அந்த கொலைகார குடும்பத்தினர்கள் ஜெயிலர் படத்தின் வில்லனை விட எரிப்பதில் கை தேர்ந்தவர்கள் !…
கைதான ஐஸ்வர்யா பெற்றோர்
அப்போது சுமார் காலை 5 மணி இருக்கும். கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட கிடந்த ஐஸ்வர்யாவை ஒரு கயிறு கட்டிலில் கிடத்தினார்கள். அவரது சடலத்தை அந்த கயிறு கட்டிலோடு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்று பெட்ரோல், மண்ணெண்ணைய், டயர் போன்ற பொருட்களோடு எரித்து சாம்பலாக்கி தடயத்தை காற்றில் கரைந்து போக செய்தார்கள்.
ஐஸ்வர்யா என்கிற பெண் இருந்தாள், வாழ்ந்தாள் என்பதற்கான சிறு சுவடு கூட இன்று இல்லை. அந்த கொலைகார குடும்பத்தினர்கள் ஜெயிலர் படத்தின் வில்லனை விட எரிப்பதில் கை தேர்ந்தவர்கள். கொடூரமானவர்கள்.
Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்
பட்டுக்கோட்டை ஐஸ்வர்யா ஆணவ படுகொலை தமிழ் நாடு அரசின் தோல்வியை அப்பட்டமாக தோலுரித்து காட்டி இருக்கிறது. ஐஸ்வர்யா- நவீன் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இருவருக்கும் வயது 19. சட்ட பூர்வமாக ஐஸ்வர்யா திருமணத்திற்கு தகுதியானவர்.
ஆனால் நவீன் இன்னும் இரண்டு வருடங்கள் காத்து இருக்க வேண்டும். விடுவார்களா சாதி வெறியர்கள்? அதுவும் பட்டியல் சாதியை சேர்ந்தவன் நவீன். எப்படியும் நம்ம கொல்லாமல் விடமாட்டார்கள். ஆகவே திருமணம் செய்து கொள்ளலாம். அது நமக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று அந்த இருவரும் அப்பாவியாக நம்பி திருப்பூர் அருகில் உள்ள ஒரு விநாயகர் கோவிலில் 31 டிசம்பர் 2023 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
ஐஸ்வர்யாவின் தந்தையும் அவரது தரப்பினரும் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கின்றனர். நவீனின் செல்போனின் கால் ஹிஸ்டரி ஆராய்ந்து டவர் மூலமாக எங்கு இருக்கிறார்கள் என்பதை 2 ஜனவரி 2024 அன்று போலீஸ் கண்டுபிடித்து அங்கு சென்று நவீனை மட்டும் விட்டு விட்டு ஐஸ்வர்யா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரின் தந்தை பெருமாள் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைத்து உள்ளனர்.
அன்று திருப்பூரிலிருந்து அழைத்து வரப்பட்ட ஐஸ்வர்யா பட்டுக்கோட்டை அருகில் உள்ள அவரது கிராமமான நெய்வாவிடுதியில் 03 ஜனவரி 2024 அன்று கொல்லப்பட்டு உள்ளார்.கொலையில் ஈடுபட்டதாக ஐஸ்வர்யாவின் பெற்றோர்கள் பெருமாள் – ரோஜா கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
படம் வரைந்தவர் ராம்..
வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்
பல்லடம் போலீசார் ஐஸ்வர்யாவை நீதி மன்றத்தில் தான் ஒப்படைத்து இருக்க வேண்டும். ஏன் அதை செய்யவில்லை. அப்படியே அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் போது தஞ்சாவூர் போலீசாருக்கு தகவல் சொல்லி இருக்க வேண்டும். அதையும் அவர்கள் செய்யவில்லை.
