புத்தகங்கள் – அறிவின் முதலீடு !
ஏழு வருடங்களாகக் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேமித்து, ரூ75,000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். ஏனென்றால், எனக்கு கார், பைக், பணம், அதிகாரத்தைவிட புத்தகங்களே உயர்ந்த சொத்து. நான் வாங்கிய புத்தகங்கள் என் சிந்தனையையே மாற்றியிருக்கின்றன. இன்று நான் கற்றுக்கொள்வது ஒன்றுதான்: இந்த உலகத்தில் நாம் யார் என்பதே நமக்குத் தெரியாது.
அப்படியிருக்க, மற்றவர்களின் வார்த்தைகளுக்கும், குடும்பப் பிரச்சினைகளுக்கும், உறவுகளின் சண்டைகளுக்கும் பதில் சொல்லி நேரத்தை வீணாக்குவதில் என்ன அர்த்தம்? பணத்தால் வாங்கும் பொருட்கள் வாழ்க்கையை வசதியாக்கும். ஆனால், புத்தகங்களால் பெறும் அறிவு வாழ்க்கையைக் காணும் விதத்தையே மாற்றும். புத்தகங்கள் மட்டுமே ஒருவன் யார் என்பதை உணர்த்தும்.”
இன்று நான் யாருடைய வார்த்தைக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத இடத்தில் இருக்கிறேன் என்றால், அதற்குக் காரணம் என் மௌனம் அல்ல, நான் கற்றுக்கொண்ட அறிவு. புத்தகங்கள் கற்றுக்கொடுத்த பிறகு, உலகம் பிரச்சனையாக தெரிவதில்லை; புரியாத மனிதர்களின் வாழ்க்கைதான் ஒரு வேடிக்கையாக தெரிகிறது.
G.அசோக்





Comments are closed, but trackbacks and pingbacks are open.