அரசு மணல் குவாரிகளை திறக்க லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தல்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கடந்த 12/09/2023 அன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வந்த அரசு மணல் குவாரிகளில் முறைகேடாக அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மணல் எடுத்ததாக அமலாக்கத்துறை குவாரிகளை சோதனை செய்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால் சுமார் மூன்று ஆண்டுகள் காலம் மணல் குவாரிகள் இயக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் இத்தொழிலில் முழுநேரம் ஈடுபட்டுள்ள சுமார் 55,000க்கும் மேற்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள், லட்சக்கணக்கான ஓட்டுநர்கள் வேலை வாய்ப்பிழந்து லாரிகளுக்கு நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனிற்கு மாத தவனை கூட செலுத்த முடியாமல் பெருத்த சிரமத்தை சந்தித்து வருகிறோம்.

தற்போது வரை எந்த ஒரு நீதிமன்றமும் அரசு மணல்குவாரி செயல்படுவதற்கு தடை ஏதும் விதிக்கவில்லை, எனவே  முதல்வர் அவர்கள் எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலனை செய்து தமிழகம் முழவதும் காவிரி ஆறு, பாலாறு ஆறு உட்பட ஆறுகளை ஆய்வு செய்து எங்கெங்கு மணல் திட்டுகள் அதிகளவில் தேங்கியுள்ளதோ அந்த பகுதியை கண்டறிந்து மணல் குவாரி துவங்கி முறைகேடுகளின்றி இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

தமிழகம் முழவதும் சுமார் 30-க்கும் மேற்ப்பட்ட நீர்த்தேக்க அணைகள் (DAM) குறிப்பாக சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை (METTUR DAM) மற்றும் சில அணைகள் கட்டப்பட்ட காலம் முதல் இதுவரை தூர்வாரப்படாததால் அதிக அளவில் மணல் தேங்கியுள்ளது, இதனால் அணையின் நீர்க்கொள்ளளவு குறைந்துள்ளது. மேற்படி அணைகளை தூர்வாரினாலே பல லட்ச்சக்கணக்காண யூனிட் மணல் கிடைக்கும். மணலின் தேவையும் பூர்த்தி செய்யப்படும் அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைத்திடும் அணைகளின் நீர்மட்டகொள்ளளவும் அதிகரிக்கும், எனவே மேற்படி அணைகளில் தேங்கியுள்ள மணலை எடுத்து இணையதளப்பதிவு (Online Booking) மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

மணல் தேவையின் அவசியம் கருதியும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும், மழைகாலங்களில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு வந்தபோது ஆற்றுப்படுகை அருகில் உள்ள பட்டா நிலங்களில் அதிகளவில் மணல் திட்டுக்கள் தேங்கி விவசாயம் செய்ய முடியாமல் இருந்து வருவதை மீட்டெடுத்து விளைநிலங்கள் ஆக்கி விவசாயம் செய்திடவும் உச்சநீதிமன்ற Civil Appeal No.454 of 2000 தீர்ப்பு நாள் 08/07/2013-இன்படி பட்டாதாரர்கள் தங்களுடைய நிலங்களில் உள்ள மணலை எடுத்து அதற்குண்டான ராயல்ட்டி (Royalty) அரசுக்கு செலுத்திவிட்டு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அரசு மணல்குவாரிகள் செயற்படுத்தப்படும் பட்சத்தில் கடந்த ஆட்சியின் போது நடைபெற்ற முறைகேடுகளை தவிர்த்து பயனாளிகளுக்கு குறைந்தவிலையில் மணல் கிடைத்திடவும், கட்டுமான பணிகள் தங்குதடையின்றி நடைபெறவும், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்திடவும் அரசே பொதுப்பணித்துறை மூலம் நேரடியக இணையதளப்பதிவு (Online Booking) மூலம் அரசு அறிவிக்கும் விலைக்கே கூடுதல் பணம் வசூலிக்காமல் லாரிகளுக்கு மணல் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அரசு மணல்குவாரிகளில் முறைகேடுகளை தவிர்க்கின்ற வகையில் ஆற்றிலிருந்து அரசு மணல் விற்பனை கிடங்கிற்கு (Government Sand Sales Depo) ஆற்றில் பொக்லைன் இயந்திரம் மூலம் மணலை அள்ளி லாரியில் லோடு செய்து எடுத்துவரும் ஒப்பந்தம் (Loading & Transporting Contract) தனியாருக்கு கொடுக்காமல் பொதுப்பணித்துறையே நேரடியாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அரசு மணல் விற்பனை கிடங்கிலிருந்து (Government Sand Sales Depo) தமிழ்நாடு அரசாணைப்படி 6 சக்கர (6 Wheeler) லாரிகளுக்கு 2 யூனிட் மணலும், 10 சக்கர (10 Wheeler) லாரிகளுக்கு 3 யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட வேண்டும். எக்காரணத்தைக்கொண்டும் 12, 14, 16 சக்கர (12, 14, 16, Wheeler) லாரிகளுக்கு மணல் வழங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

