கழிவறையில் ஓடி ஒளிந்த  “கட்டிப்பிடி ” பேராசிரியர்! மதுரை காமராஜர் பல்கலைகழகம்…

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

“என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பேராசிரியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்..” என்று விரியும் பகீர் கடிதமொன்று அங்குசம் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது. தேனியைச் சேர்ந்த ஸ்ரீலெட்சுமி என்ற பெண்மணி எழுதியிருந்த கடிதம் அது. மதுரை காமராஜர் பல்கலைகழகத்தின் ஒரு பிரிவாக தேனியில் செயல்பட்டுவந்த மாலை நேர கல்லூரியில் தான் பணியாற்றியபோது, நேர்ந்த சம்பவம் இதுவென்பதையும் குறிப்பிட்டிருந்தார், ஸ்ரீலெட்சுமி. புகைப்படக் கலைஞரோடு, தேனி ரயில் நிலையத்தில் ஸ்ரீலெட்சுமியை சந்தித்தோம்.
ஸ்ரீலெட்சுமி
ஸ்ரீலெட்சுமி

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

“தேனியில் செயல்பட்டு வரும் மாலை நேரக் கல்லூரியில் ஆசிரியராக, தினக்கூலி அடிப்படையில் 2016-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். காமராஜர் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிய எங்களது பகுதிநேர கல்லூரிக்கு, பொறுப்பு அதிகாரியாக வரலாற்றுத் துறை பேராசிரியர் கணேசன் நியமிக்கப்பட்டிருந்தார். தினசரி வருகைப்பதிவேடு உள்ளிட்ட கல்லூரி நிர்வாகம் தொடர்பான ஆவணங்களை மாதம் ஒருமுறை நேரில் சமர்ப்பித்து அவரிடம் ஒப்புதல் பெற்றாக வேண்டும். தற்காலிக பணி என்பதால், ஆண்டுக்கு ஒருமுறை எனது பணியை நீட்டிப்பு செய்து கொள்ளவும் அவர்தான் ஒப்புதல் வழங்க வேண்டும். இந்நிலையில்தான், தொடர்ந்து பணி நீட்டிப்பு செய்து தர ஐம்பதாயிரம் ரூபாய் வேண்டுமென்றார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில், அவர் கேட்ட பணத்தையும் கொடுத்தேன். பணத்தை வாங்கிக் கொண்டும் சொன்னபடி, பணி நீட்டிப்பு செய்யாமல், காலந்தாழ்த்தி வந்தார். கேட்டதற்கு, ’காசு மட்டும் கொடுத்தால் போதுமா?’ என்று சாடையாக பேசி வந்தார். அப்போது, இதன் அர்த்தம் புரியவில்லை.

வீடியோ லிங்: 

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

ஒருநாள், வழக்கமான அலுவல் பணி நிமித்தமாக, அவரை சந்திக்க சென்றேன். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது. என்னிடம் பேசிக்கொண்டே, அறையின் ஜன்னல் கதவுகளை சாத்தினார். ’என்ன சார் கிளம்பி விட்டீர்களா?’ என்று நான் கேட்டு முடிப்பதற்குள்ளாகவே, சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் பின்புறமாக வந்து என்னை கட்டிப்பிடித்து, பலவந்தமாக முத்தம் கொடுத்தார். ஆத்திரத்தில் அங்கேயே கத்திவிட்டேன். பதறியடித்து, அவரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டு வெளியில் ஓடி வந்துவிட்டேன்.  சத்தம் கேட்டு மற்ற துறை பேராசிரியர்கள் கூடி விட்டார்கள். நடந்ததை கூறினேன். அவர்களும் எனக்கு ஆறுதல் சொல்லி பதிவாளரிடம் புகார் கொடுக்க சொல்லி அறிவுறுத்தினார்கள். அப்போதிருந்த பதிவாளரிடமும், துணைவேந்தரிடமும் இதுகுறித்து எழுத்துப்பூர்வமான புகார் கொடுத்தும் இதுவரை எந்தப் பதிலுமில்லை.  சம்பவம் நடந்த பிறகு, தொலைபேசியில் தொடர்புகொண்ட பேராசிரியர் கணேசன், ‘உன்மீது இருந்த மோகத்தில் இவ்வாறு செய்து விட்டேன். வெளியில் யாரிடமும் சொல்லி விடாதே. பிரச்சினையை பெருசாக்காதே’ என்று கெஞ்சினார்.
மதுரை பல்கலை கழகத்தில் நடைபெற்ற பாலியல் அத்துமீறல்கள் பற்றி நீங்கள் எழுதியிருப்பதால், உங்கள் வழியாக இந்த தகவலை சொல்ல விரும்பினேன். எனது புகைப்படத்தை வெளியிட்டு இந்த செய்தியை போடுங்கள். அப்பொழுதுதான், வெளியில் சொல்ல முடியாமல் தனக்குள் புழுங்கித் தவிக்கும் பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பேச முன்வருவார்கள்.” என தீர்க்கமாக பேசினார்,  ’தைரிய’-லெட்சுமி.
பேராசிரியர் கட்டிப்பிடி கணேசன்
பேராசிரியர் கட்டிப்பிடி கணேசன்
விளக்கம் கேட்க, பேராசிரியர் கணேசனை சந்திக்க சென்றோம். நாம் அலுவலகம் சென்றிருந்த சமயம், அனைத்து ஜன்னல்களும் சாத்தியே இருந்தது. ”பழக்க தோஷத்துல, பின்னாடி ஏதும் தட்டிவிடாதீர்கள்” என்றோம் தமாசாக. அவரும் வாய்விட்டு சிரித்தபடியே, ”சொல்லுங்கள்” என்றார். ஸ்ரீலெட்சுமி முன்வைத்த குற்றச்சாட்டு களையெல்லாம், அவர்முன் கொட்டினோம். வியர்த்து விறுவிறுத்தவர் விர்ரென்று எழுந்தார், ”வயிற்றை கலக்குகிறது, கழிவறை சென்று வருகிறேன்” என்று சொல்லி நடையை கட்டி விட்டார்.  திரும்ப வருவாரென்று நாம் காத்திருக்க. “நான் யார் தெரியுமா? பத்திரிக்கை துறையில், அவரைத் தெரியுமா? இவரைத் தெரியுமா?” என்று வீரவசனம் பேசியபடியே ஒருவர் வந்தார். ”முதலில் நீ யாரப்பா?” என்றோம். ”டூரிசம் டிபார்ட்மெண்ட் புரொபசர் ராஜேஷ்” என்றார். ”நாங்கள் பேராசிரியர் கணேசனைத்தான் பார்க்க வந்தோம் உங்களை அல்ல”, என்றோம். ”அவர் உங்களிடம் பேச மாட்டார். விவரம் வேண்டுமெனில் துணைவேந்தரிடம் போய் கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார், வந்த விரைப்பு சற்றும் குறையாமலே! கழிவறை சென்று வருகிறேன் என்று சொல்லி சென்ற மனுசன், கக்கூஸ்ல ஒளிஞ்சிகிட்டே எல்லாத்துக்கும் போன போட்டுடாப்ள போல! கடைசி வரைக்கும் திரும்ப வரவே இல்லை. வேறுவழியின்றி, துணைவேந்தரை சந்திக்க சென்றோம். உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதாக சொன்னார் ஊழியர் ஒருவர். 

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்
”சாமான்ய பெண்களுக்கு என்றில்லை; பெண் போலீசு உயர் அதிகாரி ஒருவருக்கே பாதுகாப்பு இல்லை என்பதை டி.ஜி.பி. மோகன்தாஸ் விசயத்தில் பார்த்தோம். ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கு நிலுவையில்தான் உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் அந்தந்த துறை சார்ந்து விசாக கமிட்டி அமைத்து விசாரிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் முறையாக நடப்பதில்லை. ஸ்ரீலெட்சுமி விவகாரத்தைப் பொறுத்தவரையில், தென்மண்டல டி.ஐ.ஜி. பொன்னியிடம் புகார் கொடுக்க சொல்லுங்கள். வழக்கறிஞராக, அந்தப் பெண்ணுக்குத் தேவையான சட்ட உதவிகளை நான் செய்கிறேன்.” என்றார், மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஸ்டாலின்.
ஏடிஎஸ்பி வெற்றிச்செல்வம்
ஏடிஎஸ்பி வெற்றிச்செல்வம்
காமராஜர் பல்கலையில் நடைபெற்ற அட்டூழியங்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில், போலீசில் புகார்கள் கொடுத்தி ருக்கிறார்களா? என்ற கேள்வியோடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின், கூடுதல் காவல் துணைகண்காணிப்பாளர், வெற்றிச் செல்வம் அவர்களை சந்தித்தோம். “மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஜெகன் கருப்பையா போக்சோவில் கைது செய்யப்பட்டார். தேனியைச் சேர்ந்த மாணவி ஒருவர், விடுதியிலிருந்து போனில் பேசியபடியே கீழே விழுந்து இறந்துபோனது குறித்த வழக்கு நாகமலை புதுக்கோட்டை போலீசார் விசாரணையில் இருக்கிறது. பேராசிரியர் சண்முகராஜா மீது, பி.சி.ஆர். கேஸில் வழக்கு பதியப்பட்டுள்ளது. இவற்றை தவிர, வேறு எந்த வழக்குகளும் எங்களது கவனத்திற்கு இதுவரை வரவில்லை.” என்கிறார், அவர்.
மருத்துவர் சரவணன்
மருத்துவர் சரவணன்
”ஒரு பெண் நாயை ஆண் நாய் பார்த்ததும் மோப்பம் பிடித்து பின்னே செல்கிறது. அதுபோல்தான், ஒரு பெண்ணை பார்க்கும் விதத்திலிருந்து மனதில் ஒரு பதிவு உருவாகிவிடுகிறது. அடுத்து அந்த பெண்ணை பார்க்கும்போது, ஈர்ப்பு ஏற்படுகிறது. இது இயல்பான ஒன்று. அந்த ஒரு கணம், அந்த நிலையை நிதானித்து சகோதரி உறவு முறையில் குடும்ப உறவாக பேசி பழகிவிட்டால் அவனது பார்வை மாறிவிடும் வாய்ப்பு இருக்கிறது. பெண் மீதான வக்கிரபுத்தி உள்ளவர்களிடம் இந்த மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது” என்கிறார், மனநலம் மற்றும் பொது மருத்துவர் சரவணன்.

வீடியோ லிங்: 

– ஷாகுல், படங்கள் : ஆனந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.