அங்குசம் பார்வையில் ‘இமெயில்’ படம் எப்படி இருக்கு !

0
EMAIL MOVIE
EMAIL MOVIE

தயாரிப்பு & டைரக்ஷன்: எஸ்.ஆர்.பிலிம் ஃபேக்டரி எஸ்.ஆர்.ராஜன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ராகினி திவேதி, அசோக், மனோபாலா, ஆர்த்தி ஸ்ரீ, பில்லி முரளி, ஆதவ் பாலாஜி. ஒளிப்பதிவு: எம்.செல்வம், இசை: ஜுபின், அவினாஷ், எடிட்டிங்: ராஜேஷ் குமார், ஸ்டண்ட்: மாஸ் மதா, ஃபயாஸ்கான். பிஆர்ஓ: ஏ.ஜான்.

https://businesstrichy.com/the-royal-mahal/

மனோபாலா நடத்தும் டுபாக்கூர் கைலாசா ரியல் எஸ்டேட் ( அப்படின்னா…என நீங்கள் நினைப்பதும் சரிதான். அங்கே அஜால் குஜால் ஃபிராடு நித்தியானந்தா போட்டோ இருக்கு) கம்பெனியில் வேலை பார்க்கிறார் ராகினி திவேதி. தோழிகளுடன் வீட்டு வாடகையை ஷேர் பண்ணவே வக்கில்லாத ராகினி, மொபைலில் உள்ள ஒரு ‘ஆப்’ புக்குள் போகிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அதன் பிறகு அவருக்கு லட்சக்கணக்கில் பணம் கூரியரில் வருகிறது. வழக்கம் போல ஆபத்தும் வருகிறது. வில்லன்களும் வருகிறார்கள். ராகினி திவேதியை அந்த ஆப் ஆப்படித்ததா? இல்லை அந்த ஆப்புக்கு ராகினி ஆப்படித்தாரா என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘இமெயில்’. ஆக் ஷன் குயின் என டைட்டிலில் போட்டதுக்காக சும்மா சுத்திச் சுத்தி பறந்து பறந்து ஃபைட் பண்ணுகிறார் ராகினி திவேதி. ஹீரோன்னு ஒருத்தர் வேணும்கிறதுக்காக அசோக்கை கமிட் பண்ணிருக்காய்ங்க போல. இடைவேளைக்குப் பிறகு அவரை வில்லனாக்கி, ஆர்த்தி ஸ்ரீயை வைத்து போட்டுத் தள்ளி சோலியை முடித்து விட்டார் டைரக்டர்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

காமெடி என்ற பெயரில் நம்மை கடித்துக் குதறுகிறார் மனோபாலா. படத்தின் ‘கண்டெண்ட்’ நல்லாத்தான் இருக்கு. ஆனால் அதை, பெண் அமைச்சர், ஸ்விஸ் பேங்க் சீக்ரெட், டெரர் ரவுடி, ஹார்ட் டிஸ்க்னு கண்டமேனிக்கு சுத்தலில் விட்டு, கண்டெண்டை கந்தர்கோலமாக்கி நம்மையும் கதற வைக்கிறார்கள். அடிக்கடி நித்தியானந்தா போட்டோவைக் காட்டுவதும், அவரது ‘பலான’ ஆசிரமம் போலவே பல டிசைன்களில் குஜிலிகளை காட்டுவதும் நமக்கு லைட் டவுட் வருகிறது. இதற்கு மேல் சொல் இல்லை. சொல்லத் தேவையில்லை. ‌ ‌‍.

– மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.