‘சந்திரமுகி-2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

‘சந்திரமுகி-2’ ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் !

லைக்காவின் ‘சந்திரமுகி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு !  ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் முதல் பாடல் வெளியீடு லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தில் இடம்பெற்ற ‘ஸ்வகதாஞ்சலி…’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது.

Sri Kumaran Mini HAll Trichy

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இதில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கணா ரனாவத், ‘வைகைப்புயல்’ வடிவேலு, மகிமா நம்பியார், லஷ்மி மேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் .

'சந்திரமுகி-2'
‘சந்திரமுகி-2’

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைத்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டிருக்கிறார். ஆக்சன் + காமெடி + ஹாரர் ஜானரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமாரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தில் வேட்டையனாக தோன்றும் ராகவா லாரன்ஸின் கேரக்டர் லுக்கும், சந்திரமுகியாக நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தின் கேரக்டர் லுக்கும் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஸ்வகதாஞ்சலி …’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் மயக்கும் இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடலை பாடலாசிரியர் சைதன்ய பிரசாத் எழுத, பின்னணி பாடகி ஸ்ரீநிதி திருமலா பாடியிருக்கிறார்.

இந்தப் பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத் ஆடும் நடனத்தை டான்ஸ் மாஸ்டர் கலா வடிவமைத்திருக்கிறார். இந்தப் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் இணையத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைக்கா- ராகவா லாரன்ஸ்- கங்கணா ரணாவத்- பி வாசு -எம். எம். கீரவாணி கூட்டணியில் தயாராகி, ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகளில் உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.