Thursday, November 19, 2026 | 6:11 PM IST

அங்குசத்தின் இந்த வார பிளாஸ்ட்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பவர்ஃபுல் (எக்ஸ்) மினிஸ்டர் !

தமிழகத்தில் அடுத்தடுத்து சிறைக்கைதிகள் தப்பியோடிய சம்பவங்களின் எதிரொலியாக, சிறைத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் அதிரடிகளுக்கு பஞ்சமே இல்லையாம்.  சிறைக்கைதிகளின் சார்பில் செயல்படுத்தப்படும் ப்ரீடம் பஜார் போன்ற வணிக ரீதியான முயற்சிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க உத்தேசிக்கப்பட்டிருக்கிறதாம்.  அப்படியாக, மலைக்கோட்டை மாநகரத்தில் சிறைத்துறை சார்பில் பராமரித்து வந்த பெட்ரோல் பங்க் ஒன்றை தற்காலிகமாக மூடியிருந்தார்களாம். தகவல் கேள்விபட்டு மூக்கு வியர்த்த மாவட்டத்தின் முன்னாள் அமைச்சர், பேச வேண்டிய இடத்தில் பேசியிருக்கிறார். இப்போது அந்த பெட்ரோல் பங்க் மூக்கு வியர்த்த முன்னாள் அமைச்சரின் கூட்டுக்குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது கைக்கு மாற்றப்பட்டு, பழையபடி பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறதாம்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

2 கோடிக்கு அறங்காவலர் பதவி !

சமீபத்தில், உச்சநீதிமன்றம் வரையில் பஞ்சாயத்துக்கு போன முருக கடவுளின் கோயிலில், அறங்காவலர் குழு தலைவர் பதவி 2 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறதாம். சென்ற முறையும் தலைவராக இருந்த சுந்தரமானவர்தான் இப்போதும் தலைவராக மீண்டும் தேர்வாகியிருக்கிறாராம். இதற்காக, 2 கோடியை இரண்டு எழுத்து இன்ஷியல் கொண்ட கருப்பு கோட் துறையை கைவசம் வைத்திருக்கும் லோக்கல் அமைச்சரிடம் கொடுத்திருக்கிறாராம். ” தூய சக்தி… தொடவும் விடமாட்டேன். தொட்டவனையும் விடமாட்டேன்” என்றெல்லாம் தலைவா பேசியது எல்லாமே சினிமா டயலாக்குகள்தானா? எனக் கேள்வி எழுப்புகிறார்களாம் ஏரியாவில்.

விஜய்க்கு கமல் வைத்த செக் !

கடந்த 2003 ஆம் ஆண்டு, அப்போது ஜெ. முதல்வராக இருந்த சமயத்தில் “சண்டியர்” என்ற தலைப்பில் படம் எடுக்கப்போவதாக கமலஹாசன் அறிவிக்க கடும் எதிர்ப்புக் கிளம்பியது. குறிப்பாக, டாக்டர் கிருஷ்ணசாமியின் ஆதரவாளர்கள், சாதிய ரீதியில் அந்தப் பெயர் இருப்பதாகக்கூறி கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு, “சண்டியர்” தலைப்புக்கு தடைவிதித்தார் அப்போதைய முதல்வர் ஜெ. வேறு வழியின்றி விருமாண்டி என்ற பெயர் மாற்றத்துடன் படத்தை வெளியிட்டார் கமலஹாசன்.

தற்போது, ஏறத்தாழ 23 வருடங்களுக்குப்பிறகு, மீண்டும் அதே “சண்டியர்” பெயரில் படம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் கமல். மீண்டும் அதே வேகத்தோடு எதிர்ப்பைக்காட்ட கிளம்பிவிட்டது டாக்டர் கிருஷ்ணசாமி குரூப். எங்களுடைய சாதியினரின் ஏகோபித்த ஆதரவில்தான், முதல்வர் நாற்காலியிலே அமர்த்தப்பட்டிருக்கிறார். ஆகையால், இந்த விசயத்தில் எங்கள் பேச்சை கேட்கவில்லை என்றால், எங்கள் சமூகத்தின் எதிர்ப்புக்கு ஆளாக நேரிடும் என்பதாக நேரடியாகவே பேசி வருகிறார்களாம்.