குவாரிகள் செயல்படாமல் கடந்த மூன்று ஆண்டு காலம் அரசு மணல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் ஆதிக்க சக்திகள் ஆங்காங்கே ஆறுகளில் இருந்து அனுமதியின்றி மணலை திருடி எடுத்துசென்று விற்பனைசெய்து அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும் பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய நடுத்தர மக்கள் எம்.சாண்ட் பயன்படுத்த விருப்பமில்லாமல் மணலை பயன்படுத்தித்தான் வீடுகட்ட வேண்டுமென்று கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு மணல் குவாரி எப்போது திறக்கப்படும் என்று ஆவலோடு காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

காடுகளை அழித்தும், மலைகளை அதிக சக்திவாய்ந்த வெடிகளை வைத்து வெடித்து அழித்தும், முற்றிலும் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி எம்.சாண்ட், பி.சாண்ட் உற்பத்திசெய்வதை விட ஆறுகளில் மாநில சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அனுமதித்துள்ள ஒருமீட்டர் ஆழம் மட்டுமே மணல் எடுத்தால் எந்த சுற்றுசூழலுக்கும் பாதிப்பு ஏற்படாது. தற்சமயம் அரசு மணல் குவாரி செயல்பாட்டில் இல்லாததால் கல்குவாரி கிரஷர் உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்துக்கொண்டு சர்வாதிகாரப்போக்கில் அடிக்கடி விலையுயர்வு ஏற்ப்படுத்தி விற்பனை செய்து வருவதால் பயனாளிகள் பெருத்த பாதிப்புக்குள்ளாகிறார்கள். மேலும் ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ-5,000/-க்கும், ஒரு யூனிட் பி.சாண்ட் ரூ-6,000/-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் அரசு மணல் குவாரிகளில் தரமான ஆற்றுமணல் ஒரு யூனிட் ரூ.2,650/- க்கு விற்பனை செய்யப்பட்டுவந்தது என்பதை மாண்புமிகு.தமிழக முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு விரைந்து அரசு மணல்குவாரிகளை திறக்க வலியுறுத்துகிறோம்.

எனவே தமிழகமுதல்வர் அவர்கள் பயனாளிகளுக்கு கட்டுமாணத்துக்கு தேவையான ஆற்று மணல் குறைந்தவிலையில் கிடைத்திடவும் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடவும் அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டியும் தமிழகம் முழவதும் நீர்த்தேக்க அணைகளில் (DAM) தேங்கியுள்ள மணலை தூர்வாரி விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

அரசு மணல் குவாரிகளை இயக்கிட வேண்டி தமிழக முதல்வர் அவர்களுக்கு பதிவுத்தபால் அனுப்பியும் மாண்புமிகு.நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் இயற்கைவளங்கள்துறை அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் பதிவுத்தபால் அனுப்பியும் இதுவரை குவாரிகள் திறப்பதற்கு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே வருகின்ற 14/10/2026க்குள் மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள் எங்களது நியாயமான கோரிக்கைகளை பரிசீலித்து உடனடியாக மணல் குவாரிகளை திறந்து இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தவறும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டி தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வருகிற 16/10/2026 வெள்ளிக்கிழமையன்று திருச்சியில் மணல் லாரி உரிமையாளர்கள் ஓட்டுநர்கள் ஒன்று திரண்டு பேரணியாக சென்று திருச்சி மண்டல பொதுப்பணித்துறை (நீ.ஆ.து) தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்பதை தங்களுக்கு மெத்த பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.