கூட்டணியை உடைத்த பிஜேபி அண்ணாமலையின் அவதூறு பொய்கள் – அரசியல் களத்தில் அடுத்து ! 

- ஆதவன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அதிமுக – பாஜக கூட்டணி முறிந்தது – அரசியல் களத்தில் அடுத்து !

கடந்த 15ஆம் தேதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேரறிஞர் அண்ணா மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டைக் கூறினார். அதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று அதிமுக செய்தி தொடர்பாளர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார். “நான் கூறியது வரலாற்று உண்மை. மன்னிப்பு கேட்கமுடியாது” என்று அண்ணாமலை கூறியவுடன், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது கட்சியின் முடிவு” என்று அறிவித்தார். ஜெயக்குமார் அறிவிப்பை அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்று எடுத்துக்கொள்ள முடியாது, கட்சியின் பொதுச்செயலாளர் கட்சியின் லெட்டர் பேடில் அறிவிக்கவேண்டும் எனப் பாஜக முன்னணித் தலைவர்கள் கட்டமாகப் பதில் அளித்தனர்.

ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியை பின்தொடர.....

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் இராஜூ,“அதிமுக – பாஜக கூட்டணியில் பிரச்சனை இல்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை நாங்கள் பிரதமராக ஏற்கிறோம். 2026இல் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கவேண்டும்” என வேண்டுகோளை முன்வைத்தார். இதற்குப் பதில் அளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை,“மோடியை பிரதமராக ஏற்றதற்கு நன்றி. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமுடியாது. பாஜக ஆட்சிக்கு வருவதையே விரும்புகிறது. பிரச்சாரம் செய்து வருகிறது” என்று உறுதிபடக் கூறினார்.

குறைவான முதலீட்டில் நிலையான வருமானம் -

அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் நீடித்துக்கொண்டே இருந்தது. அதிமுகவின் முன்னணி தலைவர் பி.கே.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் நட்டாவைச் சந்தித்து, அண்ணாமலையின் பேச்சுகள் கூட்டணிக்கு நலம் பயப்பதாக இல்லை என்றும், அண்ணாமலையைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கினால் மட்டுமே கூட்டணி என்று கூறினார்கள். இதனையடுத்து 24.09.2023ஆம் நாள் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,“அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. மீண்டும் உறுதிப்படுத்துகிறேன். மேலும்,“25.09.2023ஆம் நாள் மாலை சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம்” என்று கூறினார்.

அண்ணாமலை - எடப்பாடி
அண்ணாமலை – எடப்பாடி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

25.09.2023ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், கட்சித் தொண்டர்களின் எண்ணப்படி பாஜக தலைமையில் உள்ள தேசிய முற்போக்கு கூட்டணியிலிருந்து அதிமுக இன்று முதல் விலகிக் கொள்கிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டமன்றத் தேர்தல்களில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. இம் முடிவைக் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதிமுக தலைமையகத்தில் கூட்டணி முறிவு தொடர்ந்து, தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கூட்டணி முறிவு குறித்துப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர்,“கூட்டணி முறிவு குறித்து நாங்கள் எந்தக் கருத்தையும் தெரிவிக்கமுடியாது. தேசியத் தலைமைதான் கருத்து தெரிவிக்கும்” என்று செய்தியாளர்களிடம் கூறினர். இராமநாதபுரம் பாஜக அலுவலகத்தில் கூட்டணி முறிவுக்குப் பட்டாசு வெடித்துப் பாஜக தொண்டர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திமுக அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசும்போது,“அதிமுக பாஜக கூட்டணி இல்லை என்று இப்போது கூறுகிறார்கள். தேர்தல் வந்தால் கூட்டணி அமைத்துக்கொள்வார்கள். இது ஒரு நாடகம்” என்று வருணித்தார். அதிமுக – பாஜக கூட்டணி முறிவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.“அதிமுக எடுத்துள்ள நல்ல முடிவு” என்று வரவேற்றுள்ளார்.

சீமான்
சீமான்

அதிமுக – பாஜக கூட்டணி முறிவு என்பது தமிழ்நாடு அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் விலகி அதிமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ளுமா? பாஜக தலைமையில் தமிழ்நாட்டில் புதிய கூட்டணி உருவாகுமா? அதில் எந்தக் கட்சிகள் இடம்பெறும் என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுகவோடு நாம் தமிழர் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்புகள் அதிகம் என்று மூத்த பத்திரிக்கையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - மோடி - பன்னீர் செல்வம்
எடப்பாடி பழனிசாமி – மோடி – பன்னீர் செல்வம்

பாஜக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், வே.சசிகலா ஆகியோருடன் கூட்டணி வைக்குமா? என்ற கேள்வியும் எழுகிறது. அண்ணா, புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை இழிவு செய்து  அண்ணாமலை பேசிய அவதூறு பொய்களின் தொடர்பாகவே கூட்டணி முறிந்துள்ள நிலையில், ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோர் பாஜகவோடு கூட்டணி சேர்வதில் ஒரு தர்மசங்கடமும் உள்ளது. பாஜக தேசியத் தலைமை தெரிவிக்கும் கருத்தை ஒட்டியே கூட்டணி முறிவு இறுதியாகும். ஒருவேளை அண்ணாமலையை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினால், அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? கூட்டணி தொடரவே வாய்ப்புள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.