Thursday, November 19, 2026 | 6:09 PM IST

காசாவில் குழந்தைகளுக்கு எதிர்காலம் உண்டா?

பாலஸ்தீனம் – ‘காசா’வில் 20,000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். 60,000 குழந்தைகளை தாய், தந்தை அல்லது இருவருமே இல்லாத நிலைக்கு இஸ்ரேல் தள்ளியுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசாவில், இஸ்ரேல் நடத்திவரும் இனப்படுகொலைப் போர், குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பறித்துவிட்டது; குடும்பங்களைச் சிதைத்துவிட்டது.

தங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் கைகொடுத்து வழிநடத்தியிருக்க வேண்டிய பெற்றோர்கள் இல்லாத நிலையில், பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் அனாதைகளாக, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இப்போது குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில் – இடப் பெயர்வும் அவர்கள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மிக மோசமான சூழல்களும் – அந்தக் குழந்தைகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பைக்கூட அச்சுறுத்துவதாக உள்ளன.

 – குண சந்திரசேகர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.