அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிக்கு Rs.80,000 கல்வி சீர் வரிசை வழங்கும் விழா !
பச்சைமலை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிக்கு கல்வி சீர் வரிசை வழங்கும் விழா.( Rs.80,000)
துறையூர்,திருச்சி மாவட்டம், துறையூர் வட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்த பச்சைமலை அமைந்துள்ளது.
பச்சைமலையில் தென்புறநாடு ஊராட்சி டாப் செங்காட்டுப்பட்டியை அடுத்த புத்தூர் மலைக்கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 80 மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
மலைக்கிராமத்தில் படித்து வரும் மாணவ மாணவியர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பொருட்டு சென்னையில் இருந்து அறிவியல் விஞ்ஞானி சண்முகம் அறிவியல் செயல்முறைகளை மாணவ மாணவிகளுக்கு செய்து காண்பித்தார். மாணவர்களின் அறிவுத்திறனை தூண்டும் விதமாக கேள்விகளை எழுப்பி அதற்கு விளக்கமளித்தார்.
துறையூர் புத்தனாம்பட்டி பேராசிரியர் முனைவர் சரவணன் பள்ளியின் முக்கியத்துவம் குறித்து , மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கற்பதன் அவசியம் குறித்து பிசியோதெரபிஸ்ட் Dr.திலக் babu எடுத்துரைத்தார்.
உப்பிலியபுரம் வட்டார வள மையம் ஆசிரியர் பயிற்றுநர் கண்ணன் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்.
சரவணன் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பள்ளி பெயர் கொண்ட ஸ்போர்ட்ஸ் டி சர்ட், விளையாட்டு உபகரணங்களான செஸ் ஃபோர்டு, ஸ்க்கிபிங் கயிறு, வாலிபால், ஃபுட்பால், டென்னிஸ் மட்டை, டென்னிஸ் பால், சிறிய குழந்தைகள் விளையாட்டு பொம்மைகள் ஆகியவற்றை கல்வி சீர் வரிசையாக ரூபாய் 80,000 மதிப்பில் வழங்கினார். மேலும் அவசரத் தேவைகளுக்காக இன்டக்சன் மின்சார அடுப்பு, உடனடி தண்ணீர் சூடாக்கும் கெட்டில் மின் உபகரணம், சில்வர் பாத்திரம் ஆகியவற்றையும் வழங்கினார்.
மலைவாழ் சிறார்கள் மற்றும் மாணவர்களை மகிழ்விக்கும் பொருட்டு திருச்சி தாராநல்லூர் வைரமுத்துவின் வைரம் மேஜிக் ஷோ மற்றும் Toy டான்ஸ் நடைப்பெற்றது. காலை 10.00 – 3.30 மணி வரை மாணவர்கள் மாணவர்களின் கல்வி தாகத்தை விரிவடையச் செய்யும் விதத்தில் ஊக்கப்படுத்தினார்கள்
வந்திருந்த அனைவரையும் தலைமையாசிரியை செல்வமணி வரவேற்றார். ஆசிரியர் மலர்க்கொடி நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன் அருள்குமார் செய்திருந்தனர். குழந்தைகள் நலக் குழு சேர்மன் மற்றும் இளையோர் எக்ஸ்னோரா நிறுவனர் மோகன் ஒருங்கிணைப்பு செய்தார்.