கலைத்துறையின் பிரதிநிதியாக முதல்வர் இருக்கையை அலங்கரிக்கும் ஜோசப்விஜய், சினிமா எனும் கலை படைப்புக்காக, படைப்பு சுதந்திரத்துக்காக நடிகர் கமலின் விருப்பத்தை நிறைவேற்ற துணை நிற்பாரா? இல்லை,  சமுதாய ஆட்களை பகைத்துக்கொள்ளாமல் அவர்களின் ஓட்டுக்களை தக்க வைக்க, டாக்டர் கிருஷ்ணசாமி பக்கம் நிற்கப் போகிறாரா? எந்த முடிவு எடுத்தாலும் சிக்கலும் சேதாரமும் முதல்வர் ஜோசப் விஜய்க்குத்தானாம். நல்லா வச்சாருய்யா, செக்!-னு கமெண்ட் அடிக்கிறார்களாம் கோடம்பாக்கம் ஏரியாவில்.

வரம்பு மீறினாரா உயர்நீதி மன்ற நீதிபதி !

தொடர் சர்ச்சைகளுக்கு பெயர்போன நீதிபதி சமீபத்தில் ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருக்கிறார். சென்ற இடத்தில் நூலக சர்ச்சை தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த விவகாரங்களையெல்லாம் பொதுக்கூட்டத்தில் பேசுவதுபோல பேசியதோடு, அடுத்த விசாரணையில் இதைத்தான் செய்யப்போகிறேன் என்பதாகவும் பேசியிருக்கிறார். கூடவே,  பாவம் கழிய பரிகாரமாக சில நூல்களை பரிந்துரையும் செய்திருக்கிறார். இதனால் கடுப்பான தென் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளரும் எம்.பி.யுமானவர் தனது எதிர்ப்பை நேரடியாகவே தெரிவித்தாராம். மீண்டும் கோபத்தின் உச்சிக்கே போன அந்த நீதிபதி, அந்த எம்.பி.யானவரை தனிப்பட்ட முறையில் தாக்கி சில கருத்துகளை பேசியிருக்கிறாராம். உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரே  இப்படி பேசலாமா? என்ற விவாதம்தான் கடும் பனிக்கு மத்தியிலும் அனல் பறக்க நடந்துகொண்டிருக்கிறதாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ரேஷன் அரிசி – அரசியல் !

தமிழகத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதலை செய்யும் அரசு அதனை குறிப்பிட்ட அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்குமாம். இத்தனை டன் நெல்லுக்கு இத்தனை டன் அரிசியாக அரைத்து தரப்பட வேண்டும் என்பது ஒப்பந்தமாம். ஆனால், பெயருக்குத்தான் இப்படி ஒப்பந்தமேயொழிய, நடப்பதே வேறாம். அரசிடமிருந்து வரும் நெல்லை பதமாக அரைத்து, இதமாக சீல் செய்து மார்க்கெட்டில் நல்ல விலைக்கு விற்று விடுவார்களாம். இதற்கென்றே இருக்கும் ஏஜெண்டுகள் வழியாக, பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை சேகரித்து அதை சுடச்சுட அரைத்த அரிசி போல பேக் செய்து மீண்டும் ரேஷன் கடைகளுக்கே அனுப்பி விடுவார்களாம். அதிகாரிகளும் கட்டிங் வாங்கிக்கொண்டு கண்டுக்கொள்வதில்லையாம். இப்படியான பின்னணியில்தான், அரிசி ஆலை உரிமையாளர்களான தந்தை – தாய் – மகன் ஆகிய மூவரும் குடும்பத்தோடு சிக்கியிருக்கிறார்களாம். ஆல் ஓவர் தமிழ்நாடு இதுதான் கதை. புளுத்த அரிசி என்ற பெயர் பெற்றதுக்கும் இதுதான் காரணம் என்கிறார்கள்.

ஈஷா – ஓயாத சர்ச்சை !

