாரத் தொடர்பு, நிர்வாகப் பதவி, டெல்லி தொடர்பு என எந்தக் காரணமும் விசாரணைக்கு முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது.

அதிகார வர்க்கத்தின் மேல்மட்டம் விசாரணைக்கு வருமா?

இந்த விவகாரத்தில் அடுத்தகட்டமாக  அப்போதைய நூலகத் துறை நிர்வாகத்தில் முக்கியப் பொறுப்புகளில் இருந்ததாகக் கூறப்படும் ஜெயந்தி ஐ.ஏ.எஸ்., ராமேஸ்வர முருகன் உள்ளிட்டோரின் நிர்வாகப் பங்கு என்ன என்பது விசாரிக்கப்பட வேண்டிய கேள்வியாக முன்வைக்கப்படுகிறது. அதேபோல், அப்போதைய திட்டக்குழுவில் உறுப்பினராக இருந்த பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சனின் பங்கு குறித்தும் சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவர்களில் யாரேனும் இந்தக் கொள்முதல் நடவடிக்கைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட்டார்களா? பரிந்துரைகள் வழங்கப்பட்டனவா? கொள்முதல் முடிவுகளை எடுப்பதில் ஏதேனும் செல்வாக்கு செலுத்தப்பட்டதா?

இவை அனைத்தும் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டியவை.

‘நிழல் முதலமைச்சர்’ என்று விமர்சிக்கப்பட்ட உதயசந்திரன்!

இந்த விவகாரத்தின் அரசியல் பரிமாணத்தில் அதிகம் பேசப்படும் பெயர்களில் ஒன்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி உதயசந்திரன். சிலர் அவரை ‘நிழல் முதலமைச்சர்’ என்றுகூட விமர்சித்தனர். நூலகத் துறை தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகளில் அவருக்கு ஏதேனும் தொடர்பு இருந்ததா?

உதயசந்திரன்
உதயசந்திரன்

முதலமைச்சருக்குத் தெரியாமல் நடந்ததா இத்தனை கோடி ரூபாய் விவகாரம்?

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு நிர்வாகத்தில் கோப்புகளை நேரடியாக ஆய்வு செய்வதிலும், அதிகாரிகளின் விளக்கங்களைக் கேட்பதிலும் காட்டிய அணுகுமுறை குறித்து அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.

ஒரு துறையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கொள்முதல் நடவடிக்கைகள் நடைபெற்றிருந்தால், அதன் விவரங்கள் அரசின் உயர் நிர்வாகத்துக்குச் சென்றிருக்க வேண்டாமா? நிதி ஒதுக்கீடு, கொள்முதல் அனுமதி, விநியோகச் சான்றுகள் எனப் பல கட்டங்களில் பதிவுகள் இருந்திருக்க வேண்டுமே?

அப்படியானால், இவ்வளவு பெரிய விவகாரம் ஆட்சியின் உயர் மட்டத்துக்குத் தெரியாமலேயே நடந்ததா? அல்லது தெரிந்தும் கவனிக்கப்படாமல் விடப்பட்டதா?

அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் தவெக அரசின் சோதனை!

நூலக முறைகேடு விசாரணை என்பது தவெக அரசுக்கு ஒரு முக்கியமான நிர்வாகச் சோதனையாக மாறியுள்ளது. முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வருவதாகக் கூறும் அரசு, விசாரணையை எவ்வளவு தூரம் முன்னெடுத்துச் செல்லத் துணியும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள கேள்வி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.