தென்காசியில் கலைஞர் நூற்றாண்டு விழா – பன்னாட்டு கருத்தரங்கம் – தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் கட்டுரைகள் எழுதலாம் !

0

தென்காசி ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை, அறிவியல் கல்லூரி ஆதரவில் அங்குசம் சமூக நல அறக்கட்டளை, திருச்சி மற்றும் பொங்கு தமிழ் இளையோர் இயக்கம், திருச்சி இணைவு பெற்ற சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா – பன்னாட்டு கருத்தரங்கம்

பொருண்மை :

“பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்கள்” (Versatile Leadership of Kalaignar M. Karunanidhi: A Multifaceted perspective)

அறிவிப்பும் – அழைப்பும்

தமிழ், ஆங்கிலம் இருமொழிகளில் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய இறுதி நாள் : 30-.11.2024

நிகழிடம்:

தென்காசி, ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை, அறிவியல் கல்லூரி

நாள் :  2024 டிசம்பர் திங்கள் 30 மற்றும் 31- – இருநாள்கள்

அன்புடன் அழைக்கும்

கருத்தரங்க விழா -குழுவினர்

அன்புடையீர்! வணக்கம்.

அருவிகளின் நகரம், தென்றல் தவழும் தென்காசியில், ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை, அறிவியல் கல்லூரியின் ஆதரவில், திருச்சி அங்குசம் சமூக நல அறக்கட்டளை மற்றும் சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம் இணைந்து நடத்தும், கலைஞர் நூற்றாண்டு விழா -பன்னாட்டு கருத்தரங்கம்

“பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்கள்” (Versatile Leadership of Kalaignar M. Karunanidhi: A Multifaceted perspective)  என்னும் பொருண்மையில், குளிர்நிறைந்த மார்கழி திங்கள் 15 மற்றும் 16ஆம் (2024, டிசம்பர் 30 மற்றும் 31) நாள்களில் நடைபெறவுள்ளது.

இவ்விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர் மன்றத் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். கலைஞரின் ஆளுமைத் திறன்களை ஆராய்ந்து ஆய்வுக் கட்டுரைகள் வழங்க, ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள் என அனைவரையும் அழைக்கின்றோம். ஆய்வுகளின் வழியாக கலைஞரின் பன்முக ஆளுமை திறன்களுக்கு வளம் சேர்ப்போம்.

கலைஞரின் படைப்புகள் :

சமூகப் புதினங்கள்–10, வரலாற்றுப் புதினங்கள்–4, சிறுகதைகள்–160, நாடகங்கள்–20, திரைப்படங்கள் -கதை, வசனம் 10 மட்டுமே  எழுத்து வடிவம் பெற்றுள்ளன

திரையிசைப் பாடல்கள்–40, கவிதைகள்—390, கவியரங்கக் கவிதைகள்–36, காவியம்–1 தாய் காவியம்

உரை : திருக்குறளுக்கு மட்டுமே

உரை விளக்கங்கள் -:

