கலைத்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய அரசுப்பள்ளி மாணவி!
கலைத்திருவிழாவில் நாதஸ்வரம் வாசித்து அசத்திய அரசுப்பள்ளி மாணவி!
மாநில அளவில் நடைபெற்ற கலை திருவிழாவில் நாதஸ்வர போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்றிருக்கிறார், திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஜெயமித்ரா.
தலைமை ஆசிரியர் குழந்தைசாமியின் முயற்சியில் தான் இந்த போட்டியில் பங்கேற்றதாகவும்; அனைத்து துறைகளிலும் இன்று பெண்கள் சாதித்து வந்தாலும் நாதஸ்வரம் வாசிப்பது உள்ளிட்டு சில துறைகளில் குறைந்த பெண்களே உள்ளனர் என்றும்;
இதனை மாற்றி அமைக்கும் விதத்தில் நான் இந்த கலையில் சாதித்து இதன் மூலம் மற்ற பெண்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களும் இந்த துறையில் வெற்றிகாண உதாரணமாக திகழ்வேன் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார் மாணவி ஜெயமித்ரா.
அங்குசம் ஊடக குடும்பத்தினர் சார்பாக நாமும் வாழ்த்துகிறோம் !
-மணிகண்டன்