15,000 நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடிவு!
15,000 நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடிவு!
தமிழ்நாடு அரசுப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் முன்னேற்றப் பேரவை ஆகிய ஆசிரியர் சங்கங்கள் அரசாணை 243-க்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றன.
அரசாணை வெளியிட்டதை வரவேற்று அறிக்கை வெளியிட்டிருப்பதோடு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
வேறு ஒன்றியம் / நகராட்சிகளுக்கு பணிமாறுதலின் போது, ஆசிரியர்களின் ஆசிரியர் தேர்வு வாரிய முன்னுரிமை கூண்டுக்குள் அடைக்கப்பட்டு பதவி உயர்வுகள் மற்றும் பணிமாறுதல்கள் இன்றி தவித்த 15 ஆயிரம் நேரடி நியமன பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடிவு கிடைத்திருக்கிறது.
வாய்ப்புகள் ஒன்றிய அளவில் மட்டும் சுருங்கிவிடாமல் பரவலாக்கப்பட்டுள்ளது. ஏற்றத்தாழ்வுகள் அகற்றப்பட்டு நியமனநாள் படி காலிப்பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் மிகச்சரியான மாற்றம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறாமல் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பேறும் சமூக அநீதி, வரலாற்றுப்பிழை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.” என்பதாக, அரசாணை 243-ஐ ஆதரிக்கிறார்கள்.