குறளோவியம், சங்கத் தமிழ், தொல்காப்பியப் பூங்கா,

நினைவுப் பதிவுகள் -: ஆறுமாதக் கடுங்காவல்

தன் வரலாறு : நெஞ்சுக்கு நீதி, 6 பாகங்கள்

கடிதங்கள்– 670, கட்டுரைகள்–144

கலை -இலக்கியம் -: பண்பாட்டுப் பொழிவுகள்–21

கருத்தரங்கம் / மாநாட்டுப் பொழிவுகள் — 5 மட்டும்

அச்சு வடிவம் பெற்றுள்ளன

பட்டமளிப்பு விழாப் பொழிவுகள்–8 மட்டும் அச்சு வடிவம் பெற்றுள்ளன

வானொலிப் பொழிவுகள்–4 பொழிவுகள் மட்டும்

அச்சு வடிவம் பெற்றுள்ளன

தொலைக்காட்சிப் பொழிவு–1, சட்டமன்ற பொழிவுகள்–622,

அரசியல் பொழிவுகள் –77, நேர்காணல் / கேள்வி– பதில்கள்–26

பயண இலக்கியம்– 1 இனியவை இருபது,

சிந்தனைத் துளிகள்– 22, கலைஞரின் கவிதாஞ்சலி –1

கலைஞரின் மொத்த படைப்புகள் -3373

புதினங்கள்
1. வெள்ளிக்கிழமை (இரண்டாம் பதிப்பு) 1968
2. சுருளிமலை (ஐந்தாம் பதிப்பு) 1968
3. வான்கோழி 1978
4. புதையல் 1975
5. ஒரே ரத்தம் 1980
6. ஒரு மரம் பூத்தது
7. அரும்பு (குறும் புதினம்) 1978, அரும்பு (குறும் புதினம்) 1983
8. பெரிய இடத்துப் பெண் (குறும் புதினம்)
9. சாரப்பள்ளம் சாமுண்டி (குறும் புதினம்)
10. நடுத்தெரு நாராயணி (குறும் புதினம்) 1953

வரலாற்று புதினங்கள்
1. பலிபீடம் நோக்கி 1947
2. ரோமாபுரிப் பாண்டியன் 1974
3. பொன்னர் – சங்கர் அண்ணன்மார் வரலாறு 1988
4. பாயும் புலி பண்டாரக வன்னியன் 1991
5. தென்பாண்டிச் சிங்கம் 1983
6. தாய் – காவியம்

உரை ஓவியங்கள்
1. குறளோவியம் (குறுநூல்) 1956
2. குறளோவியம் (முதல் பதிப்பு) 1985
3. தேனலைகள் மூன்றாம் பதிப்பு 1982
4. சங்கத் தமிழ் (கவிதை நடை விளக்கம்)
(முதல் பதிப்பு) 1987
5. திருக்குறள் கலைஞர் உரை
(முதல் பதிப்பு) 1996
6. தொல்காப்பியப் பூங்கா 2003

கலைஞர் கடிதங்கள் 

1. கலைஞர் கடிதம் தொகுதி -1 1986
2. கலைஞர் கடிதம் தொகுதி -2 1986
3. கலைஞர் கடிதம் தொகுதி -3 1986
4. கலைஞர் கடிதம் தொகுதி -4 1986
5. கலைஞர் கடிதம் தொகுதி -5 1986
6. கலைஞர் கடிதம் தொகுதி -6 1986
7. கலைஞர் கடிதம் தொகுதி -7 1986
8. கலைஞர் கடிதம் தொகுதி -8 1986
9. கலைஞர் கடிதம் தொகுதி -9 1986
10. கலைஞர் கடிதம் தொகுதி -10 1986
11. கலைஞர் கடிதம் தொகுதி -11 1996
12. கலைஞர் கடிதம் தொகுதி -12 1996

கவிதைகள்

1. கவிதையல்ல 1945
2. முத்தாரம்
(சிறையில் எழுதிய
கவி வசனங்கள் தொகுப்பு)
3. அண்ணா கவியரங்கம் 1968
4. Pearls (Translation) 1970
5. கவியரங்கில் கலைஞர் 1971
6. கலைஞரின் கவிதைகள் 1977
7.வாழ்வெனும் பாதையில்,
கவியரங்கக் கவிதை
8. கலைஞரின் திரை இசைப்பாடல்கள் 1989
9. கலைஞரின் கவிதை மழை 2004

