சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைத் திமுக அரசு வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா? அதியன் பதில்கள் (பகுதி-5)

0

 சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைத் திமுக அரசு வெற்றிகரமாகக் கையாண்டுள்ளதா?
சென்னையில் சுமார் 50 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இரண்டு நாள் பெய்த தொடர் மழையால் சென்னை மாநகராம் நீரால் சூழப்பட்டிருந்தது. மழை ஓய்ந்தபின்னர் உடனடியாக வெள்ளம் வெளியேற்றப்பட்டது. முதலமைச்சர் தொடங்கி அமைச்சர், மேயர் என்று அனைவரும் இரவு, பகல் பணியாற்றி வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்களை மீட்டுள்ளனர். திமுக மக்கள் நல அரசு என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


நடந்து முடிந்த 5 மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் 3ல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி மீண்டும் உருவாக வாய்ப்பு உள்ளதா?
அதிமுகவோடு கூட்டணியைத் தொடர ஒரு குழுவைப் பாஜக அமைக்க உள்ளது என்றும் கூட்டணி தொடர வாய்ப்பு உள்ளதாகப் பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நகேந்திரன் கூறியிருப்பது பாஜக கூட்டணியில் அதிமுக நீடிக்கும் வாய்ப்புள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

ADMK_BJP

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “சென்னையில் மழைநீர் வடிய ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டதா” என்று கேள்வி எழுப்பியுள்ளாரோ? நியாயம்தானே?
ஆளும்கட்சியான திமுக,“சென்னை நகரச் சீரமைப்புக்கு அதிமுக ஆட்சிக் காலத்தில் 8ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டிருந்தால், நாங்கள் ஏன் 4ஆயிரம் கோடி செலவு செய்யப்போகிறோம். 4ஆயிரம்கோடி செலவு செய்ததனால்தான் உடனே மழைநீர் வடிந்துள்ளது” என்று பதில் கூறியுள்ளதும் நியாயம்தானே?

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

எடப்பாடி கே. பழனிசாமி

பிரபாகரன் மகள் துவாராக என்று ஒருவர் மாவீரர் நினைவுநாளில் உரையாற்றியது உண்மையா?
உரையாற்றியவர் பிரபாகரன் மகள் அல்ல என்று நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் விசுவநாதன் உருத்திரகுமாரன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் செயற்கை நுண்ணறிவூட்டத்தால் உருவாக்கப்பட்டது என்பதும் மெய்ப்பிக்கப் பட்டுள்ளது.

அதிமுகவிலிருந்து வி.கே.சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதே? இது எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த மற்றொரு வெற்றியா?
ஓர் அமைப்பின் உயர்அதிகாரம் படைத்தது பொதுக்குழு. அப் பொதுக்குழுவைக் கூட்டி, முறைப்படி தீர்மானம் நிறைவேற்றி, இடைக்காலப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்த வி.கே.சசிகலா வைக் கட்சியிலிருந்து நீக்கியது செல்லும் என்பது சரியான தீர்ப்புதான். எடப்பாடி பழனி சாமிக்கு கிடைத்த வெற்றிதான். மாற்றுக்கருத்தில்லை.

அதிமுக கொடி, சின்னம் இவற்றைப் பயன்படுத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் (?) ஓ.பன்னீர்செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் தடையைத் தொடர்ந்துள்ளதே.. அதியன் கருத்து என்ன?
அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டது பொதுக் குழுவின் அதிகாரத்தின்படி சரியானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் கொடி, சின்னத்தைப் பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு அதிகாரமில்லை என்ப தும், தடையில்லை என்பது தொடரும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்திருப்பது சரியானதுதான்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் பெற்றிருக்கும் வெற்றி சொல்லும் சேதி என்ன?
தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்குச் சோனியா, இராகுல், கார்கே போன்ற தலைவர் கள் இல்லை. உள்ளூர் தலைவர்களின் இடை விடாத போராட்டங்கள், 10 ஆண்டு காலச் சந்திரசேகரராவ் ஆட்சிக்கு எதிரான மனநிலை மற்றும் சுனில் என்பவரின் தேர்தல் வெற்றி யூகங்கள் தொடர்பில்தான் தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி சாத்தியமாயிற்று என்பதே உண்மை.

