குழந்தை உரிமைகள் பாதுகாப்பு முகாம் ! பொது மக்களிடமிருந்து சுமார் 300 மனுக்கள் !
துறையூர் அருகே குழந்தை உரிமைகள் பாதுகாப்பு முகாம்
திருச்சி மாவட்டம்துறையூர் அருகே உள்ள இமயம் பாலிடெக்னிக் கல்லூரியில் திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மற்றும் சிறப்பு அமர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார் இமயம் கல்லூரி தாளாளர் ஆண்டி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் ,மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி வரவேற்றார் .
புதுடெல்லியில் இருந்து வந்திருந்த தேசிய குழந்தை உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் மோகன் சிறப்புரையாற்றினார்.முகாமில் குழந்தைகள் கல்வி உதவித்தொகை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான அடையாள அட்டை மற்றும் உதவித்தொகை பிறப்புச் சான்றுவாரிசு சான்றிதழ் காப்பீட்டு திட்ட அட்டை குடும்ப அடையாள அட்டை மருத்துவ உதவி மற்றும் குழந்தைகளுக்கான தொழில் பயிற்சி உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைதேசிய குழந்தை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் திவ்யா குப்தா, குழந்தைகளின் பெற்றோரிடம் நேரடியாக விசாரித்து மனுக்களை பெற்றார்.
பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய தீர்வு காண துறை சார்ந்த அலுவலர்களுக்கு மனுக்களை ஒதுக்கீடு செய்து தீர்வு காண அறிவுரை வழங்கினார்..மேலும் முகாமில் பங்கேற்ற பொது மக்களிடமிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சமூக நலத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆகியவற்றின் சார்பில் சிறப்பு கண்காட்சி இடம்பெற்றிருந்தன.
மேலும் இம்முகாமில் ஆதார் ஆதார் கார்டு, முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டைகள் பெறுவது குறித்த முகாம்கள் நடைபெற்றது.மாவட்ட அளவில் அரசு துறை அதிகாரிகளும் துறையூர் வட்டார அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களும் முகாமில் பங்கேற்றனர்.முடிவில் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பிரபு நன்றி கூறினார்.
-ஜோஸ்