துறையூரில் இளைஞர் சாவு – உறவினர்கள் சாலை மறியல் !
துறையூரில் இளைஞர் சாவு – உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு.
துறையூரில் இளைஞர் ஒருவர் இறந்தது தொடர்பாக போலீஸார் முறையாக விசாரிக்கவில்லை என உறவினர்கள்திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துறையூர் அருகேயுள்ள தெற்கியூரைச் சேர்ந்தவர் துரைசாமி மகன் ஆனந்தன் (35). சென்ட்ரிங் மேஸ்திரியாக பணி செய்கிறார். நேற்று இரவு இவர்இருசக்கர வாகனத்தில் சென்றதாகவும்சென்றவர் வீடு திரும்பாததால் அவரை தேடி அவரது உறவினர்கள் பார்த்த பொழுது சாலையின் ஓரமாக விழுந்து இறந்து கிடந்தது தெரிய வந்தது மேலும் அவர் இறந்தது சந்தேகத்துக்குரியதாக உள்ளதாகவும் மேலும் இவர் சிலரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சாவில் மர்மம் உள்ளதாக இறந்து போன ஆனந்தனின்உறவினர்கள் துறையூர் போலீஸில் சந்தேகம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக உடற்கூராய்வு மற்றும் சில விசாரணைகளை செய்து அதன் அறிக்கை கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக துறையூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கூறி வந்த நிலையில் ,விசாரணை தாமதமாவதாகக் கூறி இறந்தவரின் உறவினர்கள் சிலர் காவல் நிலையம் முன்பு திருச்சி சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த முசிறி டிஎஸ்பி யாஷ்மின், துறையூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீஸார் மறியலில் ஈடுபட்டோரிடம் பேசியும் மறியல் கைவிடப்படவில்லை.
தொடர்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மறியலில் ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் காவல் நிலையத்திற்குள் அழைத்துச் சென்று அமரச் செய்து பேசியும் பதட்டத்தை தணித்தும் , விசாரணை அறிக்கை வந்த பின்பு தான் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அதுவரை இது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது எனவும் எச்சரித்தும் அனுப்பினர். இறந்தவரின் உறவினர்களின் சாலை மறியலால் திருச்சி- துறையூர் சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.