கட்டுரை நூல்கள்

1. உணர்ச்சி மாலை 1951
2. பெருமூச்சு 1952
3. விடுதலைக்கிளர்ச்சி
(இரண்டாம் பதிப்பு) 1952
4. களத்தில் கருணாநிதி 1952
5. பேசும் கலை வளர்ப்போம் 1981
6. பூந்தோட்டமும் – இனமுழக்கமும் 1986
7. யாரால்? யாரால்? யாரால்?
(முதல் பதிப்பு) 1981
8. மலரும் நினைவுகள் 1996
9. இலங்கைத் தமிழா, இது கேளாடீநு! 1981
10. திராவிடசம்பத்து 1951
11. தலைதாழாச் சிங்கம் தந்தை பெரியார் 1985
12. உரிமையின் குரலும் – உண்மையின் தெளிவும்
13. இருளும் ஒளியும்
14. சரித்திரத் திருப்பம்
15. உண்மைகளின் வெளிச்சத்தில் 1983
16. மயிலிறகு 1993
17. அகிம்சா மூர்த்திகள் 1953
18. அல்லி தர்பார் 1953
19. இன முழக்கம்
20. உணர்ச்சி மாலை
21. கருணாநிதியின் வர்ணனைகள் 1952
22. சுழல் விளக்கு 1952
23. துடிக்கும் இளமை

சிறுகதைகள்

1. சங்கிலிச் சாமியார் 1945
2. கிழவன் கனவு 1948
3. பிள்ளையோ பிள்ளை 1948
4. தப்பிவிட்டார்கள் 1952
5. தாய்மை 1956
6. கண்ணடக்கம் 1957
7. நாடும் நாடகமும் 1953
நாடும் நாடகமும் 1968
8. முடியாத தொடர்கதை 1982
9. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
1977, 1982
10. கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்
(நான்காம் பதிப்பு) 1991
11. 16 – கதையினிலே 1995
12. நளாயினி
13. பழக்கூடை 1979
14. வாழ முடியாதவர்கள்
15. தேனலைகள் 1985
16. ஒருமரம் பூத்தது, சிறுகதைகள், 1979
24. நாடும் நாடகமும் 1953
25. விடுதலைக் கிளர்ச்சி 1952

வரலாறு, தன் வரலாறு

1. இனியவை இருபது (முதல் பதிப்பு) 1973
2. இந்தியாவில் ஒரு தீவு 1978
3. ஆறுமாதக் கடுங்காவல் 1985
4. நெஞ்சுக்கு நீதி (முதல் பாகம்)
முதல் பதிப்பு 1975
5. நெஞ்சுக்கு நீதி (இரண்டாம் பாகம்)
முதல் பதிப்பு 1987
6. நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம் –
முதல் பதிப்பு) 1997
7. நெஞ்சுக்கு நீதி (நான்காம் பாகம்)
முதல் பதிப்பு 2003
8. நெஞ்சுக்கு நீதி (ஐந்தாம் பாகம்)
முதல் பதிப்பு ஜூன் 2013
9. நெஞ்சுக்கு நீதி (ஆறாம் பாகம்)
முதல் பதிப்பு அக்டோபர் 2013
10. கையில் அள்ளிய கடல்
(பேட்டிகளின் தொகுப்பு) 1998

பொன்மொழிகள் சிந்தனைக் கருத்துகள்

1. சிறையில் பூத்த சின்ன சின்ன மலர்கள்
( முதல் பதிப்பு) 1978
2. வைரமணிகள் (இரண்டாம் பதிப்பு) 1982
3. கலைஞரின் சிந்தனைச் சிதறல்கள் 1996
4. கலைஞரின் நவமணிகள் 1984
5. சிந்தனை ஆழி 1953
6. கருணாநிதியின் கருத்துரைகள்
(முதல் தொகுப்பு) 1967
7. கலைஞரின் கருத்துரைகள் 1971
8. கலைஞரின் உவமைக் களஞ்சியம் 1978
9. கலைஞரின் சொல்நயம் 1984
10. கலைஞரின் சின்ன சின்ன மலர்கள்
முதல் பதிப்பு 1994
11. கலைஞரின் முத்தமிழ் – சிந்தனைத்துளிகள்
12. கலைஞர் உரையில் கண்டெடுத்த முத்துக்கள்
13. கலைஞரின் உவமை நயங்கள் 1972

நாடக உலகம் (எழுதியும் நடிக்கவும் பெற்றவை)

1. சாந்தா (அ) பழனியப்பன்
(நான்காம் பதிப்பு) 1943
(நச்சுக்கோப்பை) 1985
2. மகான் பெற்ற மகன் (அம்மையப்பன்) 1953
3. மணிமகுடம் (இரண்டாம் பதிப்பு) 1956
4. தூக்கு மேடை 1951
5. உதயசூரியன் (இரண்டாவது பதிப்பு) 1959
6. ஒரே முத்தம் (இரண்டாவது பதிப்பு) 1964
7. திருவாளர் தேசியம்பிள்ளை
(இரண்டாவது பதிப்பு)1967
8. சிலப்பதிகார நாடகக் காப்பியம் 1967
9. பரதாயணம் 1978
10. புனித இராஜ்யம் 1979
11. நான்மணிமாலை (குறு நாடகங்கள்)
12. காகிதப்பூ 1966
13. பரப்பிரம்மம் 1953
14. நானே அறிவாளி 1971
15. அனார்கலி 1967
16. சாக்ரடீஸ் 1967
17. உன்னைத்தான் தம்பி
18. சேரன் செங்குட்டுவன் 1978

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

1.கலைஞரின் சட்டமன்ற உரைகள் – 1
2. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -2
3. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -3
4. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -4
5. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -5
6. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -6
7. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -7
8. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -8
9. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -9
10. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -10
11. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -11
12. கலைஞரின் சட்டமன்ற உரைகள் -12

திரையுலகப் படைப்பில் பங்களிப்பு

1. ராஜகுமாரி (வசனம்) 11.4.1946
2. அபிமன்யூ (வசனம்) 6.5.1948
3. மருதநாட்டு இளவரசி (கதை, வசனம்) 2.4.1950)
4. மந்திரி குமாரி (கதை, வசனம், பாடல்) 24.6.1950
5. தேவகி(கதை, வசனம்) 21.6.1951
6. மணமகள் ( திரைகதை, வசனம்) 15.8.1951
7. பராசக்தி (திரைக்கதை, வசனம், பாடல்) 17.10.1952
8. பணம் (திரைக்கதை, வசனம்) 27.12.1952
9. நாம் (கதை வசனம்) 05.03.1953
10. திரும்பிப் பார் (கதை, வசனம் ) 10.7.1953
11. மனோகரா (திரைக்கதை, வசனம்) 03.3.1954
12. மலைக்கள்ளன் (திரைக்கதை, வசனம்) 22.7.1954
13. அம்மையப்பன் (கதை, வசனம்) 24.9.1954
14. ராஜா ராணி (கதை, வசனம்) 25.2.1956
15. ரங்கோன்ராதா
(திரைக்கதை, வசனம், பாடல்) 1.11.1956
16. புதையல் ( கதை வசனம்) 16.5.1957
17. புதுமைப்பித்தன் (கதை, வசனம்) 2.8.1957
18. குறவஞ்சி (கதை, வசனம், பாடல்) 4.3.1960
19. எல்லாரும் இந்நாட்டு மன்னர் (வசனம்)1.7.1960
20. அரசிளங்குமரி (கதை, வசனம்) 1.1.1961
21. தாயில்லாப் பிள்ளை
(திரைக்கதை, வசனம்) 18.8.1961
22. இருவர் உள்ளம்
(திரைக்கதை, வசனம்) 29.3.1963
23. காஞ்சித் தலைவன்
(கதை, வசனம், பாடல்) 26.10.1963
25. பூம்புகார்
(திரைக்கதை, வசனம், பாடல்) 18.9.1964
26. பூமாலை (கதை, வசனம், பாடல்)23.10.1965
27. அவன் பித்தனா?
(திரைக்கதை, வசனம், பாடல்)12.8.1966
28. மறக்க முடியுமா
(திரைக்கதை, வசனம், பாடல்) 12.8.1966
29. மணிமகுடம்(கதை, வசனம்) 9.12.1966
30. தங்கத்தம்பி (கதை, வசனம்) 9.1.1967
31. வாலிப விருந்து (கதை, வசனம்) 2.6.1967
32. எங்கள் தங்கம் (கதை) 9.10.1970
33. பிள்ளையோ பிள்ளை
(கதை, வசனம்) 23.6.1972
33. அணையாவிளக்கு ( கதை) 15.8.1975
34. வண்டிக்காரன் மகன்
(திரைக்கதை, வசனம்) 30.10.1978
35. நெஞ்சுக்கு நீதி
(கதை, வசனம், பாடல்) 27.4.1979
36. ஆடு பாம்பே (கதை, வசனம்) 30.6.1979
37. குலக்கொழுந்து (கதை, வசனம்) 23.1.1981
38. மாடிவீட்டு ஏழை (திரைக்கதை, வசனம்)22.8.1981
39. தூக்குமேடை (கதை, வசனம் பாடல்) 28.5.1982
40. காகித ஓடம் (திரைக்கதை, வசனம்) 14.1.1986
41. பாலைவன ரோஜாக்கள்
(திரைக்கதை, வசனம்) 1.11.1986
42. நீதிக்குத் தண்டனை 1.5.1987
43. ஒரே ரத்தம் (கதை, வசனம், பாடல்) 8.5.1987
44 மக்கள் ஆணையிட்டால்
(திரைக்கதை, வசனம், பாடல்) 29.1.1988
45. பாசப்பறவைகள்
(திரைக்கதை, வசனம்) 29.4.1988
46. இது எங்கள் நீதி
(திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
47. பாடாத தேனீக்கள்
(திரைக்கதை, வசனம், பாடல்) 8.11.1988
48. தென்றல் சுடும்
(திரைக்கதை, வசனம்) 10.3.1989
49 பொறுத்தது போதும்
(திரைக்கதை, வசனம்) 15.7.1989
50. நியாயத் தராசு (திரைக்கதை, வசனம்) 11.8.1989
51. பாசமழை (கதை, வசனம்) 28.10.1989
52. காவலுக்குக் கெட்டிக்காரன்
(திரைக்கதை, வசனம்) 14.1.1990
53 . மதுரை மீனாட்சி
(திரைக்கதை, வசனம், பாடல்) 24.2.1993
54. புதிய பராசக்தி (திரைக்கதை, வசனம்) 23.3.1996
55. மண்ணின் மைந்தன்
(திரைக்கதை, வசனம்) 4.3.2005
56 பாசக்கிளிகள்
( திரைக்கதை, வசனம்) 14.1.2006
57. உளியின் ஓசை
(திரைக்கதை, வசனம்) 4.7.2008
58. பெண்சிங்கம்
(திரைக்கதை, வசனம்) 3.6.2010
59. இளைஞன்
(திரைக்கதை, வசனம்)14.1.2011
60. பொன்னர் சங்கர்
(திரைக்கதை, வசனம்) 9.4.2011