ஈஷா யோகா மையத்தில் தன்னார்வலராக சேவையாற்றி வந்த தென்காசியைச் சேர்ந்த கணேசன் கடந்த 2007 ஆம் ஆண்டு காணாமால் போனதாக சொல்லப்பட்ட நிலையில், சுமார் மூன்று ஆண்டுகளாகியும் கணேசனை கண்டுபிடிக்க முடியாததால், அவரது சகோதரர் திருமலை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். கடந்த 2026 ஜூன் மாதத்தில், 3 மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதாக உறுதியளித்தபடி ஆலந்துறை போலீசார் நடந்து கொள்ளாத நிலையில், வழக்கை கோவை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி, 3 மாதங்களுக்குள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருக்கும் விவகாரம் ஈஷா மையம் சர்ச்சையை மீண்டும் கிளப்பியிருக்கிறது.

தூங்கா நகருக்கு வச்ச குறி !

தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அதே டயலாக்குகளைத்தான் முதலானவர் மீண்டும் மீண்டும் பேசிவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. எந்த விவகாரத்தை எடுத்துக் கொண்டாலும், அதில் மூன்றெழுத்து திராவிட கட்சியின் பெயரை டேமேஜ் செய்து பேசிவருவதோடு, அடுத்தடுத்து வழக்குகளும் பாய்ந்து வருகிறதாம். ஆனால், அதே நேரத்தில் நான்கு எழுத்து திராவிட கட்சி எக்ஸ்-களை யெல்லாம் வலைவீசி பிடித்து வருகிறார்களாம். அவர்கள் மீதான பழைய வழக்குகளை காட்டித்தான் ஆள் பிடிக்கும் வேலையே நடக்குதாம். சமீபத்தில் விஜயமானவரின் வருகையும் அப்படித்தானாம். அடுத்து 5 தலைக்கு டார்கெட்டாம். இந்த டீலிங்குக்கு உடன்படாதவர்களுக்கு காப்பு கன்பார்ம் என்கிறார்கள். முதல் காப்பு தூங்கா நகரத்தின் உதயமானவருக்குத்தானாம்.

சர்ச்சையில் கூட்டணி அமைச்சர்!

அமைச்சராக ஆவதற்கு முன்பாகவே, அவர் கொஞ்சம் ஆக்டிவானவர்தான். ஆதரவு கட்சியாக அமைச்சர் பதவி ஜாக்பாட்டாக கிடைக்க, ஆளைப் பிடிக்க முடியவில்லையாம். இரவிலும் ரெய்டுக்கு போவது; அதிகாரிகளுக்கு வாய்மொழியாக உத்தரவிடுவதெல்லாம்கூட ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்தான், வனப்பகுதியில் அமைச்சர் உலா வந்த வீடியோவும் வைரலாகியிருக்கிறது. புலியை பார்த்து அமைச்சர் ஓடுவதும்; வனப்பகுதியில் உலா வருவதையும் பார்த்த சூழலியல் ஆர்வலர்கள் இது அப்பட்டமான விதிமீறல், வனச்சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என கொந்தளிக்கிறார்கள். தனியார் விடுதியில் தங்கியிருந்தபோது எடுத்த வீடியோ என அமைச்சர் தரப்பில் சமாளிக்க, வீடியோ ஆதாரத்தை வைத்து பேசலாமா? என சவால் விடுகிறார்களாம் சூழலியலாளர்கள். கையைப் பிசைந்து நிற்கிறது, அமைச்சர் தரப்பு.

தேசியப் பறவைக்கே இந்த நிலையா?

மலைக்கோட்டை மாநகரத்தில், ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேசியப் பறவை ஒன்று 4 முட்டையுடன் தத்தளித்திருக்கிறது. பாவப்பட்ட வழிப்போக்கர் ஒருவர் வனத்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அவரிடம் சொல்லுங்கள், இவரிடம் சொல்லுங்கள் என்பதாக இரண்டு, மூன்று அலைக்கழிப்புகளின் முடிவில் ஒருவழியாக வனத்துறை ரேஞ்சருக்கு தகவல் சொல்லியிருக்கிறார். அவரும் இதோ ஆளை அனுப்புகிறேன் என்றிருக்கிறார். ஆனால், வந்து சேர்ந்ததோ வனத்துறைக்கு துளியும் சம்பந்தம் இல்லாத என்.ஜி.ஓ.வை சேர்ந்த தனிநபர். விலங்குகளின் மீதான ஆர்வத்தில் இதுபோல உதவிகளை தொடர்ந்து செய்து வருபவராம். ஆக, மாதா மாதாம் சுளையாக சம்பளம் வாங்கும் வனத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பணியாளர்களும் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள்?

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.