வாடகை வீட்டில் ரஜினி சாமி கோவில் – நாள்தோறும் பால் அபிசேஷகம் ! வீடியோ
வாடகை வீட்டில் ரஜினி சாமி கோவில் – நாள்தோறும் பால் அபிசேஷகம் !
திருமங்கலத்தில் மூன்றடி உயரத்தில், 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினி சிலை பிரதிஷ்டை – கடந்த ஒரு வருடங்களாக ரஜினிக்கு கோவில் அமைத்து வழிபட்டு வரும் ரஜினி ரசிகரின் வினோத வழிபாடு.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் கார்த்திக் என்ற இளைஞர் திருமண தகவல் மையம் தொழில் நடத்தி வருகிறார். இவர் தீவிர ரஜினி ரசிகர் ஆவார் . இந்நிலையில் வாடகை வீட்டில் வசித்து வரும் கார்த்திக், தனது வீட்டின் ஒரு அறையை ரஜினிக்கு கோவிலாக வடிவமைத்து இருக்கிறார்.
வீடியோ லிங்
ரஜினியின் திரைப்படங்கள் அனைத்திலும் உள்ள காட்சிகளை அறையினுள் ஒட்டி வைத்தும், நாள் தோறும் ரஜினிக்கு தீபாராதனை, அபிஷேகம் செய்து வரும் ரசிகரான கார்த்திக் மூன்றடி உயரத்தில் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினிக்கு சிலை தயாரித்து இருக்கிறார்.
அந்த சிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது போன்று ரஜினி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து , பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து, ரசிகரான கார்த்திக் பால், பன்னீர் , இளநீர், சந்தனம் , மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார்.
அவருக்கு ஒரு உறுதுணையாக பெற்றோர்களும் அவரது மனைவியும் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே உயிருடன் இருக்கும் நடிகர் ரஜினிக்கு கருங்கல்லினால் ஆன சிலையை அமைத்து, நாள்தோறும் அதற்கு அபிஷேகமும் , தீபஆராதனைகளும் செய்து வரும் கார்த்திக்கின் செயல் வினோதமாக பார்க்கிறார்கள் ஏரியா மக்கள்.
– ஷாகுல்
வீடியோ – ஆனந்த்
வீடியோ லிங்