பாடல்கள் இடம் பெற்ற படங்கள்

1950 – மந்திரி குமாரி
1952 – பராசக்தி
1953 – நாம்
1954 – அம்மையப்பன்
1956 – ராஜா ராணி
1956 – ரங்கோன் ராதா
1960 – குறவஞ்சி
1963 – காஞ்சித்தலைவன்
1964 – பூம்புகார்
1965 – பூமாலை
1966 – மறக்க முடியுமா ?
1979 – நெஞ்சுக்கு நீதி
1982 – தூக்கு மேடை
1987 – வீரன் வேலுதம்பி
1987 – ஒரே ரத்தம்
1988 – மக்கள் ஆணையிட்டால்
1988 – இது எங்கள் நீதி
1993 – மதுரை மீனாட்சி

தொலைக்காட்சித் தொடர்கள்
தொலைக்காட்சித் தொடராக வெளியான கலைஞரின் நாவல்

1. தென்பாண்டிச் சிங்கம்
2. இராமானுஜர் – மதத்தில் புரட்சி செடீநுத மகான்
(கலைஞர் 92 வயதில் வசனம் எழுதி – கலைஞர்
தொலைக்காட்சியில் வெளியான தொடர்)

குறளோவியம்

அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில், ‘குறளோவியம்’ என்ற தலைப்பில், திருக்குறளுக்கு கலைஞர் எழுதியுள்ள விளக்க உரை, கலைஞர் அவர்களின் முதன்மையான இலக்கியப் பங்களிப்பாகும். திருக்குறளுக்கு உரை எழுதிய பலரும் பெண்ணடிமைத் தனத்தோடு பொருள் விளக்கம் கூறியுள்ள நிலையில், பெண்களை உயர்வாகக் கூறி உரை எழுதியவர் கலைஞர் மட்டுமே.

