அரசியல் கட்சி தொடங்கிய நடிகர்கள் – வெற்றியும் தோல்வியும். !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

MGR
MGR

மக்கள் திலகம் எம்ஜிஆர் 1972ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலக்கப்பட்ட பின்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தைத் தொடங்கினார். திமுகவில் இருந்தபோது 1967 மற்றும் 1971 சட்டமன்றத் தேர்தல்களில் பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். தனியான அரசியல் கட்சி தொடங்கிய பின்னர், 1977 அருப்புகோட்டை, 1980 மதுரை மேற்கு, 1984ஆம் ஆண்டு ஆண்டிபட்டி தொகுதிகளில் வெற்றி பெற்று 3 முறையும் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்தார்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

எஸ்.எஸ்.இராஜேந்திரன்
எஸ்.எஸ்.இராஜேந்திரன்

1984ஆம் ஆண்டு எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது, நடிகர் எஸ்.எஸ்.இராஜேந்திரனுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக வழங்கவில்லை. உடனே எம்ஜிஆர் எஸ்எஸ்ஆர் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். சேடப்பட்டி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

சிவாஜி
சிவாஜி

நடிகர் திலகம் என்ற போற்றப்பட்ட சிவாஜிகணேசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி 1988ஆம் ஆண்டு தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியைத் தொடங்கினார். 1989ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தஞ்சை மாவட்டம் திருவையாறு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

கே.பாக்யராஜ்
கே.பாக்யராஜ்

எம்ஜிஆர் தன் கலையுலக வாரிசாக நடிகர் மற்றும் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களை அறிவித்திருந்தார். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 1989ஆம் ஆண்டு எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இக் கட்சி போட்டியிடவில்லை. 1991ஆம் ஆண்டு கேரளச் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு இக் கட்சி 87 வாக்குகளைப் பெற்றது. பின்னர் அதிமுவில் இணைந்தார்.

டி.ராஜேந்திரன்
டி.ராஜேந்திரன்

ஒருதலை ராகம் திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் டி.இராஜேந்தர் 1991ஆம் ஆண்டு தாயக முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்பு திமுகவில் சேர்ந்து 1996ஆம் ஆண்டு சென்னை பூங்கா நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து திமுகவிலிருந்து விலகி 2004ஆம் ஆண்டு இலட்சியத் திமுக என்ற பெயரில் கட்சியைத் தொடங்கி, சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

விஜயகாந்த் - பிரேமலதா
விஜயகாந்த் – பிரேமலதா

நடிகர் விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2006ஆம் ஆண்டு விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பின்பு 2011ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுச் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். 2016ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு 3 இடத்திற்குத் தள்ளப்பட்டுப் படுதோல்வி அடைந்தார்.

சரத்குமார் - நடிகர்
சரத்குமார் – நடிகர்

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

2007ஆம் ஆண்டு நடிகர் சரத்குமார் அனைத்திந்தியச் சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். 2011ஆம் ஆண்டு தென்காசி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றுச் சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2016, மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

கார்த்தி
கார்த்தி

நடிகர் கார்த்திக் 2009இல் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியைத் தொடங்கினார். 2009இல் நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகரில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற பெயரில் இயக்கம் தொடங்கினார்.

சீமான் -
சீமான் –

நடிகர் மற்றும் இயக்குநருமான சீமான் 2010ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி என்ற இயக்கத்தைத் தொடங்கினார். 2016 தேர்தலில் கடலூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 5ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டுத் தோல்வி அடைந்தார். 2021ஆம் ஆண்டு சென்னை திருவெற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 3ஆம் இடம் பெற்றுத் தோல்வி அடைந்தார்.

கருணாஸ்
கருணாஸ்

நடிகர் கருணாஸ் 2015ஆம் ஆண்டு முக்குலத்தோர் புலிப்படை என்னும் கட்சியைத் தொடங்கினார். 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டுத் திருவாடனைத் தொகுதியில் வெற்றி பெற்றார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

கமல்
கமல்

நடிகர் கமலஹாசன் 2018ஆம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2021ஆம் ஆண்டு கோவைத் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார்.

மன்சூர் அலிகான்
மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் 2021ஆம் ஆண்டு தமிழ்த் தேசியப் புலிகள் என்ற கட்சியைத் தொடங்கினார். இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். 2021ஆம் ஆண்டு கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு 41 வாக்குகள் மட்டும் பெற்றுப் படுதோல்வி அடைந்தார்.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

2024ஆம் ஆண்டு நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். இக் கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஆதவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.