அங்குசம் பார்வையில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ‘ எப்படி இருக்கு ?
அங்குசம் பார்வையில் ‘ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது ‘ எப்படி இருக்கு ?
தயாரிப்பு: ‘அக் ஷயா பிக்சர்ஸ் ‘ ராஜன்.டைரக்டர்: ரமேஷ் வெங்கட். இசை: கெளசிக் கிரிஷ், ஒளிப்பதிவு: ஜோஷுவா ஜெ.பெரேஸ், எடிட்டிங்: கணேஷ் சிவா ஆர்ட் டைரக்டர்: வி.சசிக்குமார். பிஆர்ஓ: சதீஷ் குமார். ஆர்ட்டிஸ்ட்ஸ்: சத்தியமூர்த்தி, விஜயகுமார் ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், ரித்விகா, ஜார்ஜ் மரியான், முனீஸ்காந்த், ஷா ரா, அப்துல், கோபி அரவிந்த், ஹரிஜா, தர்மராஜ், கிரேன் மனோகர்.
படத்தின் முதல் காட்சி. ஜார்ஜ் மரியானுக்கு டெலிபோன் ( கதை 1993-ல் ஆரம்பிக்குது) வந்ததும் ஆலயம் என்ற பெயரில் இருக்கும் சினிமா தியேட்டருக்குச் செல்கிறார். ஆளே இல்லாத தியேட்டரில் பேய்ப்படம் ஓடுது. இதைப் பார்த்து அலறியடித்து வெளியே ஓடி வருகிறார். ஆனாலும் அவரால் தப்பிக்க முடியவில்லை. கட் பண்ணினா இப்ப இருக்கும் சிச்சுவேஷன். சினிமா டைரக்டர் ஆகவேண்டும் என்ற கனவு நிறைவேறாமல் ஊருக்கே திரும்ப முடிவெடுத்து பஸ்ஸ்டாண்ட் போகிறார்கள். கடைசி பஸ்ஸும் போய்விட்டதால் (இது நடப்பது சென்னையிலாம்) செகண்ட் ஷோ பாரக்க அதே ஆலயம் தியேட்டருக்குப் போகிறார்கள்.
அதே பேய்ப்படம் ஓடுது. அவர்களும் பேயிடம் மாட்டிக் கொண்டு ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற கண்டிஷனில் ( டைட்டில் கனெக்ட் ஆகிருச்சுல்ல) இருக்கிறார்கள். இத்தோடு இடைவேளை விடுகிறார்கள். அதன் பின்னரும் நாம் தியேட்டரைவிட்டு ஓடவும் முடியாமல், மீண்டும் உள்ளே போனோம். இதுக்குப் பிறகு தான், ” நாங்க ஏன் செத்தோம், யாரால செத்தோம், எப்படி பேயானோம்” என ஷா ரா, ரித்விகா, அப்துல் உள்ளிட்ட நான்கு பேய்களே பேய்க்கதை ஃப்ளாஷ் பேக்கை சொல்கின்றன.
அந்த ஃப்ளாஷ் பேக்கில் வரும் அந்த தியேட்டர் ஓனரான முனீஸ்காந்தை கூட்டிக்கொண்டு வாங்க. நாங்க அவனை குளோஸ் பண்ணினால் தான் நீங்க வெளியே போக முடியும் என கண்டிஷன் போட்டு சிலரை வெளியே அனுப்புகிறது அந்த நான்கு பேய்களே. வெரி பிக் மிராக்கிளா இருக்குல்ல. படத்தை ஓரளவாவது பார்க்க வைப்பது மியூசிக் டைரக்டரும் கேமரா மேனும் சவுண்ட் மிக்ஸிங் பண்ணிய வரும் தான். தியேட்டர் மாடியில் இருந்து கீழே ஓடி வருகிறார்கள். கீழே இருந்து மேலே ஓடுகிறார்கள்.
அப்புறம் வெளியே ஓடி வருகிறார்கள். மீண்டும் உள்ளே ஓடுகிறார்கள். மொத்தப் படமும் இப்படியே தான் ஓடுகிறது. படத்தின் க்ளைமாக்ஸில் முனீஸ்காந்தை சேரில் கட்டிப் போட்டு, ” அவன் படத்தை அவனே பார்த்து சாகட்டும்” என்ற டயலாக் வைத்திருக்கிறார் இயக்குநர் ரமேஷ் வெங்கட். இத்துடன் விமர்சனம் நிறைவு பெற்றது.
– மதுரை மாறன்