அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்பதற்காக சான்றிதழ் தர மறுக்க முடியாது !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு !

கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்தாமல் இருந்தால், பல இடங்களில் அந்தக் கல்லூரிகள் மாணவர்களின் மார்க் ஷீட், டிரான்ஸ்ஃபர் சர்டிபிகேட் (TC), பட்டச் சான்றிதழ் போன்ற முக்கியமான கல்வி சான்றிதழ்களை வழங்க மறுக்கும் நடைமுறை உள்ளது. இந்த நடைமுறைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

வழக்கின் பின்னணி :

ஒரு மாணவர் தனது படிப்பை முடித்த பின்னரும், கல்லூரி நிர்வாகம் அவர் செலுத்த வேண்டிய கல்விக்கட்டணம் நிலுவையில் உள்ளது என்ற காரணத்தால் அவரது கல்விச் சான்றிதழ்களை வழங்க மறுத்தது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதனால், அந்த மாணவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, தனது கல்வி சான்றிதழ்களை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

நீதிமன்றத்தின் கருத்து :

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கூறியதாவது: “கல்வி நிறுவனங்கள் கல்வி கட்டணம் வசூலிக்க உரிமை உள்ளது. ஆனால், அதற்காக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்களை பிடித்து வைத்து வழங்க மறுப்பது சட்டபூர்வமானது அல்ல. மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள் அவர்களின் அடிப்படை கல்வி உரிமைக்கு சம்பந்தப்பட்டவை. கல்லூரி நிர்வாகம் கட்டணம் வசூலிக்க வேண்டுமானால், சட்டப்படி வேறு வழிகளில் நடவடிக்கை எடுக்கலாம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நீதிமன்றத்தின் உத்தரவு :

மாணவரின் கல்விச் சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும். கட்டணம் நிலுவையில் இருந்தால், கல்லூரி நிர்வாகம் சட்டப்படி வசூல் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தது. தீர்ப்பின் முக்கியத்துவம்

இந்த தீர்ப்பு மூலம்:

மாணவர்களின் கல்வி சான்றிதழ்களை கல்லூரிகள் பிணையாக வைத்துக் கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. கட்டணம் வசூலிக்க வேண்டுமெனில், கல்லூரிகள் சட்டபூர்வமான நடைமுறைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். கல்விக்கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தால் மாணவர்களின் மார்க் ஷீட் அல்லது TC போன்ற கல்விச் சான்றிதழ்களை கல்லூரிகள் வழங்க மறுப்பது சட்டப்படி செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,

சிறப்பு அரசு பொது வழக்கறிஞர் ,

திருப்பத்தூர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.