178 நூல்கள்

‘சங்கத்தமிழ்’, ‘தொல்காப்பிய உரை’, ‘இனியவை இருபது’, ‘மேடையிலே வீசிய மெல்லியப் பூங்காற்று’, ‘மலரும் நினைவுகள்’, ‘கலைஞரின் கவிதை மழை’, ‘இளைய சமுதாயம் எழுகவே’ உட்பட 178 நூல்களை கலைஞர் எழுதியிருக்கிறார்.

ஆய்வுக் கட்டுரைகள் ஏ4 அளவில் 1.5 வரி இடைவெளியில் தமிழ் ஒருங்குறி எழுத்துரு ((Tamil Unicode – Latha Font ) லதா-வில் 11 Point  அளவில் வேர்டு கோப்பில் தட்டச்சு செய்யப்பட்டு, 8 பக்க அளவில் இருக்கவேண்டும்.

மேற்கோள்கள் கட்டுரையின் உள்ளே அடைப்புக்குறிக்குள் கொடுக்கவேண்டும். முன்னுரை / தொடக்கவுரைக்கு முன்

5 வரியில் ஆய்வின் சுருக்கம், ஆய்வில் பின்பற்றப்பட்ட ஆய்வு அணுகுமுறை மற்றும் குறிச்சொற்கள் அமைதல் வேண்டும்.

கருத்தரங்கத்திற்கு அனுப்பப்படும் கட்டுரைகள் வேறு எந்த இதழுக்கும், கருத்தரங்குகளிலும் வெளிவந்தவையாக இருத்தல் கூடாது.

கட்டுரைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் இருக்கலாம்.

அயல்நாட்டு / வெளிமாநிலப் பேராளர்கள் கட்டுரை வாசிக்க இணைய வழியில் கூகுள்மீட் அரங்கு ஏற்பாடுகள் செய்யப்படும்.

பக்க அளவு கருதிப் பதிப்புக்குழுவினால் கட்டுரையின் பொருள் மாறாமல் சுருக்கிக்கொள்ளப்படும்.

கட்டுரைகள் அனைத்தும் ‘மென்தமிழ்’ – மென்பொருள் வழி எழுத்துப்பிழைகள், ஒற்றுப்பிழைகள் நீக்கம் செய்யப்படும்.

வெளியிடுவதற்குத் தகுதியுள்ள கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும்.

கருத்தரங்க ஆய்வுக் கோவை அச்சு வடிவத்தில் கருத்தரங்க நிகழ்வின்போது வெளியிடப்படும். மின்-நூலாக இணையத்திலும் வெளியிடப்படும்.

வேர்டுகோப்பு 11ல் பெறும் வகையில் கட்டுரைகள் மின்னஞ்சல் வழியாக வேர்டு கோப்பில் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

கட்டுரைகள் பெறப்பட்ட விவரங்கள் மின்னஞ்சல் வழியாகவும், பெறப்பட்ட கட்டுரைகளின் விவரங்கள் அங்குசம் இணையத் தளத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும்.

கட்டுரை மற்றும் பேராளர் தொகை ரூ.1000/-,  அயலகப் பேராளர்கள் கட்டணமாக $15 (அமெரிக்க டாலர்) அனுப்பி வைக்க வேண்டிய இறுதி நாள்: 30.11.2024.

கட்டுரைகள் angusamnews@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விருந்தினர்களோடு வரும் பேராளர்களும், குடும்பங்களோடும் வரும் பேராசிரியர்களும் உடன் வருவோர் எண்ணிக்கையைக் கருத்தரங்கக் குழுவிற்குப் பேராளர் படிவம் வழி தெரிவிக்க வேண்டும்.

பதிவு செய்வதற்கு..
பதிவு செய்வதற்கு..

தங்குமிட வசதி : தென்காசியிலிருந்து 4.கி.மீ. தொலைவில் குற்றாலம் பேருந்து நிலையம் அடுத்துள்ள புலிஅருவி அருகில் KR Resorts என்னும் ஓய்வில்லத்தில் குளிர்சாதன வசதியோடு தங்குமிடங்கள் பேராளர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓய்வில்லத்தின் பின்புறம் புலி அருவி உள்ளது. மரங்கள் அடர்ந்த வளாகத்தில் தனியார் அருவி மற்றும் செயற்கை அருவி, நீந்தி மகிழ நீச்சல் குளமும் உள்ளது.

பேராளர்கள் டிசம்பர் 29ஆம் நாள் மாலை 6 மணி முதல் 31ஆம் நாள் 6 மணி வரை ஓய்வில்லத்தில் தங்கிக் கொள்ளலாம். தென்காசியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் கருத்தரங்கம் நடைபெறும் ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை, அறிவியல் கல்லூரி உள்ளது.  தங்குமிடத்திலிருந்து கல்லூரி செல்ல வேன் வசதி செய்யப் பட்டுள்ளது.

அறைகள் பதிவுசெய்துகொள்ள கே.ஆர்.ரிசார்ட் மேலாளர் 63806 78202 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

கட்டணம் செலுத்துவதற்கு
கட்டணம் செலுத்துவதற்கு

அழைப்பிதழ் படிவத்தில் உள்ள QR Code-ஐ Scan  செய்து பேராளர் தொகை மற்றும் நன்கொடைகளை அனுப்பி வைக்கலாம். பேராளர்கள் தங்கள் விவரங்களை கூகுள் படிவம் வழி அனுப்பி வைக்கலாம். கட்டுரை அனுப்பும் பேராளர்களில் வருமான வரி செலுத்துவோர் இருப்பின், கருத்தரங்க நிகழ்வுக்கு நன்கொடைகள் அனுப்பி, அதற்கான இரசீதைப் பெற்றுக்கொண்டு, “Exemption U/S 80G of No. AAHTA6826BF20216 Dated:27.10.2021” இன்படி வரி விலக்கு பெற்றுக் கொள்ளலாம்.

நன்கொடைகள் அனுப்பி வைக்க வேண்டிய வங்கி விவரம் –

ANGUSAM CHARITABLE TRUST Union Bank of India Cantonment Branch – Trichy – Current Account No – 552801010032247 IFSC Code: UBIN0555282

கருத்தரங்க அமைப்புக் குழு புரவலர்கள்

முனைவர் என்.மணிமாறன்

தலைவர், ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை அறிவியல் கல்லூரி.

திருமதி எம்.பத்மாவதி

செயலாளர், ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை அறிவியல் கல்லூரி.

முனைவர் இரா.சங்கர்

முதல்வர், ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை அறிவியல் கல்லூரி.

குறள்மொழி, பொங்கு தமிழ் இளையோர் இயக்கம், திருச்சி.

மிசா தி.சாக்ரடீஸ், சி.பா.ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக் கழகம், திருச்சி.

முனைவர் சு.செயலாபதி, புரட்சி பாவேந்தர் பேரவை, திருச்சி.

கருத்தரங்கத் தலைவர் :

முனைவர் கா.வாசுதேவன் – முதல்வர், தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி.

கருத்தரங்கத் துணைத் தலைவர் :

முனைவர் செ.ராமர் – துணை முதல்வர், ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை அறிவியல் கல்லூரி.

கருத்தரங்கச் செயலாளர் :

முனைவர் ரெ.நல்லமுத்து – தமிழ் உதவிப்பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, திருச்சி.

கருத்தரங்க துணைச் செயலாளர் :

முனைவர் பூங்கொடி – தமிழ்துறைத் தலைவர், ஸ்ரீராம் நல்லமணி யாதவக் கலை அறிவியல் கல்லூரி.

கருத்தரங்கப் பொருளாளர்

முனைவர் ம.இளையராஜா – தமிழ்த்துறைத் தலைவர், அரசுக் கலைக் கல்லூரி, அரியலூர்.