ஐஸ்வர்யா மேஜர். அவரது விருப்பம் என்ன? காவல் நிலையத்தில் நவீனோ அவரை சார்ந்தோரே இல்லாத நிலையில் எப்படி ஐஸ்வர்யா குடும்பத்தாரிடம் அவரை ஒப்படைக்கலாம்? கொஞ்சம் கூட அறிவு வேண்டாமா? சாதி மறுப்பு தம்பதியரின் பாதுகாப்புக்கு என்று மாவட்டம் தோறும் ஒரு செல் இருக்க வேண்டுமே, அந்த செல் திருப்பூரில் இல்லையா? அப்படி இருந்து இருந்தால் அவர்களிடம்தான் அவர்களை ஒப்படைத்து இருக்க வேண்டும்.அதை ஏன் செய்யவில்லை?
அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !
கடந்த 03 ஜனவரி அன்று கொல்லப்பட்டு இருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த தகவலை தெரிந்த நவீன் 07 ஜனவரி அன்று புகார் கொடுத்து இருக்கிறார். அதுவரை போலீசாருக்கு தகவல் தெரியவில்லை என்பதை எப்படி நம்புவது ? தனி மனிதன் ஒருவன் கண்டுபிடித்து தகவல் சொன்ன பிறகு தான் போலிஸுக்கு தெரிகிறது என்றால் அவர்களின் கண்காணிப்பு அப்பட்டமாக தோற்றுப் போய் இருக்கிறது. ஒரு கொலை நடந்து இருக்கிறது. அந்த ஊரில் உள்ள ஒருவர் கூட செய்தியை கசியவிடாமல் இருக்கிறார்கள் என்றால் சாதி கட்டமைப்பு எவ்வளவு வலுவாக இருக்கிறது?
இந்த கொடூர சம்பவத்திற்கு காரணம் ஆனா இன்ஸ்பெக்டர் முருகையா
கிராம நிர்வாக அலுவலருக்கு தெரிந்து இருக்காதா? அந்த கிராமம் உள்ள பஞ்சாயத்துக்கு தெரிந்து இருக்காதா? வாட்டாத்திக்கோட்டை காவல் நிலைய போலீசுக்கு தெரிந்து இருக்காதா?
நவீனை மிகவும் பாராட்டுகிறேன். துணிச்சலுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்து இருக்கிறான். அவனது துணிச்சல் தான் ஐஸ்வர்யாவின் ஆணவ கொலையை சமூகத்திற்கு தெரியப்படுத்தி இருக்கிறது. கடந்த 05 ஏப்ரல் 2023 அன்று பாராளுமன்றத்தில் தமிழ்நாட்டில் 2017 முதல் 2021 வரை 3 ஆணவ கொலைகள் நடந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில்
ஆனால் கடந்த 2021 முதல் 2023 மூன்று ஆண்டுகளில் எவிடென்ஸ் அமைப்பு மட்டும் 24 ஆணவ கொலைகளுக்கு எதிராக கள ஆய்வு மேற்கொண்டு உள்ளது. பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் நவீனும் அவனது தந்தையும் சிஆர்பிசி 164 கீழ் வாக்குமூலம் கொடுத்தனர். என்ன நடந்தாலும் பரவாயில்லை. எங்கள் உயிரை போனாலும் பரவா இல்லை. நீதி கிடைக்க நானும் என் மகனும் போராடுவோம் என்று என்னிடத்தில் நவீனின் தந்தை பாஸ்கர் கூறினார்.
கள ஆய்வில் எவிடன்ஸ் கதிர்
எதிர்க்கட்சியாக இருக்கும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆணவ கொலை தடுப்புக்கு என்று தனி சட்டம் இயற்றுவோம் என்று சூளுரைத்த தி.மு.க.தற்போது கள்ள மவுனம் காப்பது பச்சை துரோகம். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் 95 சதவீத ஆணவ கொலைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களின் கோபத்திற்கு ஆளாவ கூடாது என்று தி.மு.க.பயப்படுகிறதா? ஆம் சந்தேகம் இல்லை.பயப்படுகிறது.
எவிடென்ஸ் கதிர்
திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending