கையை கடித்துவிட்டார் எம்.எல்.ஏ.வின் மனைவி ! போலீசு புகாரான குடும்ப பஞ்சாயத்து ! மதுரை பரபர !

குடும்ப பிரச்சனையில் திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி, எம்.எல்.ஏ. வின் தங்கையின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கையை கடித்துவிட்டார் எம்.எல்.ஏ.வின் மனைவி ! போலீசு புகாரான குடும்ப பஞ்சாயத்து ! மதுரை பரபர !

துரை திமுக மாணவர் மாவட்ட செயலாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் மனைவி தன் கையை கடித்து விட்டார் என எம்எல்ஏ- வின் தங்கை போலீசில் புகார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மதுரை திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி ரோட்டில் வசித்து வரும் திமுக பிரமுகர் கோபால்சாமி மகள் காந்திமதி. இவர் முன்னாள் திருப்பரங்குன்றம் நகராட்சி சேர்மனாக இருந்தார். இவர் நிலையூரில் நடத்தி வரும் குவாரி லைசன்ஸ் முடிந்த நிலையில் உள்ளது. இவரது அண்ணன் தளபதி மதுரை வடக்கு தொகுதி திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர். அவரது மகன் அன்பு என்ற  துரை கோபால்சாமி  திமுக கட்சியின் மாநில மாணவரணி செயலாளராக இருந்து வருகிறார். அன்பு தனது அத்தை வைத்திருக்கும் குவாரியில் அருகில் குவாரி வைப்பதற்கு பணிகளை மேற்கொண்டு வந்தார். இதன் காரணமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கடந்த பத்து நாட்களாக நீடிப்பதால், எம்எல்ஏ தளபதி தங்கையை வீட்டுக்கு வருமாறு போன்  மூலமாக அழைத்துள்ளார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எம்.எல்.ஏ. தளபதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அதன் பேரில் தங்கை காந்திமதி அவரது மகள் மற்றும் கணவர் காந்திமதியின் அக்கா மகன் சீனிவாசன் ஆகியோர் சென்றுள்ளனர். அங்கே பேசிக் கொண்டிருந்தபோது காந்திமதியை எம்.எல்.ஏ. தளபதியின்  மனைவி வீரலட்சுமி என்ற சாவித்திரி  இடது கையின் பின்புறம் கடித்து விட்டார். இதனால், காந்திமதி அலறிய போது வெளியே இருந்த அண்ணன் பாரி மற்றும் அங்கிருந்தவர்கள் காந்திமதியை அழைத்து சென்றனர். இந்நிலையில் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி மற்றும் குடும்பத்தினர் தங்களை மிரட்டி வருவதாகவும், அவரது மனைவி தன் கையை கடித்து விட்டதாகவும் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். மேலும் திமுக எம்.எல்.ஏ தளபதி குடும்பத்தினரும் காந்திமதி மீது புகார் செய்துள்ளார்கள். இது குறித்து திருப்பரங்குன்றம் போலீசார் இருவரிடமும் புகாரை பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப பிரச்சனையில் திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி, எம்.எல்.ஏ. வின் தங்கையின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஷாகுல், படங்கள்: ஆனந்த், மதுரை.

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.