ராகுல்காந்தி

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இளம் வயதில் மாரடைப்பினால் மரணங்கள் தற்போது அதிகரித்துள்ளதே.. தவிர்க்கமுடியுமா?
இளம் வயது மாரடைப்பு மரணங்களுக்கு அடிப்படை உணவு முறை என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எண்ணையில் வறுத்த, பொரித்த உணவுகளையும் உடலுக்கு ஒவ்வாத புரோட்டா போன்ற மைதாவினால் செய்யப்பட்ட உணவுகளின் பயன்பாடு அதிகரித் துள்ளது. தொடர்ந்து, காலை, மாலை நடைப்பயிற்சி, உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் குறைந்துவிட்டன என்பதும் மரணங்களுக்குக் காரணங்கள்.

லஞ்சம் பெற்றார் என்ற அடிப்படையில் மத்திய அமலாக்கத் துறை அதிகாரி மதுரையில் கையும் களவுமாகப் பிடித்துச் சிறையில் அடைத்திருப்பது தமிழ்நாடு அரசின் துணிச்சலை வெளிப்படுத்தியுள்ளதா?
தவறு யார் செய்தாலும் துணிச்சலோடு நடவடிக்கை என்பதைத் தெரிவித்துள்ளது தமிழ்நாடு அரசு என்பதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.

மாவட்டங்கள் தோறும் திமுக அரசு புத்தகத் திருவிழாவை நடத்தி வருவது குறித்து அதியன் பார்வை என்ன?
மழைக்காலத்தில் மாவட்டங்கள் தோறும் புத்தகத் திருவிழாவை நடத்தும் எண்ணத்தைத் திமுக அரசு கொஞ்சம் தள்ளி வைத்திருக்கலாம். அண்மையில் 10 நாள்கள் நடைபெற்ற திருச்சி புத்தகத் திருவிழாவில் 2 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர். சுமார் 3 கோடிக்குப் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. புத்தக வாசிப்பு தற்போது அதிகரித்திருப்பது மகிழ்ச்சிக்குரியதே மாற்று கருத்தில்லை.

“மதிப்பெண் ஏன் குறைந்தது” என்று கேட்ட மாணவரிடம் தலைமை ஆசிரியர் கேட்டுள்ளார். வீட்டுக்குச் சென்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கல்வி வளர்ச்சியைச் சீர்படுத்துமா? சீரழிக்குமா?
தங்களின் கேள்வி பட்டிமன்றம் நடத்துவதற்கான தலைப்பாக உள்ளது. மன்னன் தவறு செய்தாலும் இடித்துரைக்கவேண்டும். இல்லை யென்றால் கெடுப்பவர்கள் இல்லாமல் மன்னன் அழிந்து போவான் என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கை மாணவர்களும் பெற்றோர்களும் அறியவில்லைபோலும்.

2024ஆம் ஆண்டு மக்களுக்கு நல்ல ஆண்டாக அமையுமா?
அமையவேண்டும் என்றுதான் விரும்புகிறோம். சுற்றுச்சூழல் ஆர்வலர் என்று ஒருவர் தொலைக் காட்சியில்,“2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 31ஆம் நாளுக்குள் சுனாமி போன்ற பேரிடர் ஆபத்து ஏற்படும் என்று அச்சப்படுத்தியுள்ளார். நம்பிக்கையோடு இருந்து, எதையும் எதிர்கொள்வோம்.

அதியன் தற்போது படித்துக்கொண்டிருக்கும் நூல் எது?
பத்திரிக்கையாளர் கோவி. லெனின் எழுதிய கலைஞர் 100 FAQ என்னும் நூல்தான்.

கலைஞர் மீது பொதுவெளியில் அள்ளிவீசப்பட்ட அவதூறு களுக்கு மறுப்பு தெரிவித்தும், உண்மையை விளக்கியும் காலத்தின் தேவை கருதிக் கோவி.லெனின் இந்நூலை ஆக்கம் செய்துள்ளார். கோவி.லெனின் உழைப்பு மெச்சத்தகுந்தது.

 

 தமிழ்த் தொலைக்காட்சி விவாத நெறியாள்கையில் யார் கண்டிப்புடனும் கறாராகவும் செயல்படுகிறார்?
நியூஸ் 7 தொலைக் காட்சியின் கேள்வி நேரத்தில் நெறியாளுகை செய்த விஜயன் தற்போது புதிய தலைமுறை யின் நேர்பட பேசு நிகழ்வில் கண்டிப்புடனும் கறாராகவும் நெறியாள்கை செய்து வரு கிறார்.

“சார் நேரத்தை வீணடிக்கவேண்டாம், நான் கேட்ட கேள்விக்குச் சுத்தி வளைக்காமல் நேரடியாக, சுருக்கமாகப் பதில் சொல்லுங்கள். எனது கேள்விக்கு இதுவரை நீங்கள் பதில் சொல்லவில்லை, நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே” என்று சாட்டையைச் சுழற்றுகின்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.