பிஷப் ஹீபர் கல்லூரியில் சமூகப் பணித் துறை கதார்சிஸ் தேசிய அளவிலான கலாச்சார போட்டி !
பிஷப் ஹீபர் கல்லூரியில் தேசிய அளவிலான கலாச்சார போட்டி !
பிஷப் ஹீபர் கல்லூரியின் சமூகப் பணித் துறை தொடர்ந்து 16 வது ஆண்டாக கதார்சிஸ் எனும் வளரும் சமூகப் பணியாளர்களுக்கான தேசிய அளவிலான கலாச்சார போட்டியை நடத்தியது. நிகழ்ச்சிக்கு பிஷப் ஹீபர் கல்லூரியின் முதல்வர் பால் தயாபரன் தலைமை தாங்கினார்.
இந்தியாவின் வாட்டர் வாரியர். நிமல் ராகவன் மற்றும் இந்தியாவில் வளர்ச்சி குறைபாடுகள் உள்ள தனிநபர்களுக்காக செயல்படும் மன்னாவின் நிறுவனர் கேண்டிடா ப்ரீதம் ஆகியோர் தொடக்க உரையாற்றினார். இப்போட்டியில் தமிழகம் முழுவதிலும் உள்ள 21 கல்லூரிகளைச் சேர்ந்த 468 சமூகப் பணி மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிறைவு விழாவிற்கு பிஷப் ஹீபர் கல்லூரி துணை முதல்வர் (சுயநிதி) சத்தியசீலன் தலைமை வகித்தார். சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் நீதிபதி திரு. பி.பாலசுப்ரமணியம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசுகளுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன
சென்னை டாக்டர் அம்பேத்கர் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியைச் சேர்ந்த கார்த்திக் ரோஷன் முறையே மிஸ் மற்றும் மிஸ்டர் கதார்சிஸ் பட்டத்தை வென்றனர். ஒட்டுமொத்த வெற்றியாளர் கோப்பையை மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி (அரசு உதவி பெறும் பிரிவு) வென்றது
சமூகப் பணித் துறைத் தலைவர் கார்டர் பிரேம்ராஜ் வாழ்த்துரை வழங்கினார், நிகழ்ச்சியை வெற்றிகரமாக்கிய பங்கேற்பாளர்களுக்கு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் புளோரன்ஸ் ஷாலினி நன்றி கூறினார்.