அங்குசம் பார்வையில் ‘லவ்வர்’ படம் எப்படி இருக்கு !

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

லவ்வர்
லவ்வர்

தயாரிப்பு: ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி.எண்டெர்டெயின்மெண்ட் ‘ நசரேத் பசலியன், மகேஷ் பசலியன், யுவராஜ் கணேசன். இந்தியா ரிலீஸ்: சக்தி பிலிம் ஃபேக்ட்ரி’சக்திவேலன். டைரக்டர்: பிரபு ராம் வியாஸ். ஆர்ட்டிஸ்ட்ஸ்: மணிகண்டன், ஸ்ரீ கெளரி பிரியா, கண்ணா ரவி, பருத்தி வீரன் சரவணன், கீதா கைலாசம், ரினி, நிகிலா சங்கர், ஹரிஷ் குமார், ஒளிப்பதிவு: ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை: ஷான் ரோல்டன், எடிட்டிங்: பரத் விக்ரமன். பிஆர்ஓ: யுவராஜ்

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

கல்லூரி கலைவிழாவில் விஜய் சேதுபதி குரலில் அருண் ( மணிகண்டன்) பேசுவதைக் கேட்டு அவர் மீது ஈர்ப்பாகிறார் திவ்யா ( ஸ்ரீகெளரி பிரியா). அந்த ஈர்ப்பு காதலாகிறது. ஒரு நாள் தனது அலுவலக நண்பர்கள் நண்பிகளுடன் ‘அவுட்டிங்’ போகிறார் கெளரி பிரியா. அந்த நேரம் பார்த்து மணிகண்டன் சரக்கடித்துவிட்டு போன் செய்ய, தனது ஃபரண்ட் வீட்டில் இருப்பதாக பொய் சொல்கிறார் கெளரி. இது கெளரி மீதுள்ள ‘பொசஸிவ்னெஸ்’ மணிகண்டனை டென்ஷனாக்குகிறது.

மாடூலர் கிச்சனை வீடியோவாக காண இங்கே கிளிக் செய்யவும்...

மீண்டும் சரக்கடித்துவிட்டு, ஃப்ரண்ட்ஸ்களுடன் கெளரி தங்கியுள்ள ஃப்ளாட்டுக்குப் போய் கெட்ட வார்த்தையில் திட்டி கெளரியுடன் சண்டை போடுகிறார் மணிகண்டன். போதை தெளிந்ததும் கெளரியிடம் மன்னிப்புக் கேட்டு, இனிமேல் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்து தனது வீட்டுக்கு கெளரியை அழைத்துச் செல்கிறார் மணிகண்டன்.

3

தபால்துறையில் வேலை பார்க்கும் மணிகண்டன் அம்மா கீதா கைலாசம் கெளரியுடன் பாசமாக பேசுகிறார். அப்போது ஃபுல் மப்புடன் வீட்டுக்கு வருகிறார் மணிகண்டன் அப்பா ‘பருத்திவீரன்’ சரவணன். இதைப் பார்த்து மேலும் அதிர்ச்சியாகிறார் கெளரி பிரியா. இதையெல்லாம் கேள்விப்படும் கெளரி யின் ஃப்ரண்ட்ஸ் ” யோசிச்சுக்கடி” என்கிறார்கள். இதற்கிடையே தனது அலுவலகத்தில் புதிதாக சேர்ந்த கண்ணா ரவி மீது லைட் க்ரஷ் ஏற்படுகிறது கெளரிக்கு.

கெளரியின் பிறந்த நாள் அன்று எல்லோரும் இன்பச் சுற்றுலா போகிறார்கள். ஆனால் மணிகண்டனால் அது துன்பச் சுற்றுலாவில் முடிகிறது. ” ஆறு வருசம் உன்னை லவ் பண்ணிய என்னால் அறுபது வருசம் உன்னோடு வாழ முடியாது” என லவ்வை பிரேக்கப் பண்ணுகிறார் கெளரி பிரியா. க்ளைமாக்ஸ் இப்படித் தான் இருக்கும் என நாம் நினைப்பதற்கு மாறாக இருக்கிறது க்ளைமாக்ஸ்.

4
லவ்வர்
லவ்வர் (3)

மணிகண்டன் நடிப்பு வெல்டன் என தாராளமாக சொல்லலாம். என்ன ஒண்ணு காதலில் தோற்றவர்கள் தான் குடிப்பார்கள், டென்ஷன் ஆவார்கள். ஆனால் லவ்வர் மீது சந்தேகப் புத்தி உள்ள மணிகண்டன் எந்நேரமும் சரக்கும் தம்முமாக இருப்பது தான் நல்லதாப்படல. சில சீன்களில் கஞ்சாவும் இழுப்பது கொஞ்சம் ஓவர் தான். மணிகண்டனை விட பெர்ஃபாமென்ஸில் டாப் ஸ்கோர் எடுத்து அசத்தியிருக்கிறார் கெளரி பிரியா. மணிகண்டன் மீது கோபம், எரிச்சல், கடுப்பு, பச்சாதாபம் என வெரைட்டி யான எக்ஸ்பிரசன்ஸ்களை சீனுக்கு சீன் வெளிப்படுத்தி சபாஷ் போட வைத்துவிட்டார் கெளரி பிரியா. கோலிவுட்டில் ‘குட் ஃபியூச்சர் ‘ இருக்கின்றது.

மணிகண்டனும் அவரது ஃப்ரண்ட்ஸும்போல கெளரியும் அவரது நண்பிகளும் அவ்வப்போது சரக்கடிக்கிறார்கள். சர்வசாதாரணமாக தம்மடிக்கிறார்கள். பெருநகர மாநகராட்சியின் ஹைடெக் இளசுகள் இப்படித் தான், இந்த ரூட்டில் தான் லவ் டிராவல் ஆகிறார்கள் என சொல்ல வந்திருக்கிறார் டைரக்டர் பிரபு ராம் வியாஸ். ஆனால் இதுவே படத்தின் பலவீனத்திற்கும் அழுத்தமான காட்சியின்மைக்கும் வழிவகுத்து, ரசிகனை கொஞ்சம் அன்னியப் படுத்துவதையும் மறுப்பதற்கில்லை.

ஹீரோயினுக்கும் சரி, அவரது தோழிகளுக்கும் சரி, தமிழ் சினிமா வழக்கம் போல எதுக்கு அம்மா – அப்பா கேரக்டர்கள், அவர்களுக்கு நாலைந்து சீன்கள் என டைரக்டர் நினைத்து விட்டார் போல. கீதா கைலாசத்தை ஆஸ்பத்திரியில் சேர்க்கும் சீன் லைட் செண்டிமெண்டுக்குப் பயன்பட்டிருக்கிறது. இந்த லவ்வரையும் சந்தேக லவ்வையும் சரி, ரசிகர்களை வெகுவாக ரசிக்க, ருசிக்க, உணர வைப்பதில் பெரும் பங்காற்றியிருப்பதில் முதல் இடம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். இரண்டாவது இடம் கேமரா மேன் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா. இந்த ‘லவ்வர்’ ஐ அல்ட்ரா மாடர்ன் இளசுகளுக்கு மட்டுமல்ல, அதைவிட மேலான மாடர்ன் இளசுகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

–மதுரை மாறன்

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.