கருத்தரங்க அமைப்பாளர் :

ஜெ.தாவீது ராஜ் – தலைவர், அங்குசம் சமூக அறக்கட்டளை, திருச்சி.

முதன்மை ஒருங்கிணைப்பாளர் –:

முனைவர் பா.வேலம்மாள் – முதல்வர் (ப.நி.) அரசு கலைக் கல்லூரி, கடையநல்லூர்.

துணை ஒருங்கிணைப்பாளர் —-:

முனைவர் தி.நெடுஞ்செழியன் – பேராசிரியர் (ப.நி.) தூய வளனார் கல்லூரி, திருச்சி.

அயலக ஒருங்கிணைப்பாளர் :

முனைவர் உ.பிரபாகரன் – பேராசிரியர் (ப.நி.) தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர். –

ஆய்வாளர்கள் ஒருங்கிணைப்பாளர் :

முனைவர் சீமான் இளையராஜா – உதவிப்பேராசிரியர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

“பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்கள்”
“பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்கள்”

கருத்தரங்க ஆலோசனைக் குழு

முனைவர் அ.கோவிந்தராஜன் – இயக்குநர், கலைஞர் இருக்கை, பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

முனைவர் டி.கே.ஜாஸ்மின் சுதா – தமிழ்த்துறைத் தலைவர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

முனைவர் இளையாப்பிள்ளை – கலைப்புல முதன்மையர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

முனைவர் சு.இராசாராம் – தமிழ்த்துறைத் தலைவர், அழகப்பா பல்கலைக்கழகம்.

முனைவர் போ.சத்தியமூர்த்தி – தலைவர், தமிழியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.

முனைவர் வா.மு.சே.ஆண்டவர் – முதல்வர், கந்தசாமிநாயுடு ஆடவர் கல்லூரி, சென்னை.

முனைவர் இரவிச்சந்திரன் – முதல்வர், உருமு தனலெட்சுமி கல்லூரி, திருச்சி.

முனைவர் மணிமாறன் – முதல்வர், அரசுக் கலை அறிவியல் கல்லூரி, திருச்சுழி.

முதல்வர் கி.சுமதி – அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரி, புதுக்கோட்டை மாவட்டம்.

முனைவர் ஞா.பெஸ்கி – தமிழ்த்துறைத் தலைவர், தூய வளனார் கல்லூரி, திருச்சி.

முனைவர் சு.தமிழ்வேலு -தமிழ்த்துறைத் தலைவர், ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை.

முனைவர் மு. அருணாசலம் – தமிழ் இணைப்பேராசிரியர், தந்தை பெரியார் கலை அறிவியல் கல்லூரி, திருச்சி.

பேராசிரியர் கி.சதீஷ்குமார் – தமிழ்த்துறைத் தலைவர், கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி, திருச்சி.

“பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்கள்”
“பன்முக நோக்கில் கலைஞரின் ஆளுமைத் திறன்கள்”

பதிப்பு ஆலோசனைக் குழு

முனைவர் நாராயண நம்பி – தமிழ் இணைப்பேராசிரியர், தந்தை பெரியார் கலை அறிவியல் கல்லுரி (த) திருச்சி.

முனைவர் அடைக்கலராஜ் – தமிழ் உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, திருச்சி.

முனைவர் அ.மனோகரன் – தமிழ் உதவிப் பேராசிரியர், ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை.

முனைவர் வெற்றிவேலன் – தமிழ் உதவிப் பேராசிரியர், ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை.

திருமதி ரேவதி ஜெடிஆர் – முனைவர் பட்ட ஆய்வாளர், தூய வளனார் கல்லூரி, திருச்சி.

அனைத்து விவரங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களின் புலனத்திற்குத் தொடர்புகொள்ளலாம்

முனைவர் பா.வேலம்மாள் (94435 54964)

முனைவர் தி.நெடுஞ்செழியன் (94432 14142)

Leave A Reply

Your